473 passages · ~138 min read
Tap any verse to open it — original, meaning & audio.
His fight in Lanka with Ravaṇan
Killing Sakaṭasuran who came in the form of a cart,
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினிற் புகுதலொட்டோம் ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை பாழாள் ஆகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே (2)
Killing Kalingan the snake.
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய என்று பாடு மனம் உடைப் பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே (3)
Stopping the storm with Govardana mountain.
அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் தனக்கு தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது ஆயிர நாமம் சொல்லிப் பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல் லாயிரத்தாண்டு என்மினே (4)
Killing Hiranyan.
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு வோணத் திருவிழவில் அந்தியம் போதில் அரியுரு ஆகி அரியை அழித்தவனைப் பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு என்று பாடுதுமே (5)
Killing Kamsan, his uncle.
தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம் மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழி குருதி பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே (6)
Taking the female form of Mohini to help to gods to receive nectar.
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும் கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும் மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே (7)
Killing the Asuran Kesi who come in the form of a horse.
உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்து கலத்தது உண்டு தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம் விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு வோணத் திருவிழவில் படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே (8)
Splitting open the mouth of the Asuran who came in the form of a heron..
எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடி யோம் என்று எழுத்துப்பட்ட அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண் செந்நாள் தோற்றித் திரு மதுரையிற் சிலை குனித்து ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே (9)
Killing the two Asurans who came in the form of marudam trees.
அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் அபிமானதுங்கன் செல்வனைப் போல திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன் நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவி பல் வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே (10)
Killing an Asuran by throwing a calf.
பல்லாண்டு என்று பவித்திரனைப் பர மேட்டியைச் சார்ங்கம் என்னும் வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல் நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணாய என்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே (11) ----------- கண்ணன் திருவவதாரம்
Killing the evil elephant Kuvalayabeeḍam.
வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்க் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக் கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே (1)
Saving the elephant Gajendra and killing the crocodile that came to kill the elephant.
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார் நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார் பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே (2)
Killing seven bulls for Nappinnai so he could marry her.
பேணிச் சீர் உடைப் பிள்ளை பிறந்தினில் காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார் ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண் திரு- வோணத்தான் உலகு ஆளும் என்பார்களே (3)
Hurting Sukrachariyaar and Namusi in the sacrifice of Mahabali.
உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார் நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார் செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும் அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே (4)
Helping Arjuna in the Bharatha war.
கொண்ட தாள் உறி கோலக் கொடுமழுத் தண்டினர் பறியோலைச் சயனத்தர் விண்ட முல்லையரும்பு அன்ன பல்லினர் அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார் (5)
Bringing the earth goddess from the underground.
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர் பைய ஆட்டிப் பசுஞ் சிறு மஞ்சளால் ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே (6)
Straightening the hunch back of the kuni, the servant of a king.
வாயுள் வையகம் கண்ட மடநல்லார் ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம் பாய சீர் உடைப் பண்பு உடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே (7)
Removing Shiva’s curse and helping to make the head of Brahma fall.
பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள் எத் திசையும் சயமரம் கோடித்து மத்த மா மலை தாங்கிய மைந்தனை உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே (8)
Saving Draupathi in Duriyodana’s assembly.
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும் ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும் மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய (9)
Killing Vali.
செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இப் பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே (10) ---------- கண்ணனது திருமேனியழகு
Killing Thadagai.
சீதக் கடலுள் அமுது அன்ன தேவகி கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே (1)
Killing Baṇasuran.
முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும் தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல் எங்கும் பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள் ஒத்திட்டு இருந்தவா காணீரே ஒண்ணுதலீர் வந்து காணீரே (2)
Killing Puthana I would like to thank Mr. Venkataraghavan for putting the Divyaprabandham in Tamil on the internet (h…
பணைத்தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை அணைத்து ஆர உண்டு கிடந்த இப் பிள்ளை இணைக்காலில் வெள்ளித் தளை நின்று இலங்கும் கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே (3)
Come and see the child’s ankles that are decorated with shining silver ornaments as he drinks milk from Yashoda’s bre…
உழந்தாள் நறுநெய் ஒரோர் தடா உண்ண இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின் பழந்தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்தான் முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ்முலையீர் வந்து காணீரே (4)
See the knees of the child who ate fragrant ghee from all the pots that Yashoda had filled doing hard work, and when …
பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான் குறங்குகளை வந்து காணீரே குவிமுலையீர் வந்து காணீரே (5)
After drinking the milk from the breasts of the cruel devil Putanā and killing her, he rested on his snake bed Adises…
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடைச் சித்தம் பிரியாத தேவகிதன் வயிற்றில் அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன் முத்தம் இருந்தவா காணீரே முகிழ்நகையீர் வந்து காணீரே (6)
Come, see the mutham of our dear child who was born ten days after the star Astham from the womb of Devaki the belove…
இருங்கை மதகளிறு ஈர்க்கின்றவனைப் பருங்கிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன் நெருங்கு பவளமும் நேர்நாணும் முத்தும் மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்து காணீரே (7)
O girls with shining foreheads, come and see the waist adorned with strings of coral and beautiful pearls of the high…
வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து தந்தக் களிறு போல் தானே விளையாடும் நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய உந்தி இருந்தவா காணீரே ஒளியிழையீர் வந்து காணீரே (8)
O girls, adorned with shining ornament, come and see the lovely navel of the cowherd chief Nandan’s son strong as a w…
அதிருங் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி மதுரமுலை ஊட்டி வஞ்சித்து வைத்துப் பதறப் படாமே பழந் தாம்பால் ஆர்த்த உதரம் இருந்தவா காணீரே ஒளிவளையீர் வந்து காணீரே (9)
The cowherdess Yashoda fed him sweet milk from her breasts and tricked him and tied him up with an old rope without w…
பெரு மா உரலிற் பிணிப்புண்டு இருந்து அங்கு இரு மா மருதம் இறுத்த இப் பிள்ளை குரு மா மணிப்பூண் குலாவித் திகழும் திருமார்வு இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே (10)
Come and see his chest ornamented with the shining Kaustubham ornament studded with large diamonds. He pulled the hug…
நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய் வாள் கொள் வளைஎயிற்று ஆருயிர் வவ்வினான் தோள்கள் இருந்தவா காணீரே சுரிகுழலீர் வந்து காணீரே (11)
Come and see the arms of the small child who kicked and took the precious life of Sakaṭāsuran when he came in the for…
மைத் தடங்கண்ணி யசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் வந்து காணீரே கனங்குழையீர் வந்து காணீரே (12)
He carries in his hands a conch and a discus smeared with oil. Come and see the hands of the dark blue-colored child …
வண்டு அமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக் கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே (13)
Come and see the neck of the small cowherd child being raised by Yashoda whose lovely hair is adorned with flowers sw…
எம் தொண்டை வாய்ச் சிங்கம் வா என்று எடுத்துக்கொண்டு அந் தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர் தம் தொண்டை வாயால் தருக்கிப் பருகும் இச் செந் தொண்டை வாய் வந்து காணீரே சேயிழையீர் வந்து காணீரே (14)
The cowherd women with their mouths red as thoṇḍai fruits kiss his red mouth, drink its nectar, and embrace him, sayi…
நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால் நாக்கு வழித்து நீராட்டும் இந் நம்பிக்கு வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா காணீரே மொய்குழலீர் வந்து காணீரே (15)
Come and see the tongue of the child, that Yashoda lovingly cleans with turmeric powder when she bathes him. Come and…
விண் கொள் அமரர்கள் வேதனை தீர முன் மண் கொள் வசுதேவர்தம் மகனாய் வந்து திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான் கண்கள் இருந்தவா காணீரே கனவளையீர் வந்து காணீரே (16)
Come and see the eyes of the lord, born as the son of Vasudevan to destroy the mighty Asurans and remove the sufferin…
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்யத் திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஒளி மணிவண்ணன் புருவம் இருந்தவா காணீரே பூண்முலையீர் வந்து காணீரே (17)
He with eyebrows shining like jewels was born to save the world to Devaki, beautiful as Lakshmi. She gave birth to hi…
மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும் உண்ணுந் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு வண்ணம் எழில்கொள் மகரக்குழை இவை திண்ணம் இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே (18)
Come and see the beautiful emerald earrings of the lord who happily swallowed the earth, hills, oceans and all the se…
முற்றிலும் தூதையும் முன்கைமேல் பூவையும் சிற்றில் இழைத்துத் திரிதருவோர்களைப் பற்றிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன் நெற்றி இருந்தவா காணீரே நேரிழையீர் வந்து காணீரே (19)
When small girls carrying a winnowing fan and a small pot wander holding a puvai bird on their wrists and make play h…
அழகிய பைம்பொன்னின் கோல் அங்கைக் கொண்டு கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப மழ கன்றினங்கள் மறித்துத் திரிவான் குழல்கள் இருந்தவா காணீரே குவிமுலையீர் வந்து காணீரே (20)
Carrying a beautiful golden stick in his hands he runs behind baby calves as the lovely sound of his anklets spreads …
சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன திருப் பாதகேசத்தைத் தென்புதுவைப் பட்டன் விருப்பால் உரைத்த இருபதோடு ஒன்றும் உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றியிருப்பரே (21) -------- தாலப் பருவம்
The poet Puduvaippaṭṭan of southern Puduvai composed pāsurams using the words of Yashoda with dark curly hair as she …
மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ (1)
O lord! Nanmuhan made a beautiful golden cradle studded with rubies and diamonds and sent it to you with his love. Th…
உடையார் கனமணியோடு ஒண் மாதுளம்பூ இடை விரவிக் கோத்த எழிற் தெழ்கினோடும் விடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான் உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ (2)
O lord, you hold all lives within you. Kabali, Shiva the bull-rider sent you a golden ornament studded with precious …
என்தம்பிரானார் எழிற் திருமார்வற்குச் சந்தம் அழகிய தாமரைத் தாளற்கு இந்திரன் தானும் எழில் உடைக் கிண்கிணி தந்து உவனாய் நின்றான் தாலேலோ தாமரைக் கண்ணனே தாலேலோ (3)
O dear lord with the goddess Lakshmi on your handsome chest, the king of the gods Indra brought musical anklets for y…
சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும் அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் செங்கண் கருமுகிலே தாலேலோ தேவகி சிங்கமே தாலேலோ (4)
The gods in the sky came and gave a valampuri conch, musical kolusu for your divine feet, round bangles for your beau…
எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு வழு இல் கொடையான் வயிச்சிரவணன் தொழுது உவனாய் நின்றான் தாலேலோ தூமணி வண்ணனே தாலேலோ (5)
The god Vaishravanan, Kuberan, generous to all without discriminating, thought that a beautiful aimbaḍaithali and a n…
ஓதக் கடலின் ஒளிமுத்தின் ஆரமும் சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும் மா தக்க என்று வருணன் விடுதந்தான் சோதிச் சுடர் முடியாய் தாலேலோ சுந்தரத் தோளனே தாலேலோ (6)
Varuṇan thought that a necklace made of shining pearls born in a roaring ocean, precious high quality coral, and bang…
கான் ஆர் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும் வான் ஆர் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும் தேன் ஆர் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள் கோனே அழேல் அழேல் தாலேலோ குடந்தைக் கிடந்தானே தாலேலோ (7)
The divine Lakshmi seated on a lotus that drips honey sent you a garland of forest thulasi and a garland of karpaga f…
கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள் நச்சுமுலை உண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ (8)
O Achuda! The earth goddess sent a dress, a small golden sword with a handle, golden bangles, a diamond ornament for …
மெய் திமிரும் நானப் பொடியொடு மஞ்சளும் செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள் ஐயா அழேல் அழேல் தாலேலோ அரங்கத்து அணையானே தாலேலோ (9)
Durga, the goddess who rides on a heroic deer sent you fragrant powder to put on your body, turmeric for your bath, k…
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல் எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே (10) ------------- அம்புலிப் பருவம்
The Paṭṭan of Puduvai composed lullaby songs that Yashoda sang for kohl-colored Kaṇṇan who drank milk from the breast…
தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப் பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான் என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ நின்முகம் கண்ணுள ஆகில் நீ இங்கே நோக்கிப் போ (1)
As he crawls and plays in the sand making himself dirty, the chuṭṭi ornament on his forehead swings around and the go…
என் சிறுக்குட்டன் எனக்கு ஒர் இன்னமுது எம்பிரான் தன் சிறுக்கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான் அஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல் மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா (2)
My small dear child, sweet as nectar, calls you with his small hands, pointing to you again and again. If you really …
சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும் எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய் வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற கைத்தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா (3)
Even though you are surrounded by a shining wheel of light and you spread light everywhere, whatever you do, you cann…
சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து ஒக்கலைமேல் இருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண் தக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே மக்கட் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய் (4)
As I hold him on my waist, my son opens his flower-like eyes wide and calls you as he points to you with his sweet fi…
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுற மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூகின்றான் குழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியேல் புழையில ஆகாதே நின்செவி புகர் மா மதீ (5)
He calls you loudly with his prattling words that come from his beautiful nectar-filled mouth. You move and don’t sto…
தண்டொடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக்கையன் கண் துயில்கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான் உண்ட முலைப்பால் அறா கண்டாய் உறங் காவிடில் விண்தனில் மன்னிய மா மதீ விரைந்து ஓடி வா (6)
Our dear lord with a club, a discus and a conch in his strong hands wants to rest and yawns. If he doesn’t rest, he c…
பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஓர் நாள் ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன் மேல் எழப் பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல் மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா (7)
Don’t ignore him thinking he is just a little boy. He slept on a banyan leaf in the ancient time, and if he gets mad …
சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்று கேள் சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண் நிறைமதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூகின்றான் (8)
Don’t ignore him thinking that he is a small child. See, he is like a young lion. Go and ask the king Mahābali about …
தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் உன்னைக் கூகின்றான் ஆழிகொண்டு உன்னை எறியும் ஐயுறவு இல்லை காண் வாழ உறுதியேல் மா மதீ மகிழ்ந்து ஓடி வா (9)
He took a lot of butter from the pots with his small hands and swallowed as much as he wanted and his stomach is full…
மைத்தடங் கண்ணி யசோதை தன்மகனுக்கு இவை ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளிபுத்தூர் வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடர் இல்லையே (10) ------------ செங்கீரைப் பருவம்
Vishṇuchithan, the poet from flourishing Villiputhur composed these Tamil pāsurams that describe how Yashoda whose la…
உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல் பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக ஐய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (1)
You, the highest one, the creator of the world swallowed it into your beautiful stomach rest gently on a banyan leave…
கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய் மீள அவன்மகனை மெய்ம்மை கொளக் கருதி மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வரக் காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக் கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே ஆள எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (2)
You wanted to prove what Hiraṇyan’s son Prahalādan said was true and took the form of a man-lion and split Hiraṇyan’s…
நம்முடை நாயகனே நான்மறையின் பொருளே நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால் தம்மனை ஆனவனே தரணி தலமுழுதும் தாரகையின் உலகும் தடவி அதன் புறமும் விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ் விடையும் விரவிய வேலைதனுள் வென்று வருமவனே அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (3)
You, our chief, the meaning of all the four Vedas and the mother of Nānmuhan sitting on a beautiful lotus on your nav…
வானவர்தாம் மகிழ வன் சகடம் உருள வஞ்ச முலைப்பேயின் நஞ்சம் அது உண்டவனே கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக் கன்று அது கொண்டு எறியும் கருநிற என்கன்றே தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன் என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும் ஆனை எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (4)
You fought with Sakaṭāsuran and killed him as the gods in the sky rejoiced, drank the poison from the breasts of the …
மத்து அளவுந் தயிரும் வார்குழல் நன்மடவார் வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய் முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன்முன் முன்ன முகத்து அணிஆர் மொய்குழல்கள் அலைய அத்த எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (5)
Mighty, you kicked with your legs and fought with your hands the two Asurans when they came as marudam trees and stol…
காய மலர்நிறவா கருமுகில் போல் உருவா கானக மா மடுவிற் காளியன் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர என்சிறுவா துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாளிணையாய் ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (6)
You are colored like a dark kāyām flower or a dark cloud. O my little child, you danced on the snake Kalingan in a de…
துப்பு உடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒருகால் தூய கருங்குழல் நற் தோகைமயில் அனைய நப்பினைதன் திறமா நல் விடை ஏழ் அவிய நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனி ஒரு தேர் கடவித்தாயொடு கூட்டிய என் அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (7)
You listened to the words of the strong cowherds, fought and controlled seven strong bulls and married the dark-haire…
உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும் கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ் சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே (8)
The cowherd women carry you on their waists, take you to their homes, do whatever they like to do with you and loving…
பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே (9)
When you crawl, the fragrance of milk, ghee, yogurt, pure sandalwood, shenbaga flowers, lotuses and good camphor spre…
செங்கமலக் கழலிற் சிற்றிதழ் போல் விரலிற் சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையிற் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும் மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக எங்கள் குடிக்கு அரசே ஆடுக செங்கீரை ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே (10)
The tiny soft petal-like toes of your red lotus feet are adorned with silver rings, your anklets, with kiṇkiṇis, your…
அன்னமும் மின் உருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ் இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார் உலகில் எண்திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே (11) ---------- சப்பாணிப் பருவம்
Beautiful Yashoda, her walk like a swan’s, praised her divine child, saying, “O chief of cowherds, you took the forms…
மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின் மேல் ஆணிப் பொன்னாற் செய்த ஆய்பொன் உடை மணி பேணி பவளவாய் முத்துஇலங்க பண்டு காணி கொண்ட கைகளால் சப்பாணி கருங்குழற் குட்டனே சப்பாணி (1)
As the ruby kiṇgiṇis on your feet jingle, the precious golden chain on your waist sways and the pearl-like teeth in y…
பொன் அரைநாணொடு மாணிக்கக் கிண்கிணி தன் அரை ஆட தனிச் சுட்டி தாழ்ந்து ஆட என் அரை மேல்நின்று இழிந்து உங்கள் ஆயர்தம் மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி (2)
The bells tied on the golden chain on your waist, and the kingini bells decorated with rubies that are tied on your w…
பல் மணி முத்து இன்பவளம் பதித்தன்ன என் மணிவண்ணன் இலங்கு பொற் தோட்டின் மேல் நின் மணிவாய் முத்து இலங்க நின் அம்மைதன் அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழியங் கையனே சப்பாணி (3)
O my sapphire-colored child adorned with shining golden earrings with many diamonds, pearls and precious corals, smil…
தூ நிலாமுற்றத்தே போந்து விளையாட வான் நிலா அம்புலீ சந்திரா வா என்று நீ நிலா நிற் புகழாநின்ற ஆயர்தம் கோ நிலாவ கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே சப்பாணி (4)
Your father, the chief of the cowherds, called the moon, saying, “O bright moon! You crawl in the sky! Come to our po…
புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டுவந்து அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி பற்பநாபா கொட்டாய் சப்பாணி (5)
You filled your hands with mud and dirt from the cowherd village and threw them at me. You entered our house when I w…
தாரித்து நூற்றுவர் தந்தை சொற் கொள்ளாது போர் உய்த்து வந்து புகுந்தவர் மண் ஆளப் பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேர் உய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி (6)
When a hundred Kauravas did not listen to their father’s advice and came to fight with the Paṇḍavas, you became the c…
பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை இரந்திட்ட கைம்மேல் எறிதிரை மோதக் கரந்திட்டு நின்ற கடலைக் கலங்கச் சரந் தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்க விற்கையனே சப்பாணி (7)
When Varuṇan hid and shot his arrows to stop you from building a bridge to Lanka, as Rāma, you shot arrows to calm th…
குரக்கு இனத்தாலே குரைகடல் தன்னை நெருக்கி அணை கட்டி நீள் நீர் இலங்கை அரக்கர் அவிய அடு கணையாலே நெருக்கிய கைகளால் சப்பாணி நேமியங் கையனே சப்பாணி (8)
When you came as Rāma to the earth, the monkeys, your helpers, built a strong bridge on the roaring ocean and you wen…
அளந்து இட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க உருவாய் உளந் தொட்டு இரணியன் ஒண்மார்வு அகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி (9)
You came out of a tall pillar in the form of a huge man-lion when Hiraṇyan broke it and you split open his strong che…
அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி வடம் சுற்றி வாசுகி வன்கயிறு ஆகக் கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார்முகில் வண்ணனே சப்பாணி (10)
When the gods churned the deep milky ocean, you joined them and helped them using the mountain Mandara as a churning …
ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தம் கோவினை நாட்கமழ் பூம்பொழில் வில்லிபுத்தூர்ப் பட்டன் வேட்கையால் சொன்ன சப்பாணி ஈரைந்தும் வேட்கையினால் சொல்லுவார் வினை போதுமே (11) ----------- தளர்நடைப் பருவம்
Vishnu Paṭṭan of Villiputhur that is surrounded by blooming groves that spread fragrance all day composed with love t…
தொடர் சங்கிலிகை சலார்-பிலார் என்னத் தூங்கு பொன்மணி ஒலிப்பப் படு மும்மதப் புனல் சோர வாரணம் பைய நின்று ஊர்வது போல் உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப உடை மணி பறை கறங்க தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி தளர்நடை நடவானோ (1)
Like an elephant with chains on his feet dripping with ichor that walks slowly as his chain makes the noise “chalar, …
செக்கரிடை நுனிக்கொம்பிற் தோன்றும் சிறுபிறை முளைப் போல நக்க செந் துவர்வாய்த் திண்ணை மீதே நளிர் வெண்பல் முளை இலக அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட அனந்தசயனன் தக்க மா மணிவண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ (2)
Won't the sapphire-colored Kaṇṇan, the child of Vasudeva, ornamented with a chain made of shell on his waist and a tu…
மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும் சூழ் பரிவேடமுமாய்ப் பின்னற் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடையொடும் மின்னிற் பொலிந்த ஓர் கார்முகில் போலக் கழுத்தினிற் காறையொடும் தன்னிற் பொலிந்த இருடிகேசன் தளர்நடை நடவானோ (3)
He, Rishikesa, the bright one, wears a chain that shines like lightning, his hair is decorated with an arasilai ornam…
கன்னற் குடம் திறந்தால் ஒத்து ஊறிக் கணகண சிரித்து உவந்து முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில்வண்ணன் திருமார்வன் தன்னைப் பெற்றேற்குத் தன்வாய் அமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான் தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடை நடவானோ (4)
When the dark cloud-colored lord with Lakshmi on his chest laughs with the sound “gaṇa, gaṇa,” it sounds like sugarca…
முன் நல் ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடுமொடு விரைந்து ஓடப் பின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன் பெயர்ந்து அடியிடுவது போல் பன்னி உலகம் பரவி ஓவாப் புகழ்ப் பலதேவன் என்னும் தன் நம்பி ஓடப் பின் கூடச் செல்வான் தளர்நடை நடவானோ (5)
As the little Kaṇṇan runs swiftly behind his elder brother Baladeva who is praised by the whole world, he looks like …
ஒரு காலிற் சங்கு ஒரு காலிற் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்த இரு காலுங் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல் இலச்சினை பட நடந்து பெருகாநின்ற இன்ப-வெள்ளத்தின்மேல் பின்னையும் பெய்து பெய்து தரு கார்க் கடல்வண்ணன் காமர் தாதை தளர்நடை நடவானோ (6)
He has on his right foot the sign of a conch and on his left foot the sign of a wheel and when he walks with his two …
படர் பங்கைய மலர்வாய் நெகிழப் பனி படு சிறுதுளி போல் இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி இற்று இற்று வீழநின்று கடுஞ் சேக் கழுத்தின் மணிக்குரல் போல் உடை மணி கணகணென தடந் தாளிணை கொண்டு சாரங்கபாணி தளர்நடை நடவானோ (7)
He walks as the saliva from his red lotus mouth continually drips slowly like small cool drops of dew. The bells that…
பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே அருவிகள் பகர்ந்தனைய அக்குவடம் இழிந்து ஏறித் தாழ அணி அல்குல் புடை பெயர மக்கள் உலகினிற் பெய்து அறியா மணிக் குழவி உருவின் தக்க மா மணிவண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ (8)
When Vasudevan, the sapphire-colored lord came to the world in the form of a child, people had never seen such a marv…
வெண் புழுதி மேற் பெய்துகொண்டு அளைந்தது ஓர் வேழத்தின் கருங்கன்று போல் தெண் புழுதியாடி திரிவிக்கிரமன் சிறு புகர்பட வியர்த்து ஒண் போது அலர்கமலச் சிறுக்கால் உறைத்து ஒன்றும் நோவாமே தண் போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ (9)
Thrivikraman plays throwing mud on himself like a dark elephant calf playing in the sand and throwing white dirt on h…
திரை நீர்ச் சந்திர மண்டலம் போலச் செங்கண்மால் கேசவன் தன் திரு நீர் முகத்துத் துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர பெரு நீர்த் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம் தரு நீர்ச் சிறுச்சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ (10)
When Kesavan with beautiful eyes that shine on his moon-like face toddles, his chuṭṭi ornament glitters and swings li…
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சனவண்ணன் தன்னைத் தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால் விரித்தன உரைக்கவல்லார் மாயன் மணிவண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே (11) ------------- அச்சோப் பருவம்
The famous poet Vishṇuchithan of the Veyar clan described how the dark-colored lord born in the cowherd tribe toddled…
பொன் இயல் கிண்கிணி சுட்டி புறங் கட்டித் தன் இயல் ஓசை சலன்-சலன் என்றிட மின் இயல் மேகம் விரைந்து எதிர் வந்தாற்போல் என் இடைக்கு ஓட்டரா அச்சோ அச்சோ எம்பெருமான் வாராய் அச்சோ அச்சோ (1)
O dear one, you run fast and come in front of me like a cloud filled with lightning as the golden kiṇginis that adorn…
செங்கமலப் பூவிற் தேன் உண்ணும் வண்டே போல் பங்கிகள் வந்து உன் பவளவாய் மொய்ப்ப சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ (2)
As your dark hair falls on your coral mouth it looks as if bees were coming to drink nectar on a red lotus. Come and …
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த அஞ்சனவண்ணனே அச்சோ அச்சோ ஆயர் பெருமானே அச்சோ அச்சோ (3)
O dear one, you went as a messenger for the Paṇḍavas and fought for them in the Bharatha war, entered the pond where …
நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத் தேறி அவளும் திருவுடம்பிற் பூச ஊறிய கூனினை உள்ளே ஒடுங்க அன்று ஏற உருவினாய் அச்சோ அச்சோ எம்பெருமான் வாராய் அச்சோ அச்சோ (4)
When you asked a hunch-backed woman, a servant of king Kamsan, to give you the fragrant sandal paste that she was car…
கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும் சுழலை பெரிது உடைத் துச்சோதனனை அழல விழித்தானே அச்சோ அச்சோ ஆழி அங் கையனே அச்சோ அச்சோ (5)
You carry a discus in your hands. When you went to Duryodhana’s assembly, he, surrounded with heroic ankleted kings, …
போர் ஒக்கப் பண்ணி இப் பூமிப்பொறை தீர்ப்பான் தேர் ஒக்க ஊர்ந்தாய் செழுந்தார் விசயற்காய் கார் ஒக்கு மேனிக் கரும் பெருங் கண்ணனே ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ ஆயர்கள் போரேறே அச்சோ அச்சோ (6)
You with big and dark eyes and a body as dark as a cloud became the charioteer for Arjuna adorned with beautiful garl…
மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியிற் தக்கது இது அன்று என்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பாற் கிளறிய சக்கரக் கையனே அச்சோ அச்சோ சங்கம் இடத்தானே அச்சோ அச்சோ (7)
When the rishi Sukrachariyar said it was not good to give the boons that the dwarf asked and wished to stop the sacri…
என் இது மாயம்? என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன மன்னு நமுசியை வானிற் சுழற்றிய மின்னு முடியனே அச்சோ அச்சோ வேங்கடவாணனே அச்சோ அச்சோ (8)
You became angry when Namusi the son of Mahābali said, “What is this magic? When you asked for land from my father, y…
கண்ட கடலும் மலையும் உலகு ஏழும் முண்டத்துக்கு ஆற்றா முகில்வண்ணா ஓ என்று இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள மண்டை நிறைத்தானே அச்சோ அச்சோ மார்வில் மறுவனே அச்சோ அச்சோ (9)
When Nānmuhan’s head was stuck to Shiva’s palm because of a curse, Shiva, with matted hair, came and begged you, sayi…
துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட மன்னிய நான்மறை முற்றும் மறைந்திடப் பின் இவ் உலகினில் பேரிருள் நீங்க அன்று அன்னமது ஆனானே அச்சோ அச்சோ அருமறை தந்தானே அச்சோ அச்சோ (10)
Once when thick darkness covered the world and all the four omnipresent Vedas disappeared, you became a swan and remo…
நச்சுவார் முன் நிற்கும் நாராயணன் தன்னை அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன மச்சு அணி மாடப் புதுவைக்கோன் பட்டன் சொல் நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வரே (11) -------- புறம் புல்கல்
நச்சுவார் முன் நிற்கும் நாராயணன் தன்னை அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன மச்சு அணி மாடப் புதுவைக்கோன் பட்டன் சொல் நிச்…
வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க- மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தே போல் சொட்டுச் சொட்டு என்னத் துளிக்கத் துளிக்க என் குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான் (1)
My little child comes and embraces me from behind as his ornaments make the sound “choṭṭu, choṭṭu,” sounding like pea…
கிண்கிணி கட்டிக் கிறி கட்டிக் கையினிற் கங்கணம் இட்டுக் கழுத்திற் தொடர் கட்டித் தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து என் கண்ணன் என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான் (2)
My dear child Kaṇṇan, his feet adorned with kingiṇi bells, his hands with coral bracelets and his neck with a chain d…
கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம் ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாது மண் ஆள்வான் கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான் ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான் (3)
The highest lord was born to destroy the clan of the evil king Duryodhana who kept his abundant wealth and lands for …
நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி தரணியில் வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண்தேர் ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான் (4)
When Arjuna worshiped Kaṇṇan, the king of the gods, and asked for help saying, “O lord with the sword Nāndagam, you a…
வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடிக் கண் பல பெய்த கருந்தழைக் காவின் கீழ்ப் பண் பல பாடிப் பல்லாண்டு இசைப்ப பண்டு மண் பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னைப் புறம்புல்குவான் (5)
He took the form of Vāmanan, carried a brass pot and an umbrella, sang songs under flourishing groves, played, and we…
சத்திரம் ஏந்தித் தனி ஒரு மாணியாய் உத்தர வேதியில் நின்ற ஒருவனைக் கத்திரியர் காணக் காணி முற்றும் கொண்ட பத்திராகாரன் புறம்புல்குவான் பார் அளந்தான் என் புறம்புல்குவான் (6)
He took the form of a handsome dwarf bachelor, and, carrying an umbrella, went to king Māhabali’s sacrifice, asked fo…
பொத்த உரலைக் கவிழ்த்து அதன்மேல் ஏறி தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான் (7)
Our lord as a sweet child turned over the wide-mouthed mortar, climbed on it and stole the sweet milk and butter from…
மூத்தவை காண முது மணற்குன்று ஏறிக் கூத்து உவந்து ஆடிக் குழலால் இசை பாடி வாய்த்த மறையோர் வணங்க இமையவர் ஏத்த வந்து என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான் (8)
The lord climbed on a sand hillock, played his flute and danced a village dance as the old cowherds of the village lo…
கற்பகக் காவு கருதிய காதலிக்கு இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில் நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான் (9)
The lord promised his beloved wife that he would bring the Kalpaka plant from Indra’s world, went there and brought i…
ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம்புல்கிய வேய்த் தடந்தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து ஈத்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லவர் வாய்த்த நன்மக்களைப் பெற்று மகிழ்வரே (10) ------- கண்ணன் அப்பூச்சி காட்டுதல்
Yashoda, the cowherdess with round bamboo-like arms, described how the lord with a discus embraced her from behind wh…
மெச்சு ஊது சங்கம் இடத்தான் நல் வேய் ஊதி பொய்ச் சூதிற் தோற்ற பொறை உடை மன்னர்க்காய் பத்து ஊர் பெறாது அன்று பாரதம் கைசெய்த அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (1)
The lord with a conch in his left hand that sounds in victory and plays delightful music on his flute went as a messe…
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன் சிலை வளையத் திண்தேர்மேல் முன்நின்ற செங்கண் அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (2)
The lord with beautiful eyes who gives his grace to all his devotees, stood with Arjuna on a strong chariot in the Bh…
காயும் நீர் புக்குக் கடம்பு ஏறி காளியன் தீய பணத்திற் சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (3)
Our lord, the clever one, the cowherd, plays beautiful music on his flute, climbed on a Kaḍamba tree, jumped from it …
இருட்டிற் பிறந்து போய் ஏழை வல் ஆயர் மருட்டைத் தவிர்ப்பித்து வன் கஞ்சன் மாளப் புரட்டி அந்நாள் எங்கள் பூம்பட்டுக் கொண்ட அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (4)
The lord Kaṇṇan was born in the night, raised in a poor cowherd village killed the evil king Kamsan, and took away th…
சேப் பூண்ட சாடு சிதறித் திருடி நெய்க்கு ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால் சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க அன்று ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (5)
He killed Sakaṭāsuran when the Asuran came as a cart yoked to bulls. The dear child was pulled with a rope used to ch…
செப்பு இள மென்முலைத் தேவகி நங்கைக்குச் சொப்படத் தோன்றி தொறுப்பாடியோம் வைத்த துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (6)
The dear child of Devaki with young soft breasts like cheppu stole and swallowed ghee, milk and yogurt that we, the c…
தத்துக் கொண்டாள் கொலோ? தானே பெற்றாள் கொலோ? சித்தம் அனையாள் அசோதை இளஞ்சிங்கம் கொத்து ஆர் கருங்குழற் கோபால கோளரி அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (7)
Did Yashoda adopt this child or did she give birth to him? She loves him no matter what. That dark-haired child, deco…
கொங்கை வன் கூனிசொற் கொண்டு குவலயத் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கு அருளி வன்கான் அடை அங் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (8)
As Rāma our lord obeyed his stepmother after she heard the words of cruel Manthara, gave away his precious elephants,…
பதக முதலைவாய்ப் பட்ட களிறு கதறிக் கைகூப்பி என் கண்ணா கண்ணா என்ன உதவப் புள் ஊர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (9)
The majestic lord came riding his eagle and saved the elephant Gajendra when. caught by a terrible crocodile, he crie…
வல்லாள் இலங்கை மலங்கச் சரந் துரந்த வில்லாளனை விட்டுசித்தன் விரித்த சொல் ஆர்ந்த அப்பூச்சிப் பாடல் இவை பத்தும் வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே (10) ----------- தாய்ப்பால் உண்ண அழைத்தல்
Vishṇuchithan composed ten pāsurams describing how as Rāma our god destroyed the strong Rakshasas of Lanka with his b…
அரவு அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயிலெழாயே இரவும் உண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ வரவுங் காணேன்;வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாயத் திரு உடைய வாய்மடுத்துத் திளைத்து உதைத்துப் பருகிடாயே (1)
You are a bull among the cowherd and you rest on the snake bed Get up to drink your milk. You have not eaten in the n…
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை எத்தனையும் செய்யப் பெற்றாய்; ஏதும் செய்யேன் கதம் படாதே முத்து அனைய முறுவல் செய்து மூக்கு உறிஞ்சி முலை உணாயே (2)
Since you were born, I have not seen the ghee, the boiled milk, thick yogurt and fragrant butter that I kept. You hav…
தந்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மார் ஆவார் தரிக்ககில்லார் வந்து நின்மேற் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா உந்தையார் உன்திறத்தர் அல்லர் உன்னை நான் ஒன்று உரப்பமாட்டேன் நந்தகோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை உணாயே (3)
If their children cry and go to their mothers because you hit them while you played with them, their mothers get upse…
கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு கலக்கு அழிய பஞ்சி அன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று அஞ்சினேன் காண் அமரர் கோவே ஆயர் கூட்டத்து அளவன்றாலோ கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலை உணாயே (4)
I was afraid that your feet, soft as cotton might have been hurt when you kicked Sakaṭāsuran when he came as an illus…
தீய புந்திக் கஞ்சன் உன்மேல் சினம் உடையன் சோர்வு பார்த்து மாயந்தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போகவேண்டா ஆயர் பாடிக்கு அணிவிளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே (5)
If Kamsan, intending only evil, gets angry at you, finds the right time, and comes and attacks you with his magic whe…
மின் அனைய நுண் இடையார் விரி குழல்மேல் நுழைந்த வண்டு இன் இசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார் என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள் என்னும் வார்த்தை எய்துவித்த இருடிகேசா முலை உணாயே (6)
மின் அனைய நுண் இடையார் விரி குழல்மேல் நுழைந்த வண்டு இன் இசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார் என்…
பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரைப் பெறுதும் என்னும் ஆசையாலே கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண்ணிணையால் கலக்க நோக்கி வண்டு உலாம் பூங்குழலினார் உன் வாயமுதம் உண்ண வேண்டிக் கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை உணாயே (7)
Women, wishing to give birth to a child like you, see you and do not leave you. Wearing flowers in their hair that sw…
இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அங்கம் எரிசெய்தாய் உன் திரு மலிந்து திகழு மார்வு தேக்க வந்து என் அல்குல் ஏறி ஒரு முலையை வாய்மடுத்து ஒரு முலையை நெருடிக்கொண்டு இரு முலையும் முறை முறையாய் ஏங்கி ஏங்கி இருந்து உணாயே (8)
You burned the bodies of the two mountain-like wrestlers when they came to oppose you. Come, climb on my lap, rest yo…
அங் கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினாற்போல் செங் கமல முகம் வியர்ப்ப தீமை செய்து இம் முற்றத்தூடே அங்கம் எல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம விம்ம அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே (9)
As you play in the front yard your red lotus-like face sweats and the drops of that sweat look like precious pearls t…
ஓட ஓடக் கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசைப் பாணியாலே பாடிப் பாடி வருகின்றாயைப் பற்பநாபன் என்று இருந்தேன் ஆடி ஆடி அசைந்து அசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி ஓடி ஒடிப் போய்விடாதே உத்தமா நீ முலை உணாயே (10)
I thought that you are Padmanabhan as you come running, your kingiṇi ornaments sounding like music. You dance and dan…
வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம் நீர் அணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லிபுத்தூர்ப் பார் அணிந்த தொல் புகழான் பட்டர்பிரான் பாடல் வல்லார் சீர் அணிந்த செங்கண்மால் மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே (11) ----------- காது குத்தல்
Yashoda with a band around her breasts called her child saying, “Madhava, come and drink milk!” The famous Vishṇucith…
போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறற் கஞ்சன் கடியன் காப்பாரும் இல்லை கடல்வண்ணா உன்னை தனியே போய் எங்கும் திரிதி பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் (1)
You, with your beautiful blue ocean-colored body, wander around everywhere alone. Your proud father has not returned …
வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் எண்ணற்கு அரிய பிரானே திரியை எரியாமே காதுக்கு இடுவன் கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய கனகக் கடிப்பும் இவையாம் (2)
O Nārāyaṇā, you are never away from the hearts of devotees if they approach and worship you. Come to me wearing the b…
வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும் மகரக்குழை கொண்டுவைத்தேன் வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டிய தெல்லாம் தருவன் உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய ஒண்சுடர் ஆயர்கொழுந்தே மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் (3)
I bought and kept for you emerald earrings, shaped like fish that live in the ocean, so expensive that even the whole…
வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு வார்காது தாழப் பெருக்கிக் குணம் நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய் இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால் இனிய பலாப்பழம் தந்து சுணம் நன்று அணி முலை உண்ணத் தருவன் நான் சோத்தம் பிரான் இங்கே வாராய் (4)
O Govinda, the cowherd children wear earrings studded with beautiful diamonds that hang down from their ears— see, th…
சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரிகுழலாரொடு நீ போய்க் கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் குணங்கொண்டு இடுவனோ? நம்பீ பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே திரியிட ஒட்டில் வேய்த் தடந்தோளார் விரும்பும் கருங்குழல் விட்டுவே நீ இங்கே வாராய் (5)
O dear child, even when I beg you and say I worship you, you don’t listen to me. How can I think you are a good child…
விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன்வாயில் விரும்பி அதனை நான் நோக்கி மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று இருந்தேன் புண் ஏதும் இல்லை உன்காது மறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ கண்ணா என் கார்முகிலே கடல்வண்ணா காவலனே முலை உணாயே (6)
You cried so loud that even the sky-dwellers could hear you. When I looked into your mouth, I saw the whole earth ins…
முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின்காதிற் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு மலையை எடுத்து மகிழ்ந்து கல்-மாரி காத்துப் பசுநிரை மேய்த்தாய் சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திரு ஆயர்பாடிப் பிரானே தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே? (7)
You said, “I don’t want your milk” and ran away with the earrings. When the rain of stones fell, you carried Govardha…
என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்றிலையே? வன் புற்று அரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன்காதுகள் தூரும் துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே (8)
என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் கா…
மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித் தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக் காணவே கட்டிற்றிலையே? செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன்காது தூரும் கையிற் திரியை இடுகிடாய் இந்நின்ற காரிகையார் சிரியாமே (9)
O Sridhara, you complain saying, “Mother, you believed what others said and punished me. Isn’t it true you thought I …
காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என் காதுகள் வீங்கி எரியில்? தாரியா தாகில் தலை நொந்திடும் என்று விட்டிட்டேன் குற்றமே அன்றே? சேரியிற் பிள்ளைகள் எல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி ஏர் விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட இருடிகேசா என்தன் கண்ணே
O dear child, you said, “Mother, what would it matter to you and these lovely women if my ears swell up and hurt?” I …
கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக் கடிகமழ் பூங்குழலார்கள் எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே உண்ணக் கனிகள் தருவன் கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன் பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய் (11)
You, a lovely child, stay sweetly in the thoughts of the beautiful girls with hair decorated with fragrant flowers wh…
வா என்று சொல்லி என்கையைப் பிடித்து வலியவே காதிற் கடிப்பை நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என்? காதுகள் நொந்திடும் கில்லேன் நாவற் பழம் கொண்டுவைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளைச் சாவப் பால் உண்டு சகடு இறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் (12)
O dear child, you told me, “If you pull my hand and say, ‘Come!’ and put the thread in my ears, will it hurt you? My …
வார் காது தாழப் பெருக்கி அமைத்து மகரக்குழை இட வேண்டிச் சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழப் பார் ஆர் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன ஆராத அந்தாதிப் பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே (13) ------------- நீராட்டம்
The lovely Yashoda, wishing to put a thread in Kaṇṇan’s ears, brought emerald earrings and called her child. The chie…
வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு திண்ணென இவ் இரா உன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன் எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன் நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் (1)
I won’t allow you to go to rest in the bed with your dirty body that smells with the butter you stole and the mud you…
கன்றுகள் ஓடச் செவியிற் கட்டெறும்பு பிடித்து இட்டால் தென்றிக் கெடும் ஆகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம் இன்று நீ நீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய் (2)
Look, you, our beloved, want to catch small ants and put them in the ears of calves, but if you scare them and they r…
பேய்ச்சி முலை உண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என்நெஞ்சம் ஆய்ச்சியர் எல்லாரும் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன் காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்திற் பூரித்து வைத்தேன் வாய்த்த புகழ் மணிவண்ணா மஞ்சனம் ஆட நீ வாராய் (3)
All the cowherd women called me and told me not to feed you milk because you drank the poisonous milk from the breast…
கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து வஞ்சகப் பேய்மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும் நறுஞ்சாந்தும் அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் (4)
Kamsan sent Sakaṭāsuran to kill you and when he came in the form of a cart you kicked and killed him. You drank the m…
அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலிற் கலந்து சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உறுதியேல் நம்பி செப்பு இள மென்முலையார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர் சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான் இங்கே வாராய் (5)
I have excellent appams and other snacks made of brown sugar and milk for you. O dear child, come here if you want to…
எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக் கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே உண்ணக் கனிகள் தருவன் ஒலிகடல் ஓதநீர் போலே வண்ணம் அழகிய நம்பீ மஞ்சனம் ஆட நீ வாராய் (6)
You roll the pots and spill the ghee from them. You pinch sleeping babies and wake them up and you open your eyes wid…
கறந்த நற்பாலும் தயிரும் கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய் பிறந்ததுவே முதலாகப் பெற்றறியேன் எம்பிரானே சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சனம் ஆட நீ வாராய் (7)
From the time you were born, I have not seen the good milk that I have gotten, the churned yogurt and the butter that…
கன்றினை வால் ஓலை கட்டி கனிகள் உதிர எறிந்து பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப் பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும் நின்திறத்தேன் அல்லேன் நம்பீ நீ பிறந்த திரு நன்னாள் நன்று நீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய் (8)
You tied palm leaves to the tails of calves, and you shook fruits from the trees and threw them at the Asuran and kil…
பூணித் தொழுவினிற் புக்குப் புழுதி அளைந்த பொன்-மேனி காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர் நாண் இத்தனையும் இலாதாய் நப்பின்னை காணிற் சிரிக்கும் மாணிக்கமே என்மணியே மஞ்சனம் ஆட நீ வாராய் (9)
I may be happy to see your golden body smeared with dirt because you went into the shed where the cows are tied, play…
கார் மலி மேனி நிறத்துக் கண்ணபிரானை உகந்து வார் மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப் பார் மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல் சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே (10) -------- குழல்வாரக் காக்கையை வா எனல்
Vishṇuchithan the chief of old Puduvai, praised by all the worlds, composed pāsurams describing how Yashoda called Ka…
பின்னை மணாளனை பேரிற் கிடந்தானை முன்னை அமரர் முதற் தனி வித்தினை என்னையும் எங்கள் குடி முழுது ஆட்கொண்ட மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய் மாதவன்தன் குழல்வாராய் அக்காக்காய் (1)
He is the beloved of Nappinnai. and he rests on the ocean in Thirupperur, the ancient, unique seed of all the gods. O…
பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம் மாயச் சகடும் மருதும் இறுத்தவன் காயாமலர் வண்ணன் கண்ணன் கருங்குழல் தூய்து ஆக வந்து குழல்வாராய் அக்காக்காய் தூமணி வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் (2)
O crow, he has a pure body colored like a blue sapphire. Come and help me comb and groom his hair. He drank milk from…
திண்ணக் கலத்திற் திரை உறிமேல் வைத்த வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் அண்ணல் அமரர் பெருமானை ஆயர்தம் கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய் கார்முகில் வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் (3)
O crow, come and help me comb the hair of the god of gods, the chief of the cowherds. He swallowed the butter that I …
பள்ளத்தில் மேயும் பறவை உருக் கொண்டு கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு புள் இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய் பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய் (4)
He split open the beak of the thief Baṇāsuran when the Asuran came in the form of a heron, hid and flew along the val…
கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப் பற்றி எறிந்த பரமன் திருமுடி உற்றன பேசி நீ ஓடித் திரியாதே அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய் ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய் (5)
O crow, as he grazed the cattle he threw Vathsāsuran when he came as a calf onto the vilam tree, shaking down its fru…
கிழக்கிற் குடி மன்னர் கேடு இலாதாரை அழிப்பான் நினைந்திட்டு அவ் ஆழிஅதனால் விழிக்கும் அளவிலே வேர் அறுத்தானைக் குழற்கு அணி ஆகக் குழல்வாராய் அக்காக்காய் கோவிந்தன்தன் குழல்வாராய் அக்காக்காய் (6)
O crow, come and help me comb and groom his hair. In the blink of an eye, he destroyed with his discus the Asurans wh…
பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச் சோறும் உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர் வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய் மாயவன்தன் குழல்வாராய் அக்காக்காய் (7)
O crow, don’t fly around wishing to eat the food people give in the ceremony for their ancestors and the watery rice …
உந்தி எழுந்த உருவ மலர்தன்னில் சந்தச் சதுமுகன்தன்னைப் படைத்தவன் கொந்தக் குழலைக் குறந்து புளி அட்டித் தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய் தாமோதரன்தன் குழல்வாராய் அக்காக்காய் (8)
O crow, he created the four-headed Nānmuhan on a beautiful lotus on his navel. Come and help me comb his hair. Come h…
மன்னன்தன் தேவிமார் கண்டு மகிழ்வு எய்த முன் இவ் உலகினை முற்றும் அளந்தவன் பொன்னின் முடியினைப் பூ அணைமேல் வைத்துப் பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய் பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய் (9)
O crow, he measured the whole world and puzzled the queens of king Mahābali when they saw it. Come, stand behind me a…
கண்டார் பழியாமே அக்காக்காய் கார்வண்ணன் வண்டு ஆர் குழல்வார வா என்ற ஆய்ச்சி சொல் விண் தோய் மதில் வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல் கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே (10) ---------- கோல் கொண்டுவா எனல்
Paṭṭan, the chief of Villiputhur surrounded by walls that touch the sky, composed these pāsurams that describe how th…
வேலிக் கோல் வெட்டி விளையாடு வில் ஏற்றி தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்திற் பூண்டு பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா (1)
O crow, on his round neck he wears a chain with a turtle pendent and his head is adorned with peacock feathers. Bring…
கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும் எங்கும் திரிந்து விளையாடும் என்மகன் சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க நல் அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா (2)
O crow, bring a suitable, well-formed round grazing stick for my son with a conch in his strong hands as he wanders a…
கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான் பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின் வாய் கீண்டான் நெறித்த குழல்களை நீங்க முன் ஓடிச் சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா (3)
O crow, he killed Kamsan when he came angrily to fight with him and he split open the mouth of the Asuran when he cam…
ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் துன்று முடியான் துரியோதனன் பக்கல் சென்று அங்குப் பாரதம் கையெறிந்தானுக்குக் கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா கடல்-நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா (4)
O crow, our lord went as a messenger to Duryodhana and was victorious in the Bharatha war over the Paṇḍava’s enemy th…
சீர் ஒன்று தூதாய்த் திரியோதனன் பக்கல் ஊர் ஒன்று வேண்டிப் பெறாத உரோடத்தால் பார் ஒன்றிப் பாரதம் கைசெய்து பார்த்தற்குத் தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா (5)
O crow, Kaṇṇan went as a messenger to Duryodhana and asked him to give the Paṇḍavas’ land back to them, but Duryodhan…
ஆலத்து இலையான் அரவின் அணை மேலான் நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான் பாலப் பிராயத்தே பார்த்தற்கு அருள்செய்த கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா குடந்தைக் கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா (6)
O crow, he rests on the banyan leaf as a baby at the end of the world. He granted his grace to Arjuna in the Bharatha…
பொற்றிகழ் சித்திரகூடப் பொருப்பினில் உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக் கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா மணிவண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா (7)
O crow, when he, as Rāma, stayed on golden Chithrakuḍam mountain, he put out one eye of Jayanthan when he came in the…
மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணிமுடி பத்தும் உடன் வீழத் தன் நிகர் ஒன்று இல்லாச் சிலை கால் வளைத்து இட்ட மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா (8)
O crow, bring a grazing stick for him. Bending his matchless bow he killed the ten-headed Ravaṇan, the king of Lanka,…
தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணிசெய்து மின் இலங்கும் பூண் விபீடண நம்பிக்கு என் இலங்கும் நாமத்து அளவும் அரசு என்ற மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா வேங்கட வாணற்கு ஓர் கோல் கொண்டு வா (9)
O crow, he cut off the heads and arms of Ravaṇan, the king of Lanka in the south, and gave the country to Vibhishaṇa …
அக்காக்காய் நம்பிக்குக் கோல் கொண்டு வா என்று மிக்காள் உரைத்த சொல் வில்லிபுத்தூர்ப் பட்டன் ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர் மக்களைப் பெற்று மகிழ்வர் இவ் வையத்தே (10) -------- பூச் சூட்டல்
அக்காக்காய் நம்பிக்குக் கோல் கொண்டு வா என்று மிக்காள் உரைத்த சொல் வில்லிபுத்தூர்ப் பட்டன் ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வ…
ஆனிரை மேய்க்க நீ போதி அருமருந்து ஆவது அறியாய் கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட பானையிற் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப தேனில் இனிய பிரானே செண்பகப் பூச் சூட்ட வாராய் (1)
You go to graze the cattle. Don’t you know that you are the finest remedy for all problems? You wander around the for…
கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் உரு உடையாய் உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய் திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூச் சூட்ட வாராய் (2)
If we see dark clouds, our eyes feel as if they had seen your beautiful body. You are the beloved of Lakshmi, the god…
மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள்தம் இடம் புக்கு கச்சொடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேங்கடத்து எந்தாய் பச்சைத் தமனகத்தோடு பாதிரிப் பூச் சூட்ட வாராய் (3)
You stay in the tall Thiruvenkaṭam hills. You, young one, climb up to the patios of the palaces, enter the homes wher…
தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி மார்களைத் தீமை செய்யாதே மருவும் தமனகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற புருவம் கருங்குழல் நெற்றி பொலிந்த முகிற்-கன்று போலே உருவம் அழகிய நம்பீ உகந்து இவை சூட்ட நீ வாராய் (4)
Don’t stand on the street and bother the young cowherd girls. O dear child, you have the color of the dark cloud. You…
புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய் கள்ள அரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய் அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன் தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் (5)
You split open the beak of Bāṇasuran when he came in the form of a heron, broke the tusk of the elephant, Kuvalayabee…
எருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய் காண் நம்பீ கருதிய தீமைகள் செய்து கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய் தெருவின்கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு பொருது வருகின்ற பொன்னே புன்னைப் பூச் சூட்ட நீ வாராய் (6)
O, best among men! What do you gain fighting with bulls to marry Nappinnai? You knew the evil deeds of Kamsan and kil…
குடங்கள் எடுத்து ஏற விட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே மடம் கொள் மதிமுகத்தாரை மால்செய வல்ல என் மைந்தா இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவு ஆக முன் கீண்டாய் குடந்தைக் கிடந்த எம் கோவே குருக்கத்திப் பூச் சூட்ட வாராய் (7)
You are our king! You throw pots into the sky and dance the kuḍakkuthu with them. O my son, you bewitch beautiful gir…
சீமாலிகன் அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறு அவனை நீ எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய் ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய் ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச் சூட்ட வாராய் (8)
You made friends with the Asura Thirumālihan and cut off his head with your discus. O lord, you know the future of al…
அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணியுள் அங்கு இருந்தாய் தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூமலராள் மணவாளா உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆலிலையிற் துயில் கொண்டாய் கண்டு நான் உன்னை உகக்கக் கருமுகைப் பூச் சூட்ட வாராய் (9)
Although in heaven you stay in the assembly of gods, you live in the hearts of your devotees on the earth. You, the b…
செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி எண் பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று மண் பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன் பட்டர்பிரான் சொன்ன பத்தே (10) ----------- காப்பிடல்
The Paṭṭarpiran, the chief of Villipputhur composed pāsurams with music telling how the cowherdess Yashoda happily ca…
இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம் மந்திர மா மலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார் சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய் அந்தியம் போது இது ஆகும் அழகனே காப்பிட வாராய் (1)
Indra, Nānmuhan, Shiva and all other gods brought beautiful divine flowers, stood away from you and looked at you hap…
கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம் நின்றொழிந்தேன் உன்னைக் கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய் மன்றில் நில்லேல் அந்திப் போது மதிற் திருவெள்ளறை நின்றாய் நன்று கண்டாய் என்தன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய் (2)
The calves you grazed haven’t come home and their mothers cry out and call them. I am tired of calling you, heartless…
செப்பு ஓது மென்முலையார்கள் சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு அப்போது நான் உரப்பப் போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய் முப் போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய் இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் (3)
When you knocked over the play houses and messed up the play food of the girls with soft breasts that are formed like…
கண்ணில் மணல்கொடு தூவிக் காலினால் பாய்ந்தனை என்று என்று எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு -இவர் ஆர்?- முறைப்படுகின்றார் கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரொடே தீமை செய்வாய் வண்ணமே வேலையது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய் (4)
கண்ணில் மணல்கொடு தூவிக் காலினால் பாய்ந்தனை என்று என்று எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு -இவர் ஆர்?- முறைப்படுகின்றார் கண…
பல்லாயிரவர் இவ் ஊரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது எம்பிரான் நீ இங்கே வாராய் நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன்மேனி சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச் சொப்படக் காப்பிட வாராய் (5)
Even if thousands of children from this village do naughty things, people will say you did them. O beloved one, come.…
கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல் கரு நிறச் செம் மயிர்ப் பேயை வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பது ஓர் வார்த்தையும் உண்டு மஞ்சு தவழ் மணி மாட மதிற் திருவெள்ளறை நின்றாய் அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் 6
I heard that Kamsan is angry at you and is sending Putanā, the dark red-haired devil, to cheat and kill you. You stay…
கள்ளச் சகடும் மருதும் கலக்கு அழிய உதைசெய்த பிள்ளையரசே நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளியுடை வெள்ளறை நின்றாய் பள்ளிகொள் போது இது ஆகும் பரமனே காப்பிட வாராய் (7)
O beloved, my prince, you stay in flourishing Thiruveḷḷaṛai. I know that you kicked and killed the evil Sakaṭāsuran w…
இன்பம் அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய் கும்பக் களிறு அட்ட கோவே கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே செம்பொன் மதில் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய் கம்பக் கபாலி காண் அங்கு கடிது ஓடிக் காப்பிட வாராய் (8)
You are the god of Thiruveḷḷaṛai surrounded with precious golden walls. You gave me the highest joy. Even the gods do…
இருக்கொடு நீர் சங்கிற் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார் தருக்கேல் நம்பி சந்தி நின்று தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள் திருக்காப்பு நான் உன்னைச் சாத்த தேசு உடை வெள்ளறை நின்றாய் உருக் காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய் (9)
You stay in prosperous Thiruveḷḷaṛai and the Vediyars, skilled in the Vedas, recite the Rg Veda, come holding conches…
போது அமர் செல்வக்கொழுந்து புணர் திருவெள்ளறையானை மாதர்க்கு உயர்ந்த அசோதை மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம் வேதப் பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை பாதப் பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே (10) -------------- பாலக் கிரீடை
Yashoda, the best among women, called her son to put kāppu on him, the lord of auspicious Thiruveḷḷaṛai with Lakshmi …
வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை வெற்பிடை இட்டு அதன் ஓசை கேட்கும் கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக் காக்ககில்லோம் உன்மகனைக் காவாய் புண்ணிற் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல அண்ணற் கண்ணான் ஓர் மகனைப் பெற்ற அசோதை நங்காய் உன்மகனைக் கூவாய் (1)
The cowherd girls complain saying, “When he gulps down the butter in our house and throws the pots on the stones we h…
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே கரிய குழல் செய்ய வாய் முகத்து எம் காகுத்த நம்பீ வருக இங்கே அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சனவண்ணா அசலகத்தார் பரிபவம் பேசத் தரிக்ககில்லேன் பாவியேனுக்கு இங்கே போதராயே (2)
Yashoda talks to Kaṇṇan and her neighbors. “You are my dear child! As the dwarf Vamanan, you went to the king Mahābal…
திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன் உருக வைத்த குடத்தோடு வெண்ணெய் உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான் அருகு இருந்தார் தம்மை அநியாயம் செய்வதுதான் வழக்கோ? அசோதாய் வருக என்று உன்மகன் தன்னைக் கூவாய் வாழ ஒட்டான் மதுசூதனனே (3)
The cowherd women complain to Yashoda and say, “Your wonderful son doesn’t hesitate to do naughty things. He thinks i…
கொண்டல்வண்ணா இங்கே போதராயே கோயிற் பிள்ளாய் இங்கே போதராயே தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த திருநாரணா இங்கே போதராயே உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி ஓடி அகம் புக ஆய்ச்சிதானும் கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ளக் கண்ணபிரான் கற்ற கல்வி தானே (4)
Yashoda asks Kaṇṇan to come to her and says, “O you with the dark color of a cloud, come, god of Srirangam, come, div…
பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப் பல்வளையாள் என்மகள் இருப்ப மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன் சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான் ஆலைக் கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய் உன்மகனைக் கூவாய் (5)
A cowherdess complains, “I milked the cow and put the milk on the stove, but I found out I didn’t have any fire to li…
போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய் ஏதேனும் சொல்லி அசலகத்தார் ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன் கோதுகலம் உடைக்குட்டனேயோ குன்று எடுத்தாய் குடம் ஆடு கூத்தா வேதப் பொருளே என் வேங்கடவா வித்தகனே இங்கே போதராயே 6
Yashoda calls Kaṇṇan to come to her. “ O my son, you should come to me. You should come to me now. Don’t say you won’…
செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பாலால் பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன் இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான் உன்மகன் தன்னை அசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே (7)
A cowherd girl complains, “I made twelve types of sweets with good rice, small lentils, sugar, fragrant ghee and milk…
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே நேசம் இலாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்று தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே (8)
Yashoda calls Kaṇṇan to come to her. “O Kesava, come here. Don’t say no. Come to me. Don’t go to unfriendly people’s …
கன்னல் இலட்டுவத்தோடு சீடை காரெள்ளின் உண்டை கலத்தில் இட்டு என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன் இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான் பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப் பிறங்குஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான் உன்மகன் தன்னை அசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே (9)
A cowherd girl complains, “ I kept sweet laḍḍus, seeḍais and sesame sweet balls in a pot and went outside. I thought …
சொல்லில் அரசிப் படுதி நங்காய் சூழல் உடையன் உன்பிள்ளை தானே இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக் கையில் வளையைக் கழற்றிக்கொண்டு கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ் வளை கொடுத்து நல்லன நாவற் பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே (10)
A cowherd girl complains, “If anyone complains about your son, you get upset. O lovely Yashoda, he is tricky. He came…
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வருபுனற் காவிரித் தென்னரங்கன் பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணையடி என்தலை மேலனவே (11) -------- ஆயர்மங்கையர் முறையீடு
The chief Paṭṭar, Vishṇuchithan, composed songs describing the play of the god of Srirangam in the southern land surr…
ஆற்றில் இருந்து விளையாடுவோங்களைச் சேற்றால் எறிந்து வளை துகிற் கைக்கொண்டு காற்றிற் கடியனாய் ஓடி அகம் புக்கு மாற்றமும் தாரானால் இன்று முற்றும் வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் (1)
O Yashoda, your son threw mud at us when we were bathing and playing in the river. He stole our bracelets and clothes…
குண்டலம் தாழ குழல் தாழ நாண் தாழ எண் திசையோரும் இறைஞ்சித் தொழுது ஏத்த வண்டு அமர் பூங்குழலார் துகிற் கைக்கொண்டு விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரானால் இன்று முற்றும் (2)
O Yashoda, your son who has long hair, long ear rings, and a sacred thread hanging down to his belly button is worshi…
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து படம் படு பைந்தலை மேல் எழப் பாய்ந்திட்டு உடம்பை அசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும் (3)
O Yashoda, your son stirred up the water in the pond where large lotuses bloom, grasped the tail of the poisonous sna…
தேனுகன் ஆவி செகுத்துப் பனங்கனி தான் எறிந்திட்ட தடம் பெருந்தோளினால் வானவர் கோன் விட வந்த மழை தடுத்து ஆனிரை காத்தானால் இன்று முற்றும் அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும் (4)
O Yashoda, your son killed the Asuran Thenuhan, threw his body at the tree, and made the fruits of the palmyra tree f…
ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு பேர்த்து அவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு வேய்த் தடந்தோளினார் வெண்ணெய் கோள் மாட்டாது அங்கு ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும் அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் (5)
O Yashoda, when your son stole the milk and yogurt in the cowherd village and ate them, the cowherds saw him, caught …
தள்ளித் தளர் நடை யிட்டு இளம் பிள்ளையாய் உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கிக கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை உயிர் துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கு அற உண்டானால் இன்று முற்றும் (6)
O Yashoda, even when he was a baby toddling with his tiny feet, that young child knew in his mind that the devil Puta…
மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை ஒரடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே தாவடி இட்டானால் இன்று முற்றும் தரணி அளந்தானால் இன்று முற்றும் (7)
O Yashoda, he went to the sacrifice of king Mahābali, asked for three feet of land, and measured this earth with one …
தாழை தண்-ஆம்பற் தடம் பெரும் பொய்கைவாய் வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்பு உண் வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய் ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும் (8)
O Yashoda, your son, the god of gods in the sky, came riding on his vehicle, the Garuḍazhvar and removed the sufferin…
வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும் கானத்து மேய்ந்து களித்து விளையாடி ஏனத்து உருவாய் இடந்த இம் மண்ணினைத் தானத்தே வைத்தானால் இன்று முற்றும் தரணி இடந்தானால் இன்று முற்றும் (9)
O Yashoda, your son with the color of a cloud in the sky grazes the cows in the forest and plays happily. He took the…
அங் கமலக் கண்ணன்தன்னை அசோதைக்கு மங்கை நல்லார்கள் தாம் வந்து முறைப்பட்ட அங்கு அவர் சொல்லைப் புதுவைக்கோன் பட்டன் சொல் இங்கு இவை வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே (10) ----------- அம்மம் தர மறுத்தல்
Paṭṭan, the chief of Puduvai, composed pāsurams describing the complaints of the beautiful cowherd women to Yashoda a…
தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு தளர்நடைஇட்டு வருவான் பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச வாய்வைத்த பிரானே அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (1)
He toddles and comes to me just like thousands of other children. I give him butter precious as gold and milk. He dri…
பொன்போல் மஞ்சனம் ஆட்டி அமுது ஊட்டிப் போனேன் வருமளவு இப்பால் வன் பாரச் சகடம் இறச் சாடி வடக்கில் அகம் புக்கு இருந்து மின்போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை வேற்றுருவம் செய்து வைத்த அன்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (2)
I gave a bath to your sky-blue body and fed you food sweet as nectar and went out. Before I came back you killed the …
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத் தயிர் சாய்த்துப் பருகி பொய்ம் மாய மருது ஆன அசுரரைப் பொன்றுவித்து இன்று நீ வந்தாய் இம் மாயம் வல்ல பிள்ளை- நம்பீ உன்னை என்மகனே என்பர் நின்றார் அம்மா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (3)
You swallowed all the butter and the lentils in the pots and turned over the yogurt pot and ate all the yogurt. Now, …
மைஆர் கண் மட ஆய்ச்சியர் மக்களை மையன்மை செய்து அவர் பின்போய் கொய் ஆர் பூந்துகில் பற்றித் தனி நின்று குற்றம் பல பல செய்தாய் பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ புத்தகத்துக்கு உள கேட்டேன் ஐயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (4)
You fascinate the beautiful young cowherd girls whose dark eyes are decorated with kohl. You follow them holding onto…
முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயி னோடு தயிரும் விழுங்கி கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த கலத்தொடு சாய்த்துப் பருகி மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல விம்மி விம்மி அழுகின்ற அப்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (5)
You swallow the butter and the yogurt that the cowherd women churn three times a day and keep. You make the pots that…
கரும்பார் நீள் வயற் காய்கதிர்ச் செந்நெலைக் கற்றாநிரை மண்டித் தின்ன விரும்பாக் கன்று ஒன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே சுரும்பார் மென்குழற் கன்னி ஒருத்திக்குச் சூழ்வலை வைத்துத் திரியும் அரம்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (6)
When an Asuran came as a calf and refused to eat the good paddy that all the other cows were eating happily on the fl…
மருட்டார் மென்குழற் கொண்டு பொழில் புக்கு வாய்வைத்து அவ் ஆயர்தம் பாடி சுருட்டார் மென்குழற் கன்னியர் வந்து உன்னைச் சுற்றும் தொழ நின்ற சோதி பொருள்- தாயம் இலேன் எம்பெருமான் உன்னைப் பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (7)
You are light! You go into the grove and play soft music on your flute, enthralling everyone. The cowherd girls with …
வாளா ஆகிலும் காணகில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து தோளால் இட்டு அவரோடு திளைத்து நீ சொல்லப் படாதன செய்தாய் கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி கெட்டேன் வாழ்வில்லை நந்தன் காளாய் உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (8)
Even if you keep quiet without doing anything naughty, people don’t believe it. You fascinate the beloved daughters o…
தாய்மார் மோர் விற்கப் போவர் தமப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர் நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை நேர்படவே கொண்டு போதி காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும் ஆயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (9)
Cowherd mothers go to sell buttermilk, cowherd fathers go behind the cows to graze them, and you, fearless, run behin…
தொத்தார் பூங்குழற் கன்னி ஒருத்தியைச் சோலைத் தடம் கொண்டு புக்கு முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூவேழு சென்றபின் வந்தாய் ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன் அத்தா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (10)
You went into a blooming garden with a young girl with hair is adorned with a bunch of flowers, embraced her breasts …
காரார் மேனி நிறத்து எம்பிரானைக் கடிகமழ் பூங்குழல் ஆய்ச்சி ஆரா இன்னமுது உண்ணத் தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம் பாரார் தொல்புகழான் புதுவை மன்னன் பட்டர்பிரான் சொன்ன பாடல் ஏரார் இன்னிசை மாலைகள் வல்லார் இருடிகேசன் அடியாரே (11) ------------- கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல்
Yashoda with fragrant flowers in her hair called the dark one colored like a cloud and told him that she will give hi…
அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை மஞ்சனம் ஆட்டி மனைகள்தோறும் திரியாமே கஞ்சனைக் காய்ந்த கழல் அடி நோவக் கன்றின்பின் என்செயப் பிள்ளையைப் போக்கினேன்? எல்லே பாவமே (1)
Yashoda says, “I bathed the dear kohl-colored child of the cowherd clan in turmeric water and sent him out to go behi…
பற்றுமஞ்சள் பூசிப் பாவைமாரொடு பாடியிற் சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே கற்றுத் தூளியுடை வேடர் கானிடைக் கன்றின் பின் எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்? எல்லே பாவமே (2)
Yashoda says, “I don’t want my son to go wandering around kicking and destroying the play houses of lovely doll-like …
நன்மணி மேகலை நங்கைமாரொடு நாள்தொறும் பொன்மணி மேனி புழுதியாடித் திரியாமே கல்மணி நின்று அதிர் கான்- அதரிடைக் கன்றின்பின் என் மணிவண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே (3)
Yashoda says, “I don’t want my son wandering and playing every day with young girls decorated with beautiful maṇimega…
வண்ணக் கருங்குழல் மாதர் வந்து அலர் தூற்றிடப் பண்ணிப் பல செய்து இப் பாடி எங்கும் திரியாமே கண்ணுக்கு இனியானைக் கான் -அதரிடைக் கன்றின்பின் எண்ணற்கு அரியானைப் போக்கினேன் எல்லே பாவமே (4)
Yashoda says, “I don’t want him wandering around in this cowherd village doing naughty things so the beautiful dark-h…
அவ்வவ் இடம் புக்கு அவ் ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்க் கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே எவ்வும் சிலை உடை வேடர் கானிடைக் கன்றின் பின் தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே (5)
Yashoda says, “I don’t want him wandering here and there in the cowherd village doing naughty things. I don't want hi…
மிடறு மெழுமெழுத்து ஓட வெண்ணெய் விழுங்கிப் போய்ப் படிறு பல செய்து இப் பாடி எங்கும் திரியாமே கடிறு பல திரி கான் -அதரிடைக் கன்றின் பின் இடற என்பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே (6)
Yashoda says, “I don’t want him stealing butter, filling his mouth and swallowing it and doing many other naughty thi…
வள்ளி நுடங்கு-இடை மாதர் வந்து அலர் தூற்றிடத் துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே கள்ளி உணங்கு வெங்கான் -அதரிடைக் கன்றின் பின் புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே (7)
வள்ளி நுடங்கு-இடை மாதர் வந்து அலர் தூற்றிடத் துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே கள்ளி உணங்கு வெங்கான் -அதரிடைக் கன்றி…
பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்ட அப் பாங்கினால் என் இளங் கொங்கை அமுதம் ஊட்டி எடுத்து யான் பொன்னடி நோவப் புலரியே கானிற் கன்றின் பின் என் இளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே (8)
Yashoda says, “I carried him on my hip for twelve months and fed him nectar-like milk from my young breasts. Now I ha…
குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் உடையும் கடியன ஊன்று வெம் பரற்கள் உடைக் கடிய வெங் கானிடைக் கால்- அடி நோவக் கன்றின் பின் கொடியென் என்பிள்ளையைப் போக்கினேன்:எல்லே பாவமே (9)
Yashoda says, “I have sent my son Damodaran behind the calves without giving him an umbrella and sandals to go in the…
என்றும் எனக்கு இனியானை என் மணிவண்ணனைக் கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய பொன் திகழ் மாடப் புதுவையர்கோன் பட்டன் சொல் இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே (10) ------------ கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு அன்னை மகிழ்தல்
Paṭṭan, the chief of Puduvai filled with palaces that shine like gold composed a garland of sweet Tamil pāsurams that…
சீலைக் குதம்பை ஒருகாது ஒருகாது செந்நிற மேற் தோன்றிப்பூ கோலப் பணைக் கச்சும் கூறை- உடையும் குளிர் முத்தின் கோடாலமும் காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர் ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்று ஆரும் இல்லை (1)
Yashoda says, “The young Kaṇṇan adorned with a kudambai flower for an earring on his one ear and a red thondri blosso…
கன்னி நன் மா மதில் சூழ்தரு பூம்பொழிற் காவிரித் தென்னரங்கம் மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன் என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என்குட்டனே முத்தம் தா (2)
Yashoda says, “You are the eternal, famous Madhusudanan, and you stay in Srirangam surrounded with good strong walls …
காடுகள் ஊடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடிக் கார்க்கோடற்பூச் சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன் உடம்பு பேடை மயிற் சாயற் பின்னை மணாளா நீராட்டு அமைத்து வைத்தேன் ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான் (3)
Yashoda says, “O Damodara, you are the beloved of Nappinnai, lovely as a peacock. You go through the forest, graze th…
கடி ஆர் பொழில் அணி வேங்கடவா கரும் போரேறே நீ உகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன சிறுக்குட்டச் செங் கமல- அடியும் வெதும்பி உன்கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் (4)
Yashoda says, “You stay in the beautiful Thiruvenkaṭam hills filled with fragrant groves! You are a strong bull that …
பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை வாய்வைத்த போரேறே என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா சிறுக்குட்டச் செங்கண் மாலே சிற்றாடையும் சிறுப்பத்திரமும் இவை கட்டிலின் மேல் வைத்துப் போய் கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக் கலந்து உடன் வந்தாய் போலும் (5)
Yashoda says, “:You are a bull in battle! When you blow the Panchajanyam conch on the battlefield, your enemies shive…
அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்திருந்தேன் என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய்? ஏதும் ஓர் அச்சம் இல்லை கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய் (6)
Yashoda says, “O beautiful lord with a shining discus in your hand, I felt I might die when you entered the pond and …
பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற்கடல் வண்ணா உன்மேல் கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த கள்ள அசுரர் தம்மைச் சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும் என்றும் என்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்ஙனம் ஆவர்களே (7)
Yashoda says, “You who, colored dark like the sea, rest on the milky ocean took the forms of a boar, a turtle and a f…
கேட்டு அறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்குக் காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும் ஊட்ட முதல் இலேன் உன்தன்னைக் கொண்டு ஒருபோதும் எனக்கு அரிது வாட்டம் இலாப் புகழ் வாசுதேவா உன்னை அஞ்சுவன் இன்று தொட்டும் (8)
Yashoda says, “I just heard something that is new to me. It seems you ate the rice, curries and yogurt that the cowhe…
திண் ஆர் வெண்சங்கு உடையாய் திருநாள் திரு வோணம் இன்று எழு நாள்;முன் பண்நேர் மொழியாரைக் கூவி முளை அட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன் கண்ணாலம் செய்யக் கறியும் கலத்தது அரிசியும் ஆக்கி வைத்தேன் கண்ணா நீ நாளைத்தொட்டுக் கன்றின் பின் போகேல் கோலம் செய்து இங்கே இரு (9)
Yashoda says, “You carry a strong white conch in your hand. It is the auspicious Thiruvoṇam day, your birthday. I cal…
புற்றரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனைக் கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம் செற்றம் இலாதவர் வாழ்தரு தென்புது வை விட்டுசித்தன் சொல் கற்று இவை பாட வல்லார் கடல்வண்ணன் கழலிணை காண்பர்களே (10) ------------------- கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு கன்னியர் காமுறல்
Vishṇuchithan, the chief of Puduvai where faultless people live composed ten pāsurams that describe how the cowherdes…
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு மழைகொலோ வருகின்றது என்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே (1)
Decorated with fresh leaves and garlands, cowherds come while the sounds of flutes and songs are heard everywhere whi…
வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு வசை அறத் திருவரை விரித்து உடுத்து பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி பணைக்கச்சு உந்தி பல தழை நடுவே முல்லை நல் நறுமலர் வேங்கை மலர் அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே எல்லியம் போதாகப் பிள்ளை வரும் எதிர்நின்று அங்கு இனவளை இழவேன்மினே (2)
Kaṇṇan, wearing a soft garment that looks like the petals of flowers blooming on a vine, carrying a small sword, and …
சுரிகையும் தெறி-வில்லும் செண்டு-கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட ஒரு கையால் ஒருவன்தன் தோளை ஊன்றி ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம் வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள் அருகே நின்றாள் என்பெண் நோக்கிக் கண்டாள் அது கண்டு இவ் ஊர் ஒன்று புணர்க்கின்றதே (3)
His young friends wearing silk garments run behind him carrying small swords, bows, chendus and sticks. One of them b…
குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய்க் குழல் ஊதி ஊதிக் கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்து உடன் வருவானைத் தெருவிற் கண்டு என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டறியேன் ஏடி வந்து காணாய் ஒன்றும்நில்லா வளை கழன்று துகில் ஏந்து இள முலையும் என் வசம் அலவே (4)
He, my beloved one, carried Govardhana mountain and protected the cows when there was a big storm. Now he plays music…
சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச் சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆடக் கண்டேன் அன்றிப் பின் மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன் மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால் கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக் கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே (5)
I saw the cowherds carrying umbrellas made of peacock feathers standing around Kaṇṇan wearing beautiful peacock feath…
சிந்துரம் இலங்கத் தன் திருநெற்றிமேல் திருத்திய கோறம்பும் திருக்குழலும் அந்தரம் முழவத் தண் தழைக் காவின்கீழ் வரும் ஆயரோடு உடன் வளைகோல் வீச அந்தம் ஒன்று இல்லாத ஆயப் பிள்ளை அறிந்து அறிந்து இவ் வீதி போதுமாகில் பந்து கொண்டான் என்று வளைத்து வைத்துப் பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ (6)
He will be wearing a shining sinduram and a perfect nāmam on his divine forehead. The lovely music of flutes and the …
சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின்கீழ்த் தன் திருமேனிநின்று ஒளி திகழ நீல நல் நறுங்குஞ்சி நேத்திரத்தால் அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே கோலச் செந்தாமரைக் கண் மிளிரக் குழல் ஊதி இசைப் பாடிக் குனித்து ஆயரோடு ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை அழகு கண்டு என்மகள் அயர்க்கின்றதே (7)
Kaṇṇan goes behind good cows in a flourishing grove with his divine body shining brightly, his fragrant hair decorate…
சிந்துரப்-பொடி கொண்டு சென்னி அப்பித் திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையந்தன்னால் அந்தரம் இன்றித் தன் நெறி பங்கியை அழகிய நேத்திரத்தால் அணிந்து இந்திரன் போல் வரும் ஆயப்பிள்ளை எதிர்நின்று அங்கு இனவளை இழவேல் என்ன சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன் துகிலொடு சரிவளை கழல்கின்றதே (8)
He is adorned with a poṭṭu made of red powder and a divine nāmam on his forehead. Wearing beautiful peacock feathers …
வலங் காதில் மேல்-தோன்றிப் பூ அணிந்து மல்லிகை வனமாலை மௌவல் மாலை சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டுத் தீங்குழல் வாய்மடுத்து ஊதி ஊதி அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை அழகு கண்டு என்மகள் விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர் வெள்வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே (9)
On his left ear he wears a lovely thondri flower and his long hair is adorned with jasmine and forest mauval flowers.…
விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ மிறைத்து ஆயர் பாடியில் வீதியூடே கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு இளஆய்க் கன்னிமார் காமுற்ற வண்ணம் வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே (10) -------------- கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை
Vishṇuchittan, the chief of Puduvai surrounded with lovely groves where bees swarm, composed ten pāsurams about the l…
அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர்- வாவியும் நெய்- அளறும் அடங்கப் பொட்டத் துற்றி மாரிப் பகை புணர்த்த பொரு மா கடல்வண்ணன் பொறுத்த மலை வட்டத் தடங்கண் மட மான் கன்றினை வலைவாய்ப் பற்றிக் கொண்டு குறமகளிர் கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (1)
The victorious umbrella-like mountain that the dark ocean-colored lord who ate a pile of rice with lentils, yogurt an…
வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர்கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட மழை வந்து எழு நாள் பெய்து மாத் தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை இழவு தரியாதது ஓர் ஈற்றுப் பிடி இளஞ் சீயம் தொடர்ந்து முடுகுதலும் குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (2)
The victorious umbrella-like mountain that Madhusudhanan carried to stop the rain when Indra, the king of gods was an…
அம் மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும் ஆனாயரும் ஆநிரையும் அலறி எம்மைச் சரண் ஏன்றுகொள் என்று இரப்ப இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப் புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (3)
The victorious umbrella-like mountain that our father with a shining discus in his hand carried when the cows, the la…
கடு வாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக் கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல் அடிவாய் உறக் கையிட்டு எழப் பறித்திட்டு அமரர்பெருமான் கொண்டு நின்ற மலை கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக் கதுவாய்ப் பட நீர்முகந்து ஏறி எங்கும் குடவாய்ப் பட நின்று மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (4)
As Kannan picked up Govardhana mountain where the clouds gather after descending to the ocean, scooping up the water,…
வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்குமின் என்பவன் போல் ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை கானக் களி-யானை தன் கொம்பு இழந்து கதுவாய் மதம் சோரத் தன் கை எடுத்துக் கூனற் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (5)
The victorious umbrella-like mountain that our father, who once took the form of a boar, carried, digging it up and c…
செப்பாடு உடைய திருமால் அவன் தன் செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும் கப்பு ஆக மடுத்து மணி நெடுந்தோள் காம்பு ஆகக் கொடுத்துக் கவித்த மலை எப்பாடும் பரந்து இழி தெள் அருவி இலங்கு மணி முத்துவடம் பிறழக் குப்பாயம் என நின்று காட்சிதரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (6)
The victorious umbrella-like mountain that our wonderful Thirumāvalavan carried, putting all the five fingers of his …
படங்கள் பலவும் உடைப் பாம்பு- அரையன் படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல் தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் தாமோதரன் தாங்கு தடவரைதான் அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களைக் குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (7)
The victorious umbrella-like mountain that our Damodaran carried using the five fingers of his wide hands just as the…
சல மா முகில் பல் கணப் போர்க்களத்துச் சர- மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறியக் கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (8)
The victorious umbrella-like mountain that Narayaṇan carried to protect the cows when the strong rain fell like a war…
வன் பேய்முலை உண்டது ஓர் வாய் உடையன் வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை தன் பேர் இட்டுக் கொண்டு தரணி தன்னிற் தாமோதரன் தாங்கு தடவரை தான் முன்பே வழி காட்ட முசுக் கணங்கள் முதுகிற் பெய்து தம் உடைக் குட்டன்களைக் கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (9)
The victorious large mountain that Damodaran carried who drank milk from the breasts of the terrible devil Putanā and…
கொடி ஏறு செந் தாமரைக் கைவிரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்று இல வடிவு ஏறு திருவுகிர் நொந்தும் இல மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம் முடி ஏறிய மா முகிற் பல் கணங்கள் முன் நெற்றி நரைத்தன போல எங்கும் குடி ஏறி இருந்து மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (10)
When the beautiful blue-colored one carried Govardhana mountain, the fingers of his lotus hands did not loose their b…
அரவிற் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு அரவப்-பகை ஊர்தி அவனுடைய குரவிற் கொடி முல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடைமேல் திருவிற் பொலி மறைவாணர் புத்தூர்த் திகழ் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும் பரவு மனம் நன்கு உடைப் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே (11) ---------- கண்ணன் குழல் ஊதல்
The famous Paṭṭarpiran Vishṇuchithan where the Vediyars recite the divine Vedas composed these ten pāsurams on Govard…
நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்கள் இது ஓர் அற்புதம் கேளீர் தூ வலம்புரி உடைய திருமால் தூய வாயிற் குழல்-ஓசை வழியே கோவலர் சிறுமியர் இளங் கொங்கை குதுகலிப்ப உடல் உள்-அவிழ்ந்து எங்கும் காவலும் கடந்து கயிறுமாலை ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே (1)
O beautiful girls of this wide world, hear a wonderful thing! When Thirumāl with a white valampuri conch in his hand …
இட அணரை இடத் தோளொடு சாய்த்து இருகை கூடப் புருவம் நெரிந்து ஏறக் குடவயிறு பட வாய் கடைகூடக் கோவிந்தன் குழல்கொடு ஊதின போது மட மயில்களொடு மான்பிணை போலே மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ உடை நெகிழ ஓர்கையால் துகில் பற்றி ஒல்கி ஓடு அரிக்கண் ஒட நின்றனரே (2)
When Govindan takes his flute in his hands, bends his eyebrows, blows the air from his stomach and plays, young doe-e…
வான் இளவரசு வைகுந்தக் குட்டன் வாசுதேவன் மதுரைமன்னன் நந்த- கோன் இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல்கொடு ஊதின போது வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி மனம் உருகி மலர்க்கண்கள் பனிப்பத் தேன் அளவு செறி கூந்தல் அவிழச் சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே (3)
When the prince of the sky, the lord of Vaikuṇṭam, the little one of Vasudeva, the king of Madhura, Govindan, the pri…
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்பப் பூடுகள் அடங்க உழக்கிக் கானகம் படி உலாவி உலாவிக் கருஞ்சிறுக்கன் குழல் ஊதின போது மேனகையொடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி வானகம் படியில் வாய் திறப்பு இன்றி ஆடல் பாடல் இவை மாறினர் தாமே (4)
When the small dark-colored Kaṇṇan who fought, conquered and destroyed the evil Asuras Thenuhan, Pilamban and Kaliyan…
முன் நரசிங்கமது ஆகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் மூவுலகில் மன்னர் அஞ்சும் மதுசூதனன் வாயிற் குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க நன் நரம்பு உடைய தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறந்து கின்னர மிதுனங்களும் தம் தம் கின்னரம் தொடுகிலோம் என்றனரே (5)
Madhusudanan, feared by the kings of the three worlds, who came as a man-lion and killed Hiraṇyan When he plays the f…
செம் பெருந் தடங்- கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் நம் பரமன் இந்நாள் குழல் ஊதக் கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர் அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீத வலையால் சுருக்குண்டு நம் பரம் அன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே (6)
When our highest lord, a lion among the gods, who was born to Devaki as a child with large beautiful eyes and strong …
புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து அவையுள் நாகத்து- அணையான் குழல் ஊத அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர்-பாடி நிறையப் புகுந்து ஈண்டிச் செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே (7)
Listen to the wonders that I have seen on this earth! When Kaṇṇan who has beautiful large eyes and strong arms plays …
சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக் கோவிந்தன் குழல்கொடு ஊதின போது பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக் கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே (8)
When Govindan plays the flute holding it in his small fingers, as his beautiful eyes close, his red cheeks puff out a…
திரண்டு எழு தழை மழைமுகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் ஊதுகின்ற குழல்-ஓசை வழியே மருண்டு மான்-கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே (9)
His dark color is like mass of clouds, his face is beautiful like a red lotus, and his dark curly hair has the color …
கருங்கண் தோகை மயிற் பீலி அணிந்து கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை அருங்கல உருவின் ஆயர் பெருமான் அவனொருவன் குழல் ஊதின போது மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே (10)
When the matchless one, the chief of the cowherds adorned with dark-eyed peacock feathers and a silk garment tied tig…
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக் கோவிந்தனுடைய கோமள வாயிற் குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக் கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக் குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார் குழலை வென்ற குளிர் வாயினராகிச் சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே (11) --------------- நற்றாய் இரங்கல்
Vishṇuchithan the chief of Puduvai composed pāsurams about how music flowed like a flood of nectar from the holes of …
ஐய புழுதி உடம்பு அளைந்து இவள் பேச்சும் அலந்தலையாய்ச் செய்ய நூலின் சிற்றாடை செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள் கையினில் சிறுதூதை யோடு இவள் முற்றில் பிரிந்தும் இலள் பை அரவணைப் பள்ளியானொடு கைவைத்து இவள்வருமே (1)
She plays on the sand and makes herself dirty. She speaks like a baby. She doesn’t know how to wear her lovely dress …
வாயிற் பல்லும் எழுந்தில மயி ரும் முடி கூடிற்றில சாய்வு இலாத குறுந்தலைச் சில பிள்ளைகளோடு இணங்கி தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள் தன் அன்ன செம்மை சொல்லி மாயன் மா மணிவண்ணன்மேல் இவள் மால் உறுகின்றாளே (2)
Her teeth have not grown out yet, her hair is not yet thick, and she plays with sparse-haired still innocent children…
பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில் சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்கலுறாள் கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில கோவிந்தனோடு இவளைச் சங்கை யாகி என் உள்ளம் நாள்தொறும் தட்டுளுப்பு ஆகின்றதே (3)
Even when she tries to make a play house on the white sand in the front yard of her house, she cannot make it without…
ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என் பெண்மகளை எள்கி தோழிமார் பலர் கொண்டுபோய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன் ஆழியான் என்னும் ஆழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி மூழை உப்பு அறியாது என்னும் மூதுரையும் இலளே (4)
Who can I tell about the tricks that this young Kaṇṇan does? He gets together with my young, innocent daughter’s frie…
நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல் சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழிதர்கின்றாள் கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளைப் பாடிகாவல் இடுமின் என்று என்று பார் தடுமாறினதே (5)
She wears fragrant thulasi garlands and goes to all the cities and lands where Narayaṇan stays and searches for him. …
பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும் இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு என்னோடு இருக்கலுறாள் பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று இவள் பூவைப் பூவண்ணா என்னும் வட்ட வார் குழல் மங்கைமீர் இவள் மால் உறுகின்றாளே (6)
I decorated her with a forehead ornament, golden ear rings, a paḍagam ornament and anklets and raised her with love, …
பேசவும் தரியாத பெண்மையின் பேதையேன் பேதை இவள் கூசமின்றி நின்றார்கள் தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய் கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் வாச வார்குழல் மங்கைமீர் இவள் மால் உறுகின்றாளே 7
I am an innocent mother and she is my innocent daughter. She stands in front of the girls who obey their mothers but …
காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும் கூறை உடுக்கும் அயர்க்கும் தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும் தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த் தேவன் திறம் பிதற்றும் மாறில் மா மணிவண்ணன்மேல் இவள் மால் உறுகின்றாளே (8)
She wears pretty clothes and looks at herself in the mirror. She makes the bangles on her arms jingle. She wears a ne…
கைத்தலத்து உள்ள மாடு அழியக் கண்ணாலங்கள் செய்து இவளை- வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்? நம்மை வடுப்படுத்தும்- செய்த்தலை எழு நாற்றுப் போல் அவன் செய்வன செய்துகொள்ள மைத் தடமுகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே (9)
What is the use if I save abundant wealth and wish to spend it to do auspicious ceremonies for her? It only hurts me.…
பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி நம் இல்லத்துள்ளே இருத்துவான் எண்ணி நாம் இருக்க இவளும் ஒன்று எண்ணுகின்றாள் மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன்முன் ஒருப்படுத்து இடுமின் இவளை உலகளந்தான் இடைக்கே (10)
We did all the auspicious ceremonies that we were supposed to do for her and kept her in our home thinking that she w…
ஞாலம் முற்றும் உண்டு ஆலிலைத் துயில் நாராயணனுக்கு இவள் மாலதாகி மகிழ்ந்தனள் என்று தாய் உரை செய்ததனை கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் வல்லவர்கட்கு இல்லை வரு துயரே (11) -------------------- தலைவன்பின் சென்ற மகளைக்குறித்துத் தாய் பலபடி உன்னி ஏங்குதல்
Vishṇuchithan, the chief of Puduvai surrounded with beautiful flower gardens composed a garland of ten pāsurams about…
நல்லது ஓர் தாமரைப் பொய்கை நாண்மலர் மேல் பனி சோர அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தால் ஒத்ததாலோ இல்லம் வெறியோடிற்றாலோ என்மகளை எங்கும் காணேன் மல்லரை அட்டவன் பின்போய் மதுரைப் புறம் புக்காள் கொல்லோ? (1)
I haven’t seen my daughter anywhere. My house is empty. It is like a pond that has lost its beauty and its fresh lotu…
ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத உருவறைக் கோபாலர் தங்கள் கன்று கால் மாறுமா போலே கன்னி இருந்தாளைக் கொண்டு நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை என்றும் எமர்கள் குடிக்கு ஓர் ஏச்சுக்கொல்? ஆயிடுங் கொல்லோ? (2)
Nārāyaṇan made my virgin daughter play with him and took her with him like the ignorant cowherds who steal calves. Wo…
குமரி மணம் செய்து கொண்டு கோலம் செய்து இல்லத்து இருத்தி தமரும் பிறரும் அறியத் தாமோதரற்கு என்று சாற்றி அமரர் பதியுடைத் தேவி அரசாணியை வழிபட்டு துமிலம் எழப் பறை கொட்டித் தோரணம் நாட்டிடுங் கொல்லோ? (3)
We made arrangements for my daughter’s wedding, decorated her beautifully and kept her at home. We announced to our r…
ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண் மால் தான் கொண்டு போனான் பெரு மகளாய்க் குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை மருமகளைக் கண்டு உகந்து மணாட்டுப் புறம்செய்யுங் கொல்லோ? (4)
I have only one daughter and I raised her like Lakshmi, the beautiful goddess. The world praises me as a good mother.…
தம் மாமன் நந்தகோபாலன் தழீஇக் கொண்டு என் மகள் தன்னைச் செம்மாந்திரே என்று சொல்லி செழுங் கயற் கண்ணும் செவ்வாயும் கொம்மை முலையும் இடையும் கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு இம் மகளைப் பெற்ற தாயர் இனித் தரியார் என்னுங் கொல்லோ? (5)
Will Nandagopan, the father-in-law of my daughter, embrace her and say, “I am proud to have you as my daughter-in-law…
வேடர் மறக்குலம் போலே வேண்டிற்றுச் செய்து என்மகளைக் கூடிய கூட்டமே யாகக் கொண்டு குடி வாழுங் கொல்லோ? நாடும் நகரும் அறிய நல்லது ஓர் கண்ணாலம் செய்து சாடு இறப் பாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றுங் கொல்லோ? (6)
Will the family of her in-laws join together, perform all the requisite ceremonies and make her happy? Will her belov…
அண்டத்து அமரர் பெருமான் ஆழியான் இன்று என்மகளைப் பண்டப் பழிப்புக்கள் சொல்லிப் பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ? கொண்டு குடி- வாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்துப் பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்குங் கொல்லோ? (7)
Will the chief of the gods with a discus in the sky live with my daughter without blaming her for anything? Will he l…
குடியிற் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ நடை ஒன்றும் செய்திலன் நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன் இடை இருபாலும் வணங்க இளைத்து இளைத்து என்மகள் ஏங்கிக் கடைகயிறே பற்றி வாங்கிக் கை தழும்பு ஏறிடுங் கொல்லோ? (8)
O beautiful girl! The son of Nandagopan doesn’t do any of the things that people born in good families do. He doesn’t…
வெண்ணிறத் தோய் தயிர் தன்னை வெள்வரைப்பின் முன் எழுந்து கண் உறங்காதே இருந்து கடையவும் தான்வல்லள் கொல்லோ? ஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகளந்தான் என்மகளைப் பண் அறையாப் பணிகொண்டு பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ? (9)
Without sleeping well, can my daughter wake up before dawn and churn the white yogurt? Will he, with shining lotus ey…
மாயவன் பின்வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமும் எல்லாம் தாயவள் சொல்லிய சொல்லைப் தண் புதுவைப் பட்டன் சொன்ன தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணிவண்ணனுக்கு ஆளரே (10) ------------------ உந்தி பறத்தல்
The chief of flourishing Puduvai composed ten pāsurams describing how a good mother went to a cowherd village searchi…
என் நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள் தன் நாதன் காணவே தண்பூ மரத்தினை வன் நாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என் நாதன் வன்மையைப் பாடிப் பற எம்பிரான் வன்மையைப் பாடிப் பற (1)
O undi, fly and sing the strength of my lord. . He pulled a beautiful Parijatha flower tree from Indra’s world with t…
என் வில் வலி கண்டு போ என்று எதிர்வந்தான் தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி முன் வில் வலித்து முதுபெண் உயிருண்டான் தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற தாசரதி தன்மையைப் பாடிப் பற (2)
O undi, fly and sing the might of the bow of him who took away the power of Balarāman’s tapas when he came in front o…
உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர் வந்து செருக்கு உற்றான் வீரம் சிதையத் தலையைச் சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற தேவகி சிங்கத்தைப் பாடிப் பற (3)
O undi, when he brought Rukmaṇi on his chariot and Rukman, her proud brother, came there angrily and opposed him, Kaṇ…
மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்று அழ கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன சீற்றம் இலாதானைப் பாடிப் பற சீதை மணாளனைப் பாடிப் பற (4)
O undi, fly singing the strength of him who went to the terrible forest without getting angry when his step-mother wh…
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த அஞ்சன வண்ணனைப் பாடிப் பற அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற (5)
O undi, fly and sing the praise of the dark kohl-colored god who went to Duryodhana as a messenger for the Pāṇḍavas a…
முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன் அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற அயோத்தியர் கோமானைப் பாடிப் பற (6)
O undi, fly and sing the praise of Rāma who gave his padukas when his faultless brother Bharatha followed him and ask…
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீள்முடி ஐந்திலும் நின்று நடம்செய்து மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன் தோள்-வலி வீரமே பாடிப் பற தூ மணிவண்ணனைப் பாடிப் பற (7)
O undi, fly and sing the praise of the strength of the heroic arms of the clever one who jumped into the pond, stirre…
தார்க்கு இளந்தம்பிக்கு அரசு ஈந்து தண்டகம் நூற்றவள் சொற்கொண்டு போகி நுடங்கு- இடைச் சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு அவள் ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற (8)
O undi, fly and sing the praise of Rāma who gave the kingdom to his younger brother and went to the forest obeying th…
மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற (9)
O undi, fly and sing the praise of him who kicked and destroyed the Asuran when he came in the form of a deceiving ca…
காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும் நேரா அவன்தம்பிக்கே நீள் அரசு ஈந்த ஆராவமுதனைப் பாடிப் பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற (10)
O undi, fly and sing the praise him who crossed the ocean, entered Lanka, killed his enemy Rāvaṇan, the ten-headed ki…
நந்தன் மதலையைக் காகுத்த னைநவின்று உந்தி பறந்த ஒளியிழை யார்கள்சொல் செந்தமிழ்த் தென்புது வைவிட்டு சித்தன்சொல் ஐந்தினோடு ஐந்தும்வல் லார்க்குஅல்லல் இல்லையே (11) ------------ அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம்
நந்தன் மதலையைக் காகுத்த னைநவின்று உந்தி பறந்த ஒளியிழை யார்கள்சொல் செந்தமிழ்த் தென்புது வைவிட்டு சித்தன்சொல் ஐந்தினோடு…
நெறிந்த கருங்குழல் மடவாய் நின் அடியேன் விண்ணப்பம் செறிந்த மணி முடிச் சனகன் சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது அறிந்து அரசு களைகட்ட அருந்தவத்தோன் இடை விலங்கச் செறிந்த சிலைகொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம் (1)
Hanuman sees Sita in Asokavanam in Rāvaṇan's Lanka and says, “O Beautiful goddess with dark thick hair! I am your sla…
அல்லியம்பூ மலர்க்கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம் சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க் கண் மடமானே எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில் மல்லிகை மா மாலைகொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் (2)
“O you with hair adorned with lovely alli blossoms, I bow to your feet. This is my request. Show me your grace and li…
கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழியக் குலக்குமரா காடு உறையப் போ என்று விடை கொடுப்ப இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓர் அடையாளம் (3)
“Kaikeyi, the queen of Dasharatha, confused in her mind, asked for two boons from Dasharatha and the king with a sorr…
வார் அணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம் தேர் அணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய் கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கைதன்னிற் சீர் அணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் (4)
“O Vaidehi, beautiful one with breasts are encircled by a band, this is my request to you, the royal queen of the kin…
மான் அமரும் மென்நோக்கி வைதேவீ விண்ணப்பம் கான் அமரும் கல்-அதர் போய்க் காடு உறைந்த காலத்துத் தேன் அமரும் பொழிற் சாரல் சித்திரகூடத்து இருப்பப் பால்மொழியாய் பரதநம்பி பணிந்ததும் ஓர் அடையாளம் (5)
“O Vaidehi, as lovely as a doe, with words as sweet as milk, this is my request. When you and Rāma went to the forest…
சித்திரகூடத்து இருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட அத்திரமே கொண்டு எறிய அனைத்து உலகும் திரிந்து ஓடி வித்தகனே இராமாவோ நின் அபயம் என்று அழைப்ப அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் (6)
“When you were in Chithrakuḍam, a small crow came and touched your breast. You were scared when Rāma shot an arrow at…
மின் ஒத்த நுண்- இடையாய் மெய்- அடியேன் விண்ணப்பம் பொன் ஒத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட நின் அன்பின் வழிநின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப் பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் (7)
“This is the request of your true slave to you whose waist is as thin as lightning. Hear me. When a golden deer came …
மைத் தகு மா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம் ஒத்த புகழ் வானரக்கோன் உடன் இருந்து நினைத் தேட அத்தகு சீர் அயோத்தியர்கோன் அடையாளம் இவை மொழிந்தான் இத் தகையால் அடையாளம் ஈது அவன் கைம் மோதிரமே (8)
“O Vaidehi, with hair dark as kohl decorated with beautiful flowers, this is request of me, the monkey chief. The kin…
திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெரும் சபை நடுவே வில் இறுத்தான் மோதிரம் கண்டு ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சிமேல் வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே (9)
Sita saw the ring of Rāma, praised in all directions. She thought of the day when Rāma came to Janaka’s palace, broke…
வார் ஆரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு சீர் ஆரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம் பார் ஆரும் புகழ்ப் புதுவைப் பட்டர்பிரான் பாடல் வல்லார் ஏர் ஆரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே (10) --------------- திருமாலைக் கண்ட சுவடு உரைத்தல்
The Paṭṭarpiran of Puduvai, praised by all the world, described in pāsurams the signs by which the famous Hanuman con…
கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள்முடியன் எதிர் இல் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் அதிரும் கழற் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய் உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டார் உளர் (1)
If you want to find the matchless Rāma whose bright crown shines like the rays of thousands of suns joined together, …
நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச்சக்கரம் ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் காந்தள் முகிழ் விரற் சீதைக்கு ஆகிக் கடுஞ்சிலை சென்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன்தன் வேள்வியிற் கண்டார் உளர் (2)
If you want to find the famous Rāma carrying a sword, conch, club, bow that twangs loudly as it shoots arrows and div…
கொலையானைக் கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருது அழியச் சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தைக் கண்டார் உளர் (3)
If you are searching anxiously for him who broke the tusks of the murderous elephant, killed the Kauravas fighting in…
தோயம் பரந்த நடுவு சூழலிற் தொல்லை வடிவு கொண்ட மாயக் குழவி யதனை நாடுறில் வம்மின் சுவடு உரைக்கேன் ஆயர் மடமகள் பின்னைக்கு ஆகி அடல் விடை ஏழினையும் வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டார் உளர் (4)
If you are searching for the magical child, the ancient god resting in the middle of the ocean, come, I will tell you…
நீர் ஏறு செஞ்சடை நீலகண்டனும் நான்முகனும் முறையால் சீர் ஏறு வாசகஞ் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல் வார் ஏறு கொங்கை உருப்பிணியை வலியப் பிடித்துக்கொண்டு தேர் ஏற்றிச் சேனை நடுவு போர் செய்யச் சிக்கெனக் கண்டார் உளர் (5)
If you are searching for the divine Thirumāl, praised by Nānmuhan and Shiva with red jaṭa where the Ganges flows, go …
பொல்லா வடிவு உடைப் பேய்ச்சி துஞ்சப் புணர்முலை வாய்மடுக்க வல்லானை மா மணிவண்ணனை மருவும் இடம் நாடுதிரேல் பல்லாயிரம் பெருந் தேவிமாரொடு பௌவம் எறி துவரை எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் (6)
If you are searching for the place of the handsome sapphire-colored god, the heroic one who drank milk from the breas…
வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம் ஏந்து கையன் உள்ள இடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன் வெள்ளைப் புரவிக் குரக்கு வெல்கொடித் தேர்மிசை முன்புநின்று கள்ளப் படைத்துணை ஆகிப் பாரதம் கைசெய்யக் கண்டார் உளர் (7)
If you want to know the place of your god with a sounding white conch in his left hand and a divine shining discus in…
நாழிகை கூறு இட்டுக் காத்து நின்ற அரசர்கள்தம் முகப்பே நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன் ஆழிகொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திரதன் தலையைப் பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் உளர் (8)
If you want to see the young son of Devaki, Kaṇṇan, the lord who hid the light of the sun with his discus for thirty …
மண்ணும் மலையும் மறிகடல்களும் மற்றும் யாவும் எல்லாம் திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் எண்ணற்கு அரியது ஓர் ஏனம் ஆகி இருநிலம் புக்கு இடந்து வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் (9)
If you are searching anxiously for our lord who swallowed the earth, the mountains, the wavy oceans and everything el…
கரிய முகில் புரை மேனி மாயனைக் கண்ட சுவடு உரைத்துப் புரவி முகம்செய்து செந்நெல் ஓங்கி விளை கழனிப் புதுவைத் திருவிற் பொலி மறைவாணன் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும் பரவும் மனம் உடைப் பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வர்களே (10) ---------------- திருமாலிருஞ்சோலை-1
The Paṭṭarpiran of Puduvai where good paddy grows in fertile fields described in pāsurams the places where the devote…
அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரைக் குலம் பாழ் படுத்துக் குலவிளக்காய் நின்ற கோன் மலை சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ- மகளிர்கள் ஆடும் சீர்ச் சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ் சோலையே (1)
The mountain of him, the king, the light of the family of the cowherds who destroyed the clan of the Rakshasas when t…
வல்லாளன் தோளும் வாள் அரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி செல்லா நிற்கும் சீர்த் தென் திருமாலிருஞ் சோலையே (2)
The mountain of the divine god who cut off the thousand arms of his strong enemy Baṇasuran, the ten heads of Ravaṇan …
தக்கார் மிக்கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரைத் தெக்கு ஆம் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை எக் காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை அக் கான் நெறியை மாற்றும் தண் மாலிருஞ் சோலையே (3)
The golden mountain of the glorious lord who leads the noble, the great and the evil on the right paths is cool Thiru…
ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம் கோனார்க்கு ஒழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை வான் நாட்டினின்று மாமலர்க் கற்பகத் தொத்து இழி தேன் ஆறு பாயும் தென் திருமாலிருஞ் சோலையே (4)
ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம் கோனார்க்கு ஒழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை வான் நாட்டினின்று மாமலர்க் கற்பகத் த…
ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன்தன் ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை கரு வாரணம் தன் பிடி துறந்து ஓடக் கடல்வண்ணன் திருவாணை கூறத் திரியும் தண் மாலிருஞ் சோலையே (5)
ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன்தன் ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை கரு வாரணம் தன் பிடி துறந்து …
ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரைச் சாவத் தகர்த்த சாந்து அணி தோள் சதுரன் மலை ஆவத்-தனம் என்று அமரர்களும் நன் முனிவரும் சேவித்திருக்கும் தென் திருமாலிருஞ் சோலையே (6)
The mountain of the clever god with lovely arms smeared with sandal paste who killed the wrestlers sent by his uncle …
மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின்மேல் முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை கொல் நவில் கூர்வேற் கோன் நெடுமாறன் தென்கூடற் கோன் தென்னன் கொண்டாடும் தென் திருமாலிருஞ் சோலையே (7)
The mountain of the lord who gave water to the horses and caused a flood and drove the chariot in the battle for his …
குறுகாத மன்னரைக் கூடு கலக்கி வெங் கானிடைச் சிறுகால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லிச் சிறுகாலைப் பாடும் தென் திருமாலிருஞ் சோலையே (8)
The golden mountain of the precious god who if enemy kings do not approach him, destroys their countries and makes th…
சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள் அந்திப் பலி கொடுத்து ஆவத்-தனம் செய் அப்பன் மலை இந்திர-கோபங்கள் எம்பெருமான் கனி- வாய் ஒப்பான் சிந்தும் புறவிற் தென் திருமாலிருஞ் சோலையே (9)
The mountain of the dear one where Bhudams offer copious food with red blood and give sacrifices in the evening and w…
எட்டுத் திசையும் எண்- இறந்த பெருந் தேவிமார் விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை பட்டிப் பிடிகள் பகடு உரிஞ்சிச் சென்று மாலைவாய்த் தெட்டித் திளைக்கும் தென் திருமாலிருஞ் சோலையே (10)
The mountain of the faultless god who stays in majesty surrounded by his many beautiful queens shining in all the eig…
மருதப் பொழில் அணி மாலிருஞ் சோலை மலைதன்னைக் கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான்தன்னை விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல் கருதி உரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பரே (11) ---------- திருமாலிருஞ்சோலை-2
Vishṇuchittan of Villiputhur, always the devotee of the dark ocean-colored god, composed pāsurams about the beautiful…
உருப்பிணி நங்கைதன்னை மீட்பான் தொடர்ந்து ஓடிச் சென்ற உருப்பனை ஓட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன் மலை பொருப்பிடைக் கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு விருப்பொடு பொன் வழங்கும் வியன் மாலிருஞ் சோலையதே (1)
The mountain of the heroic god who tied Rukman on his chariot when he came to take his sister back after Kaṇṇan took …
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையில் மடிய வளர்ந்த மணிவண்ணன் மலை நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியைச் செஞ்சுடர் நா வளைக்கும் திருமாலிருஞ் சோலையதே (2)
The mountain of the sapphire-colored lord who killed Kamsan, Kālingan, the elephant Kuvalayabeeḍam, the marudu trees …
மன்னு நரகன்தன்னைச் சூழ் போகி வளைத்து எறிந்து கன்னி மகளிர்தம்மைக் கவர்ந்த கடல்வண்ணன் மலை புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று பொன்அரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ் சோலையதே (3)
The mountain of the dark ocean-colored god who killed Narahasuran with his craftiness and attracted and married his y…
மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை கோவலர் கோவிந்தனைக் குற மாதர்கள் பண் குறிஞ்சிப் பா ஒலி பாடி நடம் பயில் மாலிருஞ் சோலையதே (4)
The mountain of the matchless lord, strong as a bull, who released Anirudhan from Vaṇan's prison and arranged the mar…
பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன்தன்னை அலைவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை குல மலை கோல மலை குளிர் மா மலை கொற்ற மலை நில மலை நீண்ட மலை திருமாலிருஞ் சோலையதே (5)
The mountain of the handsome Kaṇṇan adorned with jewels who relieved Sisupalan of his afflictions even though he blam…
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர்தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை பாண் தகு வண்டினங்கள் பண்கள் பாடி மதுப் பருகத் தோண்டல் உடைய மலை தொல்லை மாலிருஞ் சோலையதே (6)
The mountain of our dear Kaṇṇan who made the hundred wives of the Kauravas suffer like Panchali, the wife of the five…
கனங்குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம் கழு ஏற்றுவித்த ஏழிற் தோள் எம் இராமன் மலை கனம் கொழி தெள் அருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம் இனம் குழு ஆடும் மலை எழில் மாலிருஞ் சோலையதே (7)
The mountain of the lord who as Rāma, destroyed the Rakshasa clan with his strong arms for the sake of his thick-hair…
எரி சிதறும் சரத்தால் இலங்கையினைத் தன்னுடைய வரி சிலை வாயிற் பெய்து வாய்க் கோட்டம் தவிர்த்து உகந்த அரையன் அமரும் மலை அமரரொடு கோனும் சென்று திரிசுடர் சூழும் மலை திரு மாலிருஞ் சோலையதே (8)
The mountain of the god who destroyed Lanka with his fiery arrows, bending his bow heroically, is Thirumālirunjolai w…
கோட்டுமண் கொண்டு இடந்து குடங்கையில் மண் கொண்டு அளந்து மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடும் விமலன் மலை ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை என்று ஓட்டரும் தண் சிலம்பாறு உடை மாலிருஞ் சோலையதே (9)
The mountain of the faultless lord who as a boar playfully dug up the earth with his tusk, measured the earth as Vama…
ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின் இலக ஆயிரம் பைந்தலைய அனந்த சயனன் ஆளும் மலை ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும் ஆயிரம் பூம் பொழிலும் உடை மாலிருஞ் சோலையதே (10)
The mountain of the faultless one who rests on Adishesha with a thousand shining crowns and a thousand arms is beauti…
மாலிருஞ்சோலை என்னும் மலையை உடைய மலையை நாலிரு மூர்த்திதன்னை நால் வேதக்-கடல் அமுதை மேல் இருங் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே (11) -------------- திருக்கோட்டியூர்
Vishṇuchithan described and praised the god of the mountain Thirumālirunjolai, the ocean of nectar, the creator of th…
நா அகாரியம் சொல் இலாதவர் நாள்தொறும் விருந்து ஓம்புவார் தேவ காரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர் மூவர்காரியமும் திருத்தும் முதல்வனைச் சிந்தியாத அப் பாவகாரிகளைப் படைத்தவன் எங்ஙனம் படைத்தான் கொலோ (1)
Thirukkoṭṭiyur is where devotees live CHECK who never say wrong things, feed guests every day, serve the god, and lea…
குற்றம் இன்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கு அனுகூலராய்ச் செற்றம் ஒன்றும் இலாத வண்கையி னார்கள் வாழ் திருக்கோட்டியூர்த் துற்றி ஏழ் உலகு உண்ட தூ மணி வண்ணன் தன்னைத் தொழாதவர் பெற்ற தாயர் வயிற்றினைப் பெரு நோய்செய்வான் பிறந்தார்களே (2)
In Thirukkoṭṭiyur the faultless devotees do only good deeds, do service to their gurus, never get angry and are gener…
வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும் திண்ணை சூழ் திருக்கோட்டியூர்த் திரு மாலவன் திருநாமங்கள் எண்ணக் கண்ட விரல்களால் இறைப் போதும் எண்ணகிலாது போய் உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக் கவளம் உந்துகின்றார்களே (3)
Thirukoṭṭiyur is filled with porches studded with beautiful precious diamonds and emeralds and filled with cool shado…
உரக மெல் அணையான் கையில் உறை சங்கம் போல் மட அன்னங்கள் நிரைகணம் பரந்து ஏறும் செங் கமல வயற் திருக்கோட்டியூர் நரகநாசனை நாவிற் கொண்டு அழை யாத மானிட சாதியர் பருகு நீரும் உடுக்குங் கூறையும் பாவம் செய்தன தாம் கொலோ (4)
Thirukoṭṭiyur is surrounded with fields filled with beautiful lotuses and flocks of white swans that are like the whi…
ஆமையின் முதுகத்திடைக் குதி கொண்டு தூ மலர் சாடிப் போய்த் தீமை செய்து இளவாளைகள் விளை யாடு நீர்த் திருக்கோட்டியூர் நேமி சேர் தடங்கையினானை நினைப்பு இலா வலி நெஞ்சு உடைப் பூமி-பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே (5)
In Thirukkoṭṭiyur young valai fish jump over the backs of turtles, knock over lovely flowers and play in the water mi…
பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால் ஏதம் ஒன்றும் இலாத வண்கையி னார்கள் வாழ் திருக்கோட்டியூர் நாதனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்கள் உழக்கிய பாத தூளி படுதலால் இவ் உலகம் பாக்கியம் செய்ததே (6)
Thirukoṭṭiyur is where devotees live praising Narasimhan, and performing the five sacrifices, never disturbed by wate…
குருந்தம் ஒன்று ஒசித்தானொடும் சென்று கூடி ஆடி விழாச் செய்து திருந்து நான்மறையோர் இராப்பகல் ஏத்தி வாழ் திருக்கோட்டியூர்க் கருந் தடமுகில் வண்ணனைக் கடைக் கொண்டு கைதொழும் பத்தர்கள் இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ (7)
In Thirukoṭṭiyur how much tapas must have been done by those living there, where Vediyars recite the four Vedas night…
நளிர்ந்த சீலன் நயாசலன் அபி மான துங்கனை நாள்தொறும் தெளிந்த செல்வனைச் சேவகங் கொண்ட செங்கண் மால் திருக்கோட்டியூர்க் குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ளகிலார்களே (8)
Thirukkoṭṭiyur is where the lovely-eyed Thirumāl made the good king Abhimanadungan his devotee so that he praised and…
கொம்பின் ஆர் பொழில்வாய்க் குயிலினம் கோவிந்தன் குணம் பாடு சீர்ச் செம்பொன் ஆர் மதில் சூழ் செழுங் கழ னி உடைத் திருக்கோட்டியூர் நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால் எம்பிரான் தன சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வனே (9)
Thirukkoṭṭiyur is filled with flourishing fields and surrounded with beautiful walls that are like pure gold. The cuc…
காசின் வாய்க் கரம் விற்கிலும் கர வாது மாற்று இலி சோறு இட்டுத் தேச வார்த்தை படைக்கும் வண்கையி னார்கள் வாழ் திருக்கோட்டியூர்க் கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று பேசுவார் அடியார்கள் எம்தம்மை விற்கவும் பெறுவார்களே (10)
Thirukoṭṭiyur is where generous people live, giving food to others without hiding it even if they need to sell whatev…
சீத நீர் புடை சூழ் செழுங் கழனி உடைத் திருக்கோட்டியூர் ஆதியான் அடியாரையும் அடிமையின்றித் திரிவாரையும் கோதில் பட்டர்பிரான் குளிர் புதுவைமன் விட்டுசித்தன் சொல் ஏதம் இன்றி உரைப்பவர் இருடீகேசனுக்கு ஆளரே (11) ----------------- பத்தராய் இறப்பார் பெறும் பேறு
If those wandering without serving as slaves to the ancient god in Thirukkoṭṭiyur surrounded by fertile fields and fl…
ஆசைவாய்ச் சென்ற சிந்தையர் ஆகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி வாச வார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லைக்கண் வாய் திறவாதே கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே (1)
Even if people have only thought of their mothers, fathers, children, and wives with fragrant hair, if they close the…
சீயினால் செறிந்து ஏறிய புண்மேல் செற்றல் ஏறிக் குழம்பு இருந்து எங்கும் ஈயினால் அரிப்பு உண்டு மயங்கி எல்லைவாய்ச் சென்று சேர்வதன் முன்னம் வாயினால் நமோ நாரணா என்று மத்தகத்திடைக் கைகளைக் கூப்பிப் போயினால் பின்னை இத் திசைக்கு என்றும் பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே (2)
If people who were never the devotees of Nārāyaṇan are sick and their wounds become putrid and swarm with flies, and …
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல் என்று சுற்றும் இருந்து ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன்னம் மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி ஆர்வம் என்பது ஓர் பூ இட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே (3)
If someone has collected and saved wealth and if his relatives come to him before his death and ask greedily, “Tell u…
மேல் எழுந்தது ஓர் வாயுக் கிளர்ந்து மேல் மிடற்றினை உள் எழ வாங்கிக் காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறிக் கண் உறக்கமது ஆவதன் முன்னம் மூலம் ஆகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள் எழ வாங்கி வேலை வண்ணனை மேவுதிர் ஆகில் விண்ணகத்தினில் மேவலும் ஆமே (4)
When someone is old, his breathing may become thin. His neck will be swelling with air. His legs and hands will be sh…
மடி வழி வந்து நீர் புலன்சோர வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே கடைவழி வாரக் கண்டம் அடைப்பக் கண் உறக்கமது ஆவதன் முன்னம் தொடை வழி உம்மை நாய்கள் கவரா சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார் இடைவழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே (5)
Before someone comes to the time of his death and the water he has drunk is spit out and the food that he ate is vomi…
அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினிற் சோதித்த பின்னைச் சங்கம் விட்டு அவர் கையை மறித்துப் பையவே தலை சாய்ப்பதன் முன்னம் வங்கம் விட்டு உலவும் கடற் பள்ளி மாயனை மதுசூதனை மார்பில் தங்க விட்டுவைத்து ஆவது ஓர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே (6)
Before someone loses the sense of his eyes, nose, mouth, ears and touch, and before his breath ceases, and before he …
தென்னவன் தமர் செப்பம் இலாதார் சே அதக்குவார் போலப் புகுந்து பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றிப் பின் முன் ஆக இழுப்பதன் முன்னம் இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி மன்னவன் மதுசூதனன் என்பார் வானகத்து மன்றாடிகள் தாமே (7)
Before the heartless messengers of Yama enter someone’s home like kidnappers, tie him with strong ropes and pull him …
கூடிக் கூடி உற்றார்கள் இருந்து குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து பாடிப் பாடி ஓர் பாடையில் இட்டு நரிப் படைக்கு ஒரு பாகுடம் போலே கோடி மூடி எடுப்பதன் முன்னம் கௌத்துவம் உடைக் கோவிந்தனோடு கூடி ஆடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே (8)
Before someone’s relatives gather together, speak only of his good qualities and not his faults, sing and sing, and p…
வாய் ஒரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர்க் குழிக் கண்கள் மிழற்றத் தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலற்ற தீ ஒரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்றம் ஆய் ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே (9)
Before someone cannot speak and his weakening eyes shed water and his mother, father and wife weep, and before fire t…
செத்துப் போவதோர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவபிரான்மேல் பத்தராய் இறந்தார் பெறும் பேற்றைப் பாழித் தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன் சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச் செய்த மாலை இவை பத்தும் வல்லார் சித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே (10) -------------- திருமாலின் நாமம் இடுதல்
Vishṇuchithan, the chief of Villiputhur, composed ten pāsurams which say that if people worship the lord and ask for …
காசும் கறை உடைக் கூறைக்கும் அங்கு ஓர் கற்றைக்கும் ஆசையினால் அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள் கேசவன் பேர் இட்டு நீங்கள் தேனித்து இருமினோ நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (1)
O poor ones! You gave your children mean names of the rich because you wanted to get money, clothes with decorations …
அங்கு ஒரு கூறை அரைக்கு உடுப்பதன் ஆசையால் மங்கிய மானிட சாதியின் பேர் இடும் ஆதர்காள் செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்தக்கால் நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (2)
O poor ones! You name your children the names of people even if they are not good, because you wish them to give you …
உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேர் இட்டீர்? பிச்சை புக்கு ஆகிலும் எம்பிரான் திருநாமமே நச்சுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (3)
Why did you name your children with the names of those who give you oil to put on your children’s hair, and give orna…
மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை மானிட சாதியின் பேர் இட்டால் மறுமைக்கு இல்லை வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால் நான் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (4)
You will not be blessed in your next birth if you give that child the name of another person than god. If you call yo…
மலம் உடை ஊத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை மலம் உடை ஊத்தையின் பேர் இட்டால் மறுமைக்கு இல்லை குலம் உடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால் நலம் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (5)
You will not be blessed in your next birth if you give the name of another human born from an unclean womb. If you ca…
நாடும் நகரும் அறிய மானிடப் பேர் இட்டுக் கூடி அழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே சாடு இறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (6)
Do not give human names to your children like others joining with the people of your country and town and celebrating…
மண்ணிற் பிறந்து மண் ஆகும் மானிடப் பேர் இட்டு அங்கு எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள் கண்ணுக்கு இனிய கருமுகில் வண்ணன் நாமமே நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (7)
O, ignorant ones! Your children are human and they were born from unclean bodies and will return to the earth. You ga…
நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால் நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில் அழுங்கிப் போம் செம்பெருந் தாமரைக் கண்ணன் பேர் இட்டு அழைத்தக்கால் நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (8)
If you give your children the names of village people such as “nambi, pimbi,” those “manbu, pimbu” will be forgotten …
ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள் மூத்திரப் பிள்ளையை என் முகில் வண்ணன் பேர் இட்டு கோத்துக் குழைத்துக் குணாலம் ஆடித் திரிமினோ நாத் தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (9)
Giving the name of the dark cloud-colored god to your children born in an unclean body is like pouring nectar into a …
சீர் அணி மால் திருநாமமே இடத் தேற்றிய வீர் அணி தொல்புகழ் விட்டுசித்தன் விரித்த சொல் ஓர் அணி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் வல்லவர் பேர் அணி வைகுந்தத்து என்றும் பேணி இருப்பரே (10) ------------ கண்டம் என்னும் திருப்பதி
Vishṇuchithan from the ancient village of Veeraṇai, is praised by all, always, and he worshipped the divine name of T…
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த எம் தாசரதி போய் எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடு வினை களைந்திடுகிற்கும் கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற கண்டம் என்னும் கடிநகரே (1)
Dasharatha’s son, Rāma who cut off the heads of Ravaṇan and the nose of his sister Surpanakha stayed in Kaṇḍam and ru…
சலம் பொதி உடம்பின் தழல் உமிழ் பேழ்வாய்ச் சந்திரன் வெங்கதிர் அஞ்ச மலர்ந்து எழுந்து அணவும் மணிவண்ண உருவின் மால் புருடோத்தமன் வாழ்வு நலம் திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும் கலந்து இழி புனலால் புகர் படு கங்கைக் கண்டம் என்னும் கடிநகரே (2)
Divine Kaṇḍam, the Thiruppadi where the water of the southern Ganges flows mixed with kondrai blossoms that decorate …
அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்தி அழல் உமிழ் ஆழிகொண்டு எறிந்து அங்கு எதிர் முக அசுரர் தலைகளை இடறும் எம் புருடோத்தமன் இருக்கை சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளிற் சங்கரன் சடையினிற் தங்கிக் கதிர் முகம் மணிகொண்டு இழி புனற் கங்கைக் கண்டம் என்னும் கடிநகரே (3)
Divine Kaṇḍam is where the Ganges flows carrying shining diamonds from the hand of the four-headed Nānmuhan onto the …
இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம் புருடோத்தமன் நகர்தான் இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும் இரு கரை உலகு இரைத்து ஆடக் கமை உடைப் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடிநகரே (4)
Divine Kaṇḍam is on the banks of the famous Ganges that descends from the Himalaya mountains and flows to the shore o…
உழுவது ஓர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும் மழுவொடு வாளும் படைக்கலம் உடைய மால் புருடோத்தமன் வாழ்வு எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழுது அளவினில் எல்லாம் கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடிநகரே (5)
Divine Kaṇḍam is on the banks of the Ganges and has the power to take away the sins of seven births in one moment. It…
தலைபெய்து குமுறிச் சலம் பொதி மேகம் சலசல பொழிந்திடக் கண்டு மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு அலைப்பு உடைத் திரைவாய் அருந்தவ முனிவர் அவபிரதம் குடைந்து ஆடக் கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடிநகரே (6)
Divine Kaṇḍam is on the banks of the Ganges with rolling waves where paddy fields flourish and rishis bathe and do po…
விற் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி மேல் இருந்தவன் தலை சாடி மற் பொருது எழப் பாய்ந்து அரையனை உதைத்த மால் புருடோத்தமன் வாழ்வு அற்புதம் உடைய ஐராவத மதமும் அவர் இளம்படியர் ஒண் சாந்தும் கற்பக மலரும் கலந்து இழி கங்கைக் கண்டம் என்னும் கடிநகரே (7)
Beautiful Kaṇḍam is on the bank of the Ganges whose fragrant water flows mixed with Karpaga flowers, with the sweet-s…
திரை பொரு கடல் சூழ் திண்மதிற் துவரை வேந்து தன் மைத்துனன்மார்க்காய் அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கைக் கண்டம் என்னும் கடிநகரே (8)
Beautiful Kaṇḍam is on the banks of the Ganges where the fragrance of sacrifices spreads on both shores and their smo…
வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இடம் உடை வதரி இடவகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை தடவரை அதிரத் தரணி விண்டு இடியத் தலைப்பற்றிக் கரை மரம் சாடிக் கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக் கண்டம் என்னும் கடிநகரே (9)
The Thiruppadi of Purshothaman who stays in SāḷakkiRāmam, Vaikuṇṭam, Dwaraga, Ayodhya, Adari and northern Madhura is …
மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் மூன்று எழுத்து ஆக்கி மூன்று எழுத்தை ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய எம் புருடோத்தமன் இருக்கை மூன்று அடி நிமிர்த்து மூன்றினிற் தோன்றி மூன்றினில் மூன்று உரு ஆனான் கான் தடம்பொழில் சூழ் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடிநகரே (10)
The lord who is all three gods, who measured the world with three footsteps, the Purushothaman who gives his grace to…
பொங்கு ஒலி கங்கைக் கரை மலி கண்டத்து உறை புருடோத்தமன் அடிமேல் வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க் கோன் விட்டுசித்தன் விருப்பு உற்றுத் தங்கிய அன்பால் செய் தமிழ்- மாலை தங்கிய நா உடையார்க்குக் கங்கையிற் திருமால் கழலிணைக் கீழே குளித்திருந்த கணக்கு ஆமே (11) ------------------ திருவரங்கம் (1)
Vishṇuchithan, the chief of Villiputhur who has no troubles in his life, composed with devotion ten Tamil pāsurams on…
மா தவத்தோன் புத்திரன் போய் மறிகடல்வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தான் ஊர் தோதவத்தித் தூய் மறையோர் துறைபடியத் துளும்பி எங்கும் போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே (1)
The Thiruppadi of him who gave life to the rishi Shantipini’s son after he had died in the wave-filled ocean as an of…
பிறப்பு அகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும் இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்த உறைப்பன் ஊர் மறைப் பெருந் தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை அளித்திருப்பார் சிறப்பு உடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே (2)
The Thiruppadi of the lord who brought the four children of his guru back to life quickly when they could not be aliv…
மருமகன் தன் சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார் உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தான் ஊர் திருமுகமாய்ச் செங்கமலம் திருநிறமாய்க் கருங்குவளை பொரு முகமாய் நின்று அலரும் புனல் அரங்கம் என்பதுவே (3)
The Thiruppadi of the lord who protected the clan of his son-in-law and gave life to all his in-laws so that they wou…
கூன் தொழுத்தை சிதகு உரைப்பக் கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தான் ஊர் தேன்தொடுத்த மலர்ச் சோலைத் திருவரங்கம் என்பதுவே (4)
The Thiruppadi of Thirumāl who was born as Rāma, gave up his kingdom, left his own mother and went to the forest and …
பெருவரங்கள் அவைபற்றிப் பிழக்கு உடைய இராவணனை உரு அரங்கப் பொருது அழித்து இவ் உலகினைக் கண்பெறுத்தான் ஊர் குரவு அரும்பக் கோங்கு அலரக் குயில் கூவும் குளிர் பொழில் சூழ் திருவரங்கம் என்பதுவே என் திருமால் சேர்விடமே (5)
The Thiruppadi of Thirumāl who protects this world and fought with his enemy, the strong, proud Ravaṇa, the receiver …
கீழ் உலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே ஆழி விடுத்து அவருடைய கரு அழித்த அழிப்பன் ஊர் தாழை- மடல் ஊடு உரிஞ்சித் தவள வண்ணப் பொடி அணிந்து யாழின் இசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே (6)
The Thiruppadi of him who went to the underworld, and threw his discus and destroyed the Asurans so that their dynast…
கொழுப்பு உடைய செழுங்குருதி கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப் பிழக்கு உடைய அசுரர்களைப் பிணம் படுத்த பெருமான் ஊர் தழுப்பு அரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு தெழிப்பு உடைய காவிரி வந்து அடிதொழும் சீர் அரங்கமே (7)
The Thiruppadi of the highest one who fought and destroyed all the Asurans as their red blood bubbled and flowed out …
வல் எயிற்றுக் கேழலுமாய் வாள்எயிற்றுச் சீயமுமாய் எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தான் ஊர் எல்லியம் போது இருஞ்சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி மல்லிகை வெண்சங்கு ஊதும் மதில் அரங்கம் என்பதுவே (8)
The Thiruppadi of him who took the forms of a boar with strong teeth to dig up the immeasurable earth and of a lion w…
குன்று ஆடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரைகடல் போல் நின்று ஆடு கணமயில் போல் நிறம் உடைய நெடுமால் ஊர் குன்று ஊடு பொழில் நுழைந்து கொடி இடையார் முலை அணவி மன்று ஊடு தென்றல் உலாம் மதில் அரங்கம் என்பதுவே (9)
The Thirupadi of the tall Neḍumāl. who has the lovely color of a beautiful dancing peacock, the blue color of the sou…
பரு வரங்கள் அவைபற்றிப் படை ஆலித்து எழுந்தானைச் செரு அரங்கப் பொருது அழித்த திருவாளன் திருப்பதிமேல் திருவரங்கத் தமிழ்-மாலை விட்டுசித்தன் விரித்தன கொண்டு இருவர் அங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே (10) -------------- திருவரங்கம் (2)
Vishṇuchithan composed a garland of ten Tamil pāsurams describing the divine Srirangam, the Thiruppadi of the auspici…
மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய் வானோர் வாழச் செரு உடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட திருமால் கோயில் திருவடிதன் திருஉருவும் திருமங்கை மலர்க்கண்ணும் காட்டி நின்று உரு உடைய மலர்நீலம் காற்று ஆட்ட ஒலிசலிக்கும் ஒளி அரங்கமே (1)
The Thirupadi of the divine Thirumāl, who gave his kingdom to his brother Bharathan, went to the forest, lived as a s…
தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல் என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் மன் உடைய விபீடணற்கா மதில் இலங்கைத் திசைநோக்கி மலர்க்கண் வைத்த என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆள் ஆவரே? (2)
Even if Lakshmi complains to her beloved that his devotees do things that are wrong he answers her, “My devotees will…
கருள் உடைய பொழில் மருதும் கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும் உருள் உடைய சகடரையும் மல்லரையும் உடைய விட்டு ஓசை கேட்டான் இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே (3)
Our lord who destroyed the Asurans when they came as marudu trees in the dark groves, the rutting elephant Kuvalayabe…
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணிசெய்யத் துவரை என்னும் மதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில் புது நாள்மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றிற் பூவே போல்வான் பொது-நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே (4)
The temple of Thirumāl, our Maṇavāḷar who stays in Duvaṛapuri with sixteen thousands wives serving him is lovely Srir…
ஆமையாய்க் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய் நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்த் தக்கணையாய்த் தானும் ஆனான் சேமம் உடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில் பூ மருவிப் புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே (5)
The matchless lord who took the form of a turtle, who is the Ganges, the deep ocean, earth, large mountains, Nānmuhan…
மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னர் ஆக்கி உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட உயிராளன் உறையும் கோயில் பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய் முனிவர்களும் பரந்த நாடும் சித்தர்களும் தொழுது இறைஞ்சத் திசை-விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே (6)
The Thiruppadi of the lord, giver of life to all, who made his brothers-in-laws kings and made Draupadi tie up her lo…
குறள் பிரமசாரியாய் மாவலியைக் குறும்பு அதக்கி அரசுவாங்கி இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த எம்மான் கோயில் எறிப்பு உடைய மணிவரைமேல் இளஞாயிறு எழுந்தாற்போல் அரவு-அணையின் சிறப்பு உடைய பணங்கள்மிசைச் செழுமணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே (7)
The Thiruppadi of the lord who took the form of a dwarf, tricking king Mahābali, took his kingdom and at once happily…
உரம் பற்றி இரணியனை உகிர்-நுதியால் ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றிச் சிரம் பற்றி முடி இடியக் கண் பிதுங்க வாய் அலறத் தெழித்தான் கோயில் உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட வரம்பு உற்ற கதிர்ச்செந்நெல் தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண் அரங்கமே (8)
The Thiruppadi of the lord who grasped the chest of Hiraṇyan, split it open with his sharp nails, pulled his hair, go…
தேவு உடைய மீனமாய் ஆமையாய் ஏனமரி குறளும் ஆகி மூ-உருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் சேவலொடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி ஊசல் ஆடிப் பூ-அணைமேல் துதைந்து எழு செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே (9)
His forms are a shining fish, a turtle, a boar, a lion, a dwarf, Parasurāman, Balarāman, Rāma, Kaṇṇan and Kalki, the …
செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன் செருச்செயும் நாந்தம் என்னும் ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன் விழுக்கை யாளன் இரவு ஆளன் பகலாளன் எனையாளன் ஏழு உலகப் பெரும் பேராளன் திருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே (10)
The generous lord rides on an eagle, defeats his enemies and rules the world. As bright as the sun, he carries the sw…
கைந்நாகத்து இடர் கடிந்த கனல் ஆழிப் படை உடையான் கருதும் கோயில் தென்நாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கத் திருப்பதியின் மேல் மெய்ந்நாவன் மெய் அடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார் எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ் இணை பிரியாது இருப்பர் தாமே (11) ---------------- எமபயம் நீக்கென அரங்கத்தரவணையானை வேண்டுதல்
Vishṇuchithan, the true devotee, composed ten Tamil pāsurams on divine Srirangam that is worshiped by southern and no…
துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்துத் துணை ஆவர் என்றே ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால் எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே (1)
When they are old, people go to others who are strong because they believe they will help them. Even though I am not …
சாம் இடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கரம் ஏந்தினானே நா மடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன்தமர்கள் போம் இடத்து உன்திறத்து எத்தனையும் புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை ஆம் இடத்தே உன்னைச் சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே (2)
Look, you need to come and help me when my time comes to an end, O god with a conch and discus in your hands. The Kin…
எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன்-தமர் பற்றும்போது நில்லுமின் என்னும் உபாயம் இல்லை நேமியும் சங்கமும் ஏந்தினானே சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும் அல்லற் படாவண்ணம் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே (3)
When the Kingarars, the messengers of Yama, come to take me, even if I run to the front door of my house and beg them…
ஒற்றை விடையனும் நான்முகனும் உன்னை அறியாப் பெருமையோனே முற்ற உலகு எல்லாம் நீயே ஆகி மூன்று எழுத்து ஆய முதல்வனே!ஓ அற்றது வாழ்நாள் இவற்கு என்று எண்ணி அஞ்ச நமன்தமர் பற்றல் உற்ற அற்றைக்கு நீ என்னைக் காக்கவேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே (4)
O lord, you are the whole world and you rest on the snake bed on the ocean in Srirangam. Shiva, the bull rider and Na…
பை அரவின் அணைப் பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம முர்த்தி உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியிற் தோற்றினாய் நான்முகனை வைய மனிசரைப் பொய் என்று எண்ணிக் காலனையும் உடனே படைத்தாய் ஐய இனி என்னைக் காக்கவேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே (5)
You, the highest one resting on Adishesha, the snake on the milky ocean, made Nanmuhan on your navel so that he could…
தண்ணனவு இல்லை நமன்தமர்கள் சாலக் கொடுமைகள் செய்யாநிற்பர் மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய் எண்ணலாம் போதே உன் நாமம் எல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும் அண்ணலே நீ என்னைக் காக்கவேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே (6)
O god, you are the earth, ocean, fire, wind and the sky! The Kingarars, the evil messengers of Yama come and cruelly …
செஞ்சொல் மறைப்பொருள் ஆகி நின்ற தேவர்கள் நாயகனே எம்மானே எஞ்சலில் என்னுடை இன் அமுதே ஏழ் உலகும் உடையாய் என் அப்பா வஞ்ச உருவின் நமன்தமர்கள் வலிந்து நலிந்து என்னைப் பற்றும்போது அஞ்சலை என்று என்னைக் காக்கவேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே (7)
O my father, you are the god of gods, the meaning of the Vedas and their pure words, you are my sweet faultless necta…
நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் நமன்தமர் பற்றி நலிந்திட்டு இந்த ஊனே புகே என்று மோதும்போது அங்கு உன்னை நான் ஒன்றும் நினைக்கமாட்டேன் வான் ஏய வானவர் தங்கள் ஈசா மதுரைப் பிறந்த மா மாயனே என் ஆனாய் நீ என்னைக் காக்கவேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே (8)
I do not know any of the magic you do. When the Kingarars, the messengers of Yama, come, make me suffer and take me t…
குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே எம்மானே அன்று முதல் இன்று அறுதியாக ஆதி அஞ் சோதி மறந்து அறியேன் நன்றும் கொடிய நமன்தமர்கள் நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது அன்று அங்கு நீ என்னைக் காக்கவேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே (9)
You my lord, are the cowherd who grazed the cows and carried Govardhana mountain to protected them. You are the ancie…
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானை வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் தூய மனத்தினர் ஆகி வல்லார் தூ மணிவண்ணனுக்கு ஆளர் தாமே (10) ---------------- தன் தகவின்மையை அறிவித்தல்
The chief of the Veyar, Vishṇuchittan of Villiputhur, composed ten Tamil pāsurams on Māyavan, Madhusudanan, Mādhavan,…
வாக்குத் தூய்மை இலாமையினாலே மாதவா உன்னை வாய்க்கொள்ள மாட்டேன் நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என்வசம் அன்று மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாயேலும் என் நாவினுக்கு ஆற்றேன் காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே (1)
O Mādhava, because I do not know how to say anything that is good I do not praise you but still my tongue says nothin…
சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்து கையானே பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால் வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது உழைக்கு ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய் ஊழி ஏழ் உலகு உண்டு உமிழ்ந்தானே (2)
I compose worthless pāsurams with my useless tongue. You carry a conch and a discus in your hands. Is it not the duty…
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப் புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன் வன்மை ஆவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே (3)
I do not know what is good or what is bad, all I know is to say, “Nāraṇā.” Before, I said unworthy things about you b…
நெடுமையால் உலகேழும் அளந்தாய் நின்மலா நெடியாய் அடியேனைக் குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறு இவை வேண்டுவதில்லை அடிமை என்னும் அக் கோயின்மையாலே அங்கங்கே அவை போதரும் கண்டாய் கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத்தானே (4)
You, the pure, tall god, measured this world with your body. Do not hesitate to make me your slave. Though I do not w…
தோட்டம் இல்லவள் ஆத் தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம் வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கீழே வளைப்பு-அகம் வகுத்துக்கொண்டு இருந்தேன் நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது நச்சுவார் பலர் கேழல் ஒன்று ஆகிக் கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் விழக் கொம்பு ஒசித்தானே (5)
I have placed all my property, wife, cattle, waterways, lands and wells and anything that I have under your golden fe…
கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான் உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம வேத நாள்மலர் கொண்டு உன பாதம் நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே (6)
O dear lord, dark colored creator of the four-headed Nānmuhan and the reason for everything, even if I, your devotee,…
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாங்கொல் என்று ஆசையினாலே உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள் துள்ளம் சோரத் துயில் அணை கொள்ளேன் சொல்லாய் யான் உன்னைத் தத்துறுமாறே (7)
You pretend to sleep on the white flood of ocean on a snake bed, but when I want to see you sleeping on the snake bed…
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறு அட்ட பிரானே எண்ணுவார் இடரைக் களைவானே ஏத்தரும் பெருங் கீர்த்தியினானே நண்ணி நான் உன்னை நாள்தொறும் ஏத்தும் நன்மையே அருள்செய் எம்பிரானே (8)
You carried the huge beautiful Govardhana mountain, used it as an umbrella and protected the cowherds and the cows fr…
நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமது ஆனாய் உம்பர்கோன் உலகு ஏழும் அளந்தாய் ஊழி ஆயினாய் ஆழி முன் ஏந்திக் கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே எம்பிரான் என்னை ஆள் உடைத் தேனே ஏழையேன் இடரைக் களையாயே (9)
You are my friend and the god of those who praise you with love. The god of the gods in the sky, you took the form of…
காமர் தாதை கருதலர் சிங்கம் காண இனிய கருங்குழற் குட்டன் வாமனன் என் மரகத வண்ணன் மாதவன் மதுசூதனன் தன்னைச் சேம நன்கு அமரும் புதுவையர் கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் நாமம் என்று நவின்று உரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே (10) -------------------- பண்டன்று பட்டினம் காப்பே
He is Mādhavan and Madhusudanan, the emerald-colored father of Kama, a lion to his enemies who took the form of a dar…
நெய்க் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும் கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்யப் போமின் மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார் பைக் கொண்ட பாம்பு- அணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே (1)
O diseases that stay and spread on our bodies like the ants that swarm around the ghee pot and climb on it, you go aw…
சித்திரகுத்தன் எழுத்தால் தென்புலக் கோன் பொறி ஒற்றி வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடி ஒளித்தார் முத்துத் திரைக் கடற் சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன் பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே (2)
The plan that Chitragupthan wrote by the order of Yama, the king of the southern direction, is canceled and the messe…
வயிற்றிற் தொழுவைப் பிரித்து வன்புலச் சேவை அதக்கிக் கயிற்றும் அக்கு ஆணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி எயிற்றிடை மண்கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான் பண்டு அன்று பட்டினம் காப்பே (3)
My lord who brought me from my mother’s womb helped me control the desires of my five senses, removed the craving of …
மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும் ஓர் வல்வினை கண்டீர் இங்குப் புகேன்மின் புகேன்மின் எளிது அன்று கண்டீர் புகேன்மின் சிங்கப் பிரான் அவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர் பங்கப்படாது உய்யப் போமின் பண்டு அன்று பட்டினம் காப்பே (4)
O diseases, you give pain to people because of their bad karma, but see, there is also bad karma for you. Do not ente…
மாணிக் குறள் உரு ஆய மாயனை என் மனத்துள்ளே பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் பிறிது இன்றி மாணிக்கப் பண்டாரம் கண்டீர் வலி வன் குறும்பர்கள் உள்ளீர் பாணிக்க வேண்டா நடமின் பண்டு அன்று பட்டினம் காப்பே (5)
O diseases, I made Māyan who took the form of a dwarf enter my mind and I kept him there with love. I have nothing el…
உற்ற உறுபிணி நோய்காள் உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின் பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர் அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ்வினைகாள் உமக்கு இங்கு ஓர் பற்றில்லை கண்டீர் நடமின் பண்டு அன்று பட்டினம் காப்பே (6)
O diseases that bring suffering to people, I will tell you something, listen. My body is the divine temple of him who…
கொங்கைச் சிறு வரை என்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு அழுந்திக் கிடந்து உழல்வேனை வங்கக் கடல் வண்ணன் அம்மான் வல்வினை ஆயின மாற்றிப் பங்கப் படாவண்ணம் செய்தான் பண்டு அன்று பட்டினம் காப்பே (7)
I was attracted, slipped and fell into the small cave that is called a woman’s breast. I plunged into it and could no…
ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்கல் இடுவித்து என்னுள்ளே பீதக வாடைப் பிரனார் பிரம குருவாகி வந்து போதில் கமல வன் நெஞ்சம் புகுந்து என் சென்னித் திடரிற் பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே (8)
Decorated with fine silk, he came to me as a divine guru, saved me from all my troubles, entered my heart that is lik…
உறகல் உறகல் உறகல் ஒண்சுடர் ஆழியே சங்கே அற எறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே இறவு படாமல் இருந்த எண்மர் உலோகபாலீர்காள் பறவை அரையா உறகல் பள்ளியறை குறிக்கொண்மின் (9)
Do not sleep, do not sleep, do not sleep, O bright shining discus, do not sleep. O conch, do not sleep. O Nanthaka sw…
அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து பரவைத் திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற பிரானைப் பரவுகின்றான் விட்டுசித்தன் பட்டினம் காவற் பொருட்டே (10) ----------- திருமாலிருஞ்சோலைப் பெருமானைப் போகவிடேன் எனல்
I, the poet Vishṇuchithan, praise the lord who came and entered my heart lying on his snake bed on the beautiful milk…
துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்துப் புக்கினிற் புக்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே? மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன்வயிற்றிற் சிக்கென வந்து பிறந்து நின்றாய்!திரு மாலிருஞ் சோலை எந்தாய் (1)
O father, lord of Thirumālirunjolai, I released myself from the sufferings of this world, became your devotee and saw…
வளைத்து வைத்தேன் இனிப் போகலொட்டேன் உன் தன் இந்திர-ஞாலங்களால் ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடைத் தீவினை தீர்க்கல் உற்றுத் தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தம் உடைத் திரு மாலிருஞ் சோலை எந்தாய் (2)
I embraced you, keep you in my heart. and will not allow you to leave me. If you hide yourself with your magical tric…
உனக்குப் பணி செய்திருக்கும் தவம் உடை யேன் இனிப் போய் ஒருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் புனத்தினைக் கிள்ளிப் புது அவி காட்டி உன் பொன்னடி வாழ்க என்று இனத்துக் குறவர் புதியது உண்ணும் எழில் மாலிருஞ் சோலை எந்தாய் (3)
I have done much tapas to serve you. If I go to another god and serve him, it will destroy your pride, god of beautif…
காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கு ஓர் நிழல் இல்லை நீர் இல்லை உன் பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன் தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கு ஓர் பொய்ச்சுற்றம் பேசிச் சென்று பேதம் செய்து எங்கும் பிணம்படுத்தாய் திரு மாலிருஞ் சோலை எந்தாய் (4)
O father, lord of Thirimālirunjolai, I suffered wandering many miles in this life. There is no shade for me here and …
காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலும் எழா மயிர்க் கூச்சும் அறா என தோள்களும் வீழ்வு ஒழியா மால் உகளாநிற்கும் என் மனனே உன்னை வாழத் தலைப்பெய்திட்டேன் சேல் உகளாநிற்கும் நீள் சுனை சூழ் திரு மாலிருஞ் சோலை எந்தாய் (5)
My feet do not have the strength to walk and the tears from my eyes do not stop. My body becomes weak and trembles. I…
எருத்துக் கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை மருத்துவனாய் நின்ற மா மணிவண்ணா மறு பிறவி தவிரத் திருத்தி உன் கோயிற் கடைப் புகப் பெய் திரு மாலிருஞ் சோலை எந்தாய் (6)
Shiva with his bull banner, Nanmuhan, Indra and all others do not know the cure for the sickness that is this birth. …
அக்கரை என்னும் அனத்தக் கடலுள் அழுந்தி உன் பேர் அருளால் இக்கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ் சேல் என்று கை கவியாய் சக்கரமும் தடக்கைகளும் கண்களும் பீதக ஆடையொடும் செக்கர் நிறத்துச் சிவப்புடையாய் திரு மாலிருஞ் சோலை எந்தாய் (7)
I was plunged in the sufferings of this world and now by your generous grace have been released from them. I am tired…
எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றொடு நாளை என்றே இத்தனை காலமும் போய்க் கிறிப்பட்டேன் இனி உன்னைப் போகலொட்டேன் மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய் சித்தம் நின்பாலது அறிதி அன்றே திரு மாலிருஞ் சோலை எந்தாய் (8)
I thought I could see you today or tomorrow. I suffered longing to see you for many ages and many eons. Now I will no…
அன்று வயிற்றிற் கிடந்திருந்தே அடி மை செய்யல் உற்றிருப்பன் இன்று வந்து இங்கு உன்னைக் கண்டுகொண்டேன் இனிப் போக விடுவதுண்டே? சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திருச் சக்கரம் அதனால் தென்றித் திசை திசை வீழச் செற்றாய் திரு மாலிருஞ் சோலை எந்தாய் (9)
Even when I was in my mother’s womb I wanted to serve you as a slave. I was born in this world and I found you— how c…
சென்று உலகம் குடைந்தாடும் சுனைத் திரு மாலிருஞ் சோலை தன்னுள் நின்ற பிரான் அடிமேல் அடிமைத் திறம் நேர்பட விண்ணப்பஞ் செய் பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புது வைக்கோன் விட்டுசித்தன் ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார் உல கம் அளந்தான் தமரே (10) -------- அடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித்தல்
Vishṇuchittan the chief of Puduvai that is filled with golden shining palaces, composed pāsurams about the lord of Th…
சென்னி ஓங்கு தண் திருவேங் கடம் உடையாய் உலகு தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே? (1)
You, Damodharan, the clever lord of the rich, lofty Thiruvenkaṭam hills, flourish and protect the world. I put the ma…
பறவை ஏறு பரமபுருடா நீ என்னைக் கைக்கொண்டபின் பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும்பதம் ஆகின்றதால் இறவு செய்யும் பாவக் காடு தீக்கொளீஇ வேகின்றதால் அறிவை என்னும் அமுத-ஆறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே (2)
You are the highest god who rides on the eagle Garuḍa. After you possessed me the ocean of my births dried up and now…
எம்மனா என் குலதெய்வமே என்னுடைய நாயகனே நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ் உலகினில் ஆர் பெறுவார்? நம்மன் போலே வீழ்த்து அமுக்கும் நாட்டில் உள்ள பாவம் எல்லாம் சும்மெனாதே கைவிட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே (3)
You, the god of my family, my master, entered my heart. Who could ever get the goodness that I have received? All the…
கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தாற்போல் உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக்கொண்டேன் கொடுமை செய்யும் கூற்றமும் என் கோல்-ஆடி குறுகப் பெறா தட வரைத் தோள் சக்கரபாணீ சார்ங்க விற் சேவகனே (4)
O lord with arms as strong as mountains and a discus and the bow saragam in your hands, you are the servant of your d…
பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தாற் போல் உன்னைக் கொண்டு என் நாவகம்பால் மாற்றின்றி உரைத்துக்கொண்டேன் உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் என் அப்பா என் இருடீகேசா என் உயிர்க் காவலனே (5)
You are my father, my Rishikeshan, and the protector of my life. Like someone who brightens gold by rubbing it on a t…
உன்னுடைய விக்கிரமம் ஒன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம்பால் சுவர்வழி எழுதிக்கொண்டேன் மன் அடங்க மழு வலங்கைக் கொண்ட இராம நம்பீ என்னிடை வந்து எம்பெருமான் இனி எங்குப் போகின்றதே? (6) 6
You are Rāma and the best among men. You carried an axe in your left hand when you came to the earth as Balarāma to r…
பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி போல் திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் மருப்பு ஒசித்தாய் மல் அடர்த்தாய் என்று என்று உன் வாசகமே உருப் பொலிந்த நாவினேனை உனக்கு உரித்து ஆக்கினையே (7)
O lord who broke the tusks of the elephant Kuvalayabeeḍam, . fought and defeated the wrestlers, like the king of the …
அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐது நொய்தாக வைத்து என் மனந்தனுள்ளே வந்து வைகி வாழச் செய்தாய் எம்பிரான் நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக் கண்கள் அசும்பு ஒழுக நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே (8)
You, a tall one with a discus, you came into my heart along with Adishesha and Garuḍāzhvar, stayed there and made me …
பனிக் கடலில் பள்ளி- கோளைப் பழகவிட்டு ஓடிவந்து என் மனக் கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ தனிக் கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே (9)
You left your snake bed on the cool ocean, came running to me, and now you stay in the ocean of my heart. You who are…
தட வரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடி போல் சுடர்- ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ வட தடமும் வைகுந்தமும் மதிற் துவராபதியும் இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே (10)
O, dear one, you, a light, stay in my heart like a shining lamp and are like a tall bright coral vine that grows on a…
வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டுசித்தன் மனத்தே கோயில்கொண்ட கோவலனைக் கொழுங்குளிர் முகில்வண்ணனை ஆயர்-ஏற்றை அமரர் கோவை அந்தணர்தம் அமுதத்தினைச் சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே (11) ----------- 2. ஆண்டாள் - திருப்பாவை (474 -503)
Vishṇuchithan, born in the tribe of the Veyar, praises him, the cowherd, the beautiful cool cloud-colored lord, the b…