143 passages · ~41 min read
Tap any verse to open it — original, meaning & audio.
தை ஒரு திங்களும் தரை விளக்கித் தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள் ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா உய்யவும் ஆம்கொலோ? என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன் வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே (1)
We clean the floor in the month of Thai and decorate it with beautiful kolams. In the month of Masi we use soft white…
வெள்ளை நுண் மணல்கொண்டு தெரு அணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா கள் அவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு கடல்வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி புள்ளினை வாய் பிளந்தான் எனப்து ஓர் இலக்கினிற் புக என்னை எய்கிற்றியே (2)
We decorate our front yard with soft white sand. We bathe at dawn when the sun comes out and make fire with sticks th…
மத்த நன் நறுமலர் முருக்க மலர் கொண்டு முப்போதும் உன் அடி வணங்கித் தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே கொத்து அலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினிற் புக என்னை விதிக்கிற்றியே (3)
I worship your feet all three times of the day placing fragrant umatham flowers and blossoms of murukkam on them. O M…
சுவரில் புராண நின் பேர் எழுதிச் சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும் கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும் காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே (4)
O Kamadeva, god without a body, I wrote your name on the wall, and I made a fish flag and gave it to you with horses,…
வானிடை வாழும் அவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த என் தட முலைகள் மானிடவர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே (5)
If people wish to give me away in marriage so that my round breasts belong to someone human instead of the pure lord …
உருவு உடையார் இளையார்கள் நல்லார் ஓத்து வல்லார்களைக் கொண்டு வைகல் தெருவிடை எதிர்கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காமதேவா கருவுடை முகில் வண்ணன் காயாவண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத் திரு உடை முகத்தினிற் திருக் கண்களால் திருந்தவே நோக்கு எனக்கு அருளு கண்டாய் (6)
I am doing nombu on the streets where you will be going with beautiful young girls who know the sastras, O Kamadeva. …
காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து கட்டி அரிசி அவல் அமைத்து வாய் உடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே உன்னை வணங்குகின்றேன் தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் சாய் உடை வயிறும் என் தட முலையும் தரணியில்-தலைப்புகழ் தரக்கிற்றியே (7)
I offer paddy, sugarcane, cooked rice with brown sugar and aval and worship you reciting the manthras from the sastra…
மாசு உடை உடம்பொடு தலை உலறி வாய்ப்புறம் வெளுத்து ஒருபோதும் உண்டு தேசு உடைத் திறல் உடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய் பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான் பெண்மையைத் தலை உடைத்து ஆக்கும் வண்ணம் கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருளு கண்டாய் (8)
I don’t bathe when it is time for my nombu. I don’t comb my hair. I eat once a day and my mouth grows pale because I …
தொழுது முப்போதும் உன் அடி வணங்கித் தூமலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன் பழுது இன்றிப் பாற்கடல் வண்ணனுக்கே பணிசெய்து வாழப் பெறாவிடில் நான் அழுது அழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் உழுவதோர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து ஊட்டம் இன்றித் துரந்தால் ஒக்குமே (9)
I sprinkle flowers and worship you and bow to your feet three times a day. If I am unable to live for the dark ocean-…
கருப்பு வில் மலர்க் கணைக் காமவேளைக் கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற மருப்பினை ஒசித்துப் புள் வாய்பிளந்த மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை விருப்பு உடை இன்தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே (10) --------- சிற்றில் சிதையேல் எனல்
Vishṇuchithan Kodai, the chief of Puduvai where the mountain-like palaces shine composed pāsurams about the women who…
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை மாமி தன் மகன் ஆகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே காமன் போதரு காலம் என்று பங் குனி நாள் கடை பாரித்தோம் தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே (1)
O Nārāyaṇā praised with a thousand names, if Yashoda had given birth to you, it would be easy for us to love you beca…
இன்று முற்றும் முதுகு நோவ இருந்து இழைத்த இச் சிற்றிலை நன்றும் கண் உற நோக்கி நாம் கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய் அன்று பாலகன் ஆகி ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய் என்றும் உன் தனக்கு எங்கள்மேல் இரக் கம் எழாதது எம் பாவமே (2)
We worked all day to build these sand houses and our backs hurt. Look at our sand houses. They make us happy. O ancie…
குண்டு நீர் உறை கோளரீ மத யானை கோள் விடுத்தாய் உன்னைக் கண்டு மால் உறுவோங்களைக் கடைக் கண்களால் இட்டு வாதியேல் வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம் தெண் திரைக்கடற் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே (3)
You who sleep on the deep ocean took the form of a lion to destroy Hiraṇyan and saved Gajendra from the mouth of the …
பெய்யு மா முகில்போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்திரம் தான் கொலோ? நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம் செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே (4)
O lord, you have the color of the rain-giving clouds and your speech and deeds fascinate us. What spell does your bea…
வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப் பட வீதி வாய்த் தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தி யாகிலும் உன் தன் மேல் உள்ளம் ஓடி உருகலல்லால் உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய் கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே (5)
We made our sand houses with soft white sand and everyone on the street was amazed when they saw our lovely sand hous…
முற்று இலாத பிள்ளைகளோம் முலை போந்திலாதோமை நாள்தொறும் சிற்றில் மேல் இட்டுக் கொண்டு நீ சிறிது உண்டு திண்ணென நாம் அது கற்றிலோம் கடலை அடைத்து அரக் கர் குலங்களை முற்றவும் செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய சேவகா எம்மை வாதியேல் (6)
We are children, not grown-up yet, and our breasts haven’t grown out. You come here to knock over our little sand hou…
பேதம் நன்கு அறிவார்களோடு இவை பேசினால் பெரிது இன் சுவை யாதும் ஒன்று அறியாத பிள்ளைக ளோமை நீ நலிந்து என் பயன்? ஓத மா கடல்வண்ணா உன் மண வாட்டிமாரொடு சூளறும் சேது-பந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே (7)
If you talk to people who understand what you say, that will be all right, but if you talk to us who are young and do…
வட்ட வாய்ச் சிறுதூதையோடு சிறுசுளகும் மணலும் கொண்டு இட்டமா விளையாடுவோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்? தொட்டு உதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய் கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல்வண்ணனே (8)
We brought a pot, a winnowing fan and sand, built sand houses and are playing as we like. What is the use of destroyi…
முற்றத்து ஊடு புகுந்து நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக் கக் கடவையோ? கோவிந்தா முற்ற மண்ணிடம் தாவி விண் உற நீண்டு அளந்து கொண்டாய் எம்மைப் பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார்? (9)
O Govinda, you enter our yard and, smiling, not only destroy do you our little sand houses, you destroy our hearts as…
சீதை வாயமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன்தன் கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவு இன்றி வைகுந்தம் சேர்வரே (10) ------------ துகிலைப் பணித்தருள் எனல்
Vishṇuchithan Kodai, the chief of Villiputhur where Vediyar recite the Vedas composed pāsurams about what the cowherd…
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம் ஆழியஞ் செல்வன் எழுந்தான் அரவு-அணைமேல் பள்ளி கொண்டாய் ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம் தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தருளாயே (1)
We got up in the morning before the rooster crowed and came to bathe, plunging into the water. Our beloved sun god ri…
இது என் புகுந்தது இங்கு? அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்? மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல் குதிகொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய் (2)
Why did you come here, dear one, how did you come to this pond? You, the Māyan, as sweet as nectar, are adorned with …
எல்லே ஈது என்ன இளமை? எம் அனைமார் காணில் ஒட்டார் பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூங்குருந்து ஏறி இருத்தி வில்லால் இலங்கை அழித்தாய் வேண்டியது எல்லாம் தருவோம் பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்தருளாயே (3)
It is early morning. What is this childishness? If my relatives see this, they won’t like it, but you don’t think wha…
பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்து ஆடும் சுனையில் அரக்க நில்லா கண்ண நீர்கள் அலமருகின்றவா பாராய் இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே குரக்கு-அரசு ஆவது அறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய் 4
We plunge into the pond and bathe. We look everywhere and make sure no one is looking. Our eyes don’t want to stop sh…
காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி வேலைப் பிடித்து என்னைமார்கள் ஓட்டில் என்ன விளையாட்டோ? கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறியிராதே கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய் (5)
My brothers with spears will come running even if they hear that valai and kayal fish are biting our feet in the pond…
தடத்து அவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ விடத் தேள் எறிந்தாலே போல வேதனை ஆற்றவும் பட்டோம் குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்தருளாயே (6)
The stalks of the lotus plants that bloom in the pond hurt our feet and it feels as if scorpions were biting us. We c…
நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி-அல்லாதன செய்தாய் ஊரகம் சாலவும் சேய்த்தால் ஊழி எல்லாம் உணர்வானே ஆர்வம் உனக்கே உடையோம் அம்மனைமார் காணில் ஒட்டார் போர விடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்து ஏறியிராதே (7)
We are sitting in the water, tired while you are doing things you shouldn’t. Our houses are far away. You are the god…
மாமிமார் மக்களே அல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார் தூமலர்க் கண்கள் வளரத் தொல்லை இராத் துயில்வானே சேமமேல் அன்று இது சால சிக்கென நாம் இது சொன்னோம் கோமள ஆயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய் (8)
All the women, the mothers-in-law and others are here bathing. We couldn’t close our beautiful flower-like eyes in th…
கஞ்சன் வலைவைத்த அன்று காரிருள் எல்லிற் பிழைத்து நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற இக் கன்னியரோமை அஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் வஞ்சகப் பேய்ச்சிபால் உண்ட மசிமையிலீ கூறை தாராய் (9)
You escaped from the trap of Kamsan and survived in the dark night when you were born. Is it because you wanted to bo…
கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டைப் பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர்கோன் பட்டன் கோதை இன்னிசையால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய் மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கு இருப்பாரே (10) ------------ கூடல் இழைத்தல்
Vishṇuchithan Kodai the chief of Puduvai surrounded by golden palaces composed with beautiful music a garland of ten …
தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார் வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக் கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே (1)
He, the highest god worshipped by all good people, is the generous Azhahiya Maṇāḷan of Thirumālirunjolai. If you want…
காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் வாட்டம் இன்றி மகிழ்ந்து உறை வாமனன் ஓட்டரா வந்து என் கைப் பற்றித் தன்னொடும் கூட்டு மாகில் நீ கூடிடு கூடலே (2)
He took the form of Vāmanan stays happily in the forest in Thiruvenkaṭam and in Thirukaṇṇapuram. O kūḍal, if you want…
பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு ஆமகன் அணி வாணுதல் தேவகி மா மகன் மிகு சீர் வசுதேவர்தம் கோமகன் வரில் கூடிடு கூடலே (3)
He, the dear son of Devaki with a shining forehead and the wonderful son of famous Vasudeva is praised by Nānmuhan wh…
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட பூத்த நீள் கடம்பு ஏறிப் புகப் பாய்ந்து வாய்த்த காளியன்மேல் நடம் ஆடிய கூத்தனார் வரில் கூடிடு கூடலே (4)
He climbed and danced on the tall blooming kaḍamba tree and jumped into the pond to dance on the heads of strong Kāli…
மாட மாளிகை சூழ் மதுரைப் பதி நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு ஓடை மா மத யானை உதைத்தவன் கூடுமாகில் நீ கூடிடு கூடலே (5)
He killed the elephant Kuvalayābeeḍam whose forehead was decorated with an ornament. If you want him to come to the m…
அற்றவன் மருதம் முறிய நடை கற்றவன் கஞ்சனை வஞ்சனையிற் செற்றவன் திகழும் மதுரைப் பதிக் கொற்றவன் வரில் கூடிடு கூடலே (6)
He does not have any desires. After he had just learned to walk, he killed the Asurans when they came as marudam tree…
அன்று இன்னாதன செய் சிசுபாலனும் நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் வென்றி வேல் விறல்-கஞ்சனும் வீழ முன் கொன்றவன் வரில் கூடிடு கூடலே (7)
The lord defeated the evil Shishupālan, killed the Asurans when they came as tall marudu trees, the seven bulls, the …
ஆவல் அன்பு உடையார் தம் மனத்து அன்றி மேவலன் விரை சூழ் துவராபதிக் காவலன் கன்று மேய்த்து விளையாடும் கோவலன் வரில் கூடிடு கூடலே (8)
The protector of flourishing Dwarapuri who grazes the cows and plays with the cowherds does not enter the minds of pe…
கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று பண்டு மாவலிதன் பெரு வேள்வியில் அண்டமும் நிலனும் அடி ஒன்றினால் கொண்டவன் வரில் கூடிடு கூடலே (9)
In ancient times he went to the sacrifice of king Mahābali as a dwarf and measured the earth with one foot and the sk…
பழகு நான்மறையின் பொருளாய் மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம் அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் வரில் கூடிடு கூடலே (10)
Our lord, the inner meaning of the four Vedas, the handsome one whom the cowherd women loved in their hearts, saved G…
ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் கூடலைக் குழற் கோதை முன் கூறிய பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே (11) -------- குயிற் பத்து
The poet Vishṇuchithan Kodai composed ten pāsurams about how the curly-haired cowherd women praised the famous god of…
மன்னு பெரும்புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி-முடி மைந்தன் தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்கு உண்டே? புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவள-வாயன் வரக் கூவாய் (1)
The beautiful sapphire-colored lord is the eternal Madhavan praised by all in the world, the king decorated with a cr…
வெள்ளை விளிசங்கு இடங்கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான் உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும் கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதிக் களித்து இசை பாடும் குயிலே மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய் (2)
The faultless one who carries a sounding white conch in his left hand does not show his form to me. He entered my hea…
மாதலி தேர் முன்பு கோல்கொள்ள மாயன் இராவணன் மேல் சர-மாரி தாய் தலை அற்று அற்று வீழத் தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன் போது அலர் காவிற் புதுமணம் நாறப் பொறி வண்டின் காமரம் கேட்டு உன் காதலியோடு உடன் வாழ் குயிலே என் கருமாணிக்கம் வரக் கூவாய் (3)
As Rāma he fought with Ravaṇan while the charioteer Madali drove his chariot, and he cut off all the ten heads of Rav…
என்பு உருகி இன வேல் நெடுங் கண்கள் இமை பொருந்தா பல நாளும் துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர் தோணி பெறாது உழல்கின்றேன் அன்பு உடையாரைப் பிரிவு உறு நோயது நீயும் அறிதி குயிலே பொன் புரை மேனிக் கருளக் கொடி உடைப் புண்ணியனை வரக் கூவாய் (4)
My bones melt, my long spear-like eyes do not close. I have entered an ocean of sorrow and cannot find the boat that …
மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான் தன் பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் என் பொரு கயற் கண்ணினை துஞ்சா இன் அடிசிலொடு பால்-அமுது ஊட்டி எடுத்த என் கோலக் கிளியை உன்னொடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகு அளந்தான் வரக் கூவாய் (5)
He stays in Villiputhur where the swans that walk softly play. My fish-like eyes do not close to sleep because they w…
எத் திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய முத்து அன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான் கொத்து அலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளும் இளங் குயிலே என் தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறு இலேனே (6)
Rishikesan, worshiped by the gods in all the directions, made me unhappy with love for him and the beauty of the whit…
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப் புணர்வது ஓர் ஆசையினால் என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் அம் குயிலே உனக்கு என்ன மறைந்து உறைவு? ஆழியும் சங்கும் ஒண் தண்டும் தங்கிய கையவனை வரக் கூவில் நீ சாலத் தருமம் பெறுதி (7)
He rests on the surging milky ocean. My breasts have grown out and are happy because they want to embrace the lord, b…
சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தம் உடையன் நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம் நானும் அவனும் அறிதும் தேம் கனி மாம் பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்றியாகில் அவனை நான் செய்வன காணே (8)
The clever one who is loved by all, shoots arrows from his bow with his strong hands. He and I know the promises that…
பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பது ஓர் பாசத்து அகப்பட்டிருந்தேன் பொங்கு ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயி லே குறிக்கொண்டு இது நீ கேள் சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல் இங்கு உள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும் (9)
I have fallen in love with Sridharan who has the color of a green parrot. O cuckoo bird living in a grove that swarms…
அன்று உலகம் அளந்தானை உகந்து அடிமைக்கண் அவன் வலி செய்ய தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன் என்றும் இக் காவில் இருந்திருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் (10)
I fell in love with him who measured the world and became his devotee, but he only makes me sad because I love him an…
விண் உற நீண்டு அடி தாவிய மைந்தனை வேற்கண் மடந்தை விரும்பிக் கண்ணுற என் கடல்-வண்ணனைக் கூவு கருங்குயிலே என்ற மாற்றம் பண் உறு நான்மறையோர் புதுவைமன்னன் பட்டர்பிரான் கோதை சொன்ன நண் உறு வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே (11) ------------ திருமணக் கனவை உரைத்தல்
The Paṭṭarpirān Kodai, chief of Puduvai where Vediyar recite with music the four Vedas composed ten pāsurams about ho…
வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (1)
O friend, I had a dream. People decorated every place with festoons and put out golden pots with coconuts to welcome …
நாளை வதுவை-மணம் என்று நாள் இட்டு பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ் கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் (2)
O friend, I had a dream. My relatives decided the day for my wedding. They decorated a beautiful pandal with kamugu t…
இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம் வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து மந்திரக் கோடி உடுத்தி மண-மாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (3)
O friend, I had a dream. Indra and the other gods came together, asked for me to be his bride and made all the arrang…
நால்-திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி பூப் புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக் காப்பு-நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (4)
O friend, I had a dream. The Brahmin brought divine water from different directions and sprinkled it all over. They s…
கதிர்-ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச் சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் (5)
O friend, I had a dream. Dancing women carried shining lights and kalasams and went in front of him and welcomed him.…
மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான் (6)
O friend, I had a dream. The drums were beaten, the lined conches were blown and my bridegroom, Nambi Madhusūdanan, c…
வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால் பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து காய் சின மா களிறு அன்னான் என் கைப்பற்றி தீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான் (7)
Skilled Vediyars recited the Vedas, and chanted mantras. They made a likeness of the sun with green naṇal grass. He i…
இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான் நம்மை உடையவன் நாராயணன் நம்பி செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் (8)
O friend, I had a dream. He is the refuge for this birth and the fourteen future births. He, our king Narayaṇan Nambi…
வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்துப் பொரிமுகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (9)
O friend, I had a dream. My brothers with shining faces and bows came and, standing before us, kindled the fire and m…
குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர் அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல் மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (10)
O friend, I had a dream. Adorned with kumkum and smeared with cool sandal paste, I went with him on an elephant in pr…
ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல் தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர் வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே (11) ----------- வலம்புரிக்குக் கிடைத்த பேறு
The chief of Villipputhur Kodai, praised by the family of Veyars, composed a garland of ten Tamil pāsurams that descr…
கருப்பூரம் நாறுமோ? கமலப் பூ நாறுமோ? திருப் பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ? மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி-வெண்சங்கே (1)
O white conch, born in the ocean, tell me—I ask you anxiously. He puts you in his mouth to make the sound of victory.…
கடலிற் பிறந்து கருதாது பஞ்சசனன் உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தலத் திடரிற் குடியேறி தீய அசுரர் நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற் சங்கே (2)
O beautiful conch born in the ocean, you entered the body of the Asuran Panchajanya and now you rest in his hand, mak…
தட வரையின் மீதே சரற்கால சந்திரன் இடை உவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும் வட மதுரையார்-மன்னன் வாசுதேவன் கையில் குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெருஞ் சங்கே (3)
You are a wonderful conch! Like the full moon that rises in the autumn from behind the large mountain, you stay in th…
சந்திர-மண்டலம் போல் தாமோதரன் கையில் அந்தரம் ஒன்று இன்றி ஏறி அவன் செவியில் மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே (4)
O beautiful large valampuri conch, you are like the moon even though you are not in the sky. As you stay in the hand …
உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண் மன் ஆகி நின்ற மதுசூதன் வாயமுதம் பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன்னியமே (5)
O Panchajanya! Others were born along with you in the ocean, but they do not receive the respect that you do. You dri…
போய்த் தீர்த்தம் ஆடாதே நின்ற புணர் மருதம் சாய்த்து ஈர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடிகொண்டு சேய்த் தீர்த்தமாய் நின்ற செங்கண் மால்தன்னுடைய வாய்த் தீர்த்தம் பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே (6)
O Valampuri conch, you have not gone to the Ganges or on other pilgrimages to bathe, yet you rest in the hands of lov…
செங்கமல நாள்-மலர்மேல் தேன் நுகரும் அன்னம் போல் செங்கண் கருமேனி வாசுதேவனுடைய அங்கைத் தலம் ஏறி அன்ன-வசஞ் செய்யும் சங்கு-அரையா உன் செல்வம் சால அழகியதே (7)
O king of conches, like a swan that stays on a fresh red lotus flower and drinks honey, you are held in the beautiful…
உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாயமுதம் கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார் பண் பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே (8)
O Panchajanya, your food is the nectar that springs from the mouth of him who measured the world and you sleep in the…
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப மது வாயிற் கொண்டாற்போல் மாதவன் தன் வாயமுதம் பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்கால் சிதையாரோ உன்னோடு? செல்வப் பெருஞ்சங்கே (9)
O fortunate conch who drink nectar from the mouth of Madhavan as if you were drinking honey, won’t his sixteen thousa…
பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும் வாய்ந்த பெருஞ் சுற்றம் ஆக்கிய வண்புதுவை ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும் ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே (10) ------------ மேகவிடு தூது
Paṭṭarpirān Kodai, famed in rich Puduvai, composed ten Tamil pāsurams describing Padmanābhan with the Panchajanya con…
விண் நீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள் தெண் நீர் பாய் வேங்கடத்து என் திருமாலும் போந்தானே? கண்ணீர்கள் முலைக்குவட்டிற் துளி சோரச் சோர்வேனைப் பெண் நீர்மை ஈடழிக்கும் இது தமக்கு ஓர் பெருமையே? (1)
O clouds, you look like a blue blanket covering the sky. Thirumāl, of Venkaṭam hill where clear water flows has not c…
மா முத்தநிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச் சாமத்தின் நிறங்கொண்ட தாளாளன் வார்த்தை என்னே? காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்டு இடைக் கங்குல் ஏமத்து ஓர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே? (2)
O dark clouds pouring your rain like rich pearls, do you have any message from the god of Venkaṭam, the generous one …
ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம் எளிமையால் இட்டு என்னை ஈடழியப் போயினவால் குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே? (3)
O clouds, you are generous and give rain to the earth. My shining beauty, bangles, mind and sleep have all gone, taki…
மின் ஆகத்து எழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத் தன் ஆகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு என் ஆகத்து இளங்கொங்கை விரும்பித் தாம் நாள்தோறும் பொன் ஆகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்புமினே (4)
O shining clouds with lightning, he is the lord of Thiruvenkaṭam with the goddess Lakshmi on his handsome chest. Can …
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் வேங்கடத்துத் தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டு ஏறிப் பொழிவீர்காள் ஊன் கொண்ட வள்-உகிரால் இரணியனை உடல் இடந்தான் தான் கொண்ட சரி-வளைகள் தருமாகிற் சாற்றுமினே (5)
O dark clouds, rising in the sky and spreading everywhere, you pour rain in Thiruvenkaṭam and make the flowers bloom …
சலங் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை நிலங் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர்காள் உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை நலங் கொண்ட நாரணற்கு என் நடலை-நோய் செப்புமினே (6)
O cool clouds, you take water from the ocean, rise to the sky and pour rain everywhere in Thiruvenkaṭam of Thirumāl w…
சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள் வேங்கடத்துச் செங்கண் மால் சேவடிக் கீழ் அடி-வீழ்ச்சி விண்ணப்பம் கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒருநாள் தங்குமேல் என் ஆவி தங்கும் என்று உரையீரே (7)
O cool clouds floating on the hills of Thiruvenkaṭam of the lovely-eyed Thirumāl who churned the milky ocean filled w…
கார் காலத்து எழுகின்ற கார்முகில்காள் வேங்கடத்துப் போர் காலத்து எழுந்தருளிப் பொருதவனார் பேர் சொல்லி நீர் காலத்து எருக்கின் அம் பழ இலை போல் வீழ்வேனை வார் காலத்து ஒருநாள் தம் வாசகம் தந்தருளாரே (8)
O clouds that rise in the rainy season in the Thiruvenkaṭam hills, I fall down like the old leaves of the erukkam pla…
மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் பாம்பு-அணையான் வார்த்தை என்னே கதி என்றும் தான் ஆவான் கருதாது ஓர் பெண்-கொடியை வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே? (9)
O huge clouds rising like rutting elephants, you think Thiruvenkaṭam is your place and live there. What does he, rest…
நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய் மேகத்தை வேங்கடக்கோன் விடு தூதில் விண்ணப்பம் போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதை தமிழ் ஆகத்து வைத்து உரைப்பார் அவர் அடியார் ஆகுவரே (10) --------------- திருமாலிருஞ்சோலைப் பிரானை வழிபடல்
Vishṇuchithan Kodai, the chief of flourishing Puduvai, composed ten Tamil pāsurams about how a girl with a beautiful …
சிந்துரச் செம்பொடிப் போல் திருமாலிருஞ்சோலை எங்கும் இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத்தோளுடையான் சுழலையினின்று உய்துங் கொலோ? (1)
O velvet mites colored like red sinduram powder, and flying everywhere in the groves of Thirumālirunjolai, I am caugh…
போர்க்களிறு பொரும் மாலிருஞ்சோலை அம் பூம்புறவில் தார்க்கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற கார்க்கொள் பிடாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன் ஆர்க்கு இடுகோ? தோழீ அவன் தார் செய்த பூசலையே (2)
O friend, the mullai flowers on the vines in the forest filled with blossoms laugh at me in Thirumālirunjolai where e…
கருவிளை ஒண்மலர்காள் காயா மலர்காள் திருமால் உரு-ஒளி காட்டுகின்றீர் எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர் திரு விளையாடு திண் தோள் திருமாலிருஞ்சோலை நம்பி வரிவளை இற் புகுந்து வந்திபற்றும் வழக்கு உளதே? (3)
O beautiful karuvilai flowers! Kāyām flowers! You have the color of the lord Tell me how I can survive. Is it right t…
பைம்பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கருவிளைகாள் வம்பக் களங்கனிகாள் வண்ணப் பூவை நறுமலர்காள் ஐம் பெரும் பாதகர்காள் அணி மாலிருஞ்சோலை நின்ற எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே? (4)
O cuckoo birds in the flourishing groves! Peacocks! Beautiful karuvilai blossoms! Fresh kala fruits! Colorful fragran…
துங்க மலர்ப் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற செங்கண் கருமுகிலின் திருவுருப் போல் மலர்மேல் தொங்கிய வண்டினங்காள் தொகு பூஞ்சுனைகாள் சுனையிற் தங்கு செந்தாமரைகாள் எனக்கு ஓர் சரண் சாற்றுமினே (5)
O swarm of bees, you have the divine color of the dark cloud-colored lord with beautiful eyes who stays in Thirumālir…
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன் நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ? (6)
I made a hundred pots of butter for Nambi of Thirumālirunjolai surrounded with fragrant groves. I told him I will fil…
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் தென்றல் மணம் கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்றபிரான் அடியேன் மனத்தே வந்து நேர்படிலே (7)
If the dear lord of Thirumālirunjolai where a fragrant breeze blows enters my heart and stays there, I will make a hu…
காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ? சோலைமலைப் பெருமான் துவாராபதி எம்பெருமான் ஆலின் இலைப் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே (8)
A flock of black sparrows wakes up in the morning, welcomes Thirumāl and sings the raga maruḷ. Is it true that they s…
கோங்கு அலரும் பொழில் மாலிருஞ்சோலையிற் கொன்றைகள்மேல் தூங்கு பொன் மாலைகளோடு உடனாய் நின்று தூங்குகின்றேன் பூங்கொள் திருமுகத்து மடுத்து ஊதிய சங்கு ஒலியும் சார்ங்க வில் நாண்-ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ? (9)
I seem to hang down like the golden flowers that sway on the branches of kondrai trees in Thirumālirunjolai surrounde…
சந்தொடு காரகிலும் சுமந்து தடங்கள் பொருது வந்திழியும் சிலம்பாறு உடை மாலிருஞ்சோலை நின்ற சுந்தரனைச் சுரும்பு ஆர் குழற் கோதை தொகுத்து உரைத்த செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே (10) --------------- காதல்-நோய் செய்த பரிசு
Vishṇuchithan the chief of Villiputhur with a garland swarming with bees composed ten lovely Tamil pāsurams praising …
கார்க்கோடற் பூக்காள் கார்க்கடல் வண்ணன் என்மேல் உம்மைப் போர்க் கோலம் செய்து போர விடுத்தவன் எங்கு உற்றான்? ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது? அணி துழாய்த் தார்க்கு ஓடும் நெஞ்சந் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ (1)
O flowers that bloom in the monsoon, did the dark ocean-colored god send you as warriors to fight with me? Where did …
மேல்-தோன்றிப் பூக்காள் மேல்-உலகங்களின் மீது போய் மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலங்கையில் மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக்கொள்கிற்றிரே? (2)
O thondri flowers blooming high, do not grow to the sky and burn me like the brightness of the discus that is in the …
கோவை மணாட்டி நீ உன் கொழுங்கனி கொண்டு எம்மை ஆவி தொலைவியேல் வாயழகர்தம்மை அஞ்சுதும் பாவியேன் தோன்றிப் பாம்பு-அணையார்க்கும் தம் பாம்புபோல் நாவும் இரண்டு உள ஆய்த்து நாணிலியேனுக்கே (3)
O kovai vine, you are like my mother! Don’t take my life, ripening with your sweet round fruits that remind me of his…
முல்லைப் பிராட்டி நீ உன் முறுவல்கள் கொண்டு எம்மை அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம் கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய் அன்றே? (4)
O mullai vine, you are like a young girl. Don’t hurt me with your smile as you shine like the discus of the lord. I g…
பாடும் குயில்காள் ஈது என்ன பாடல்? நல் வேங்கட- நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின் ஆடும் கருளக் கொடி உடையார் வந்து அருள்செய்து கூடுவராயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே (5)
O cuckoo birds, you sing beautifully! What is this song you are singing? Come here and sing only if the lord of the b…
கண மா மயில்காள் கண்ணபிரான் திருக்கோலம் போன்று அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு அடி வீழ்கின்றேன் பணம் ஆடு அரவணைப் பற்பல காலமும் பள்ளிகொள் மணவாளர் நம்மை வைத்த பரிசு இது காண்மினே (6)
O flock of peacocks, you have the beautiful color of the dear lord Kaṇṇan and move gracefully as if you had studied l…
நடம் ஆடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை நடம்-ஆட்டம் காணப் பாவியேன் நான் ஓர் முதல் இலேன் குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ-மிறை செய்து எம்மை உடை மாடு கொண்டான் உங்களுக்கு இனி ஒன்று போதுமே? (7)
O lovely peacocks, you dance beautifully spreading your wings. I am pitiful and have no interest in seeing you dance.…
மழையே மழையே மண் புறம் பூசி உள்ளாய் நின்று மெழுகு ஊற்றினாற் போல் ஊற்று நல் வேங்கடத்து உள் நின்ற அழகப்பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்படத் தழுவ நின்று என்னைத் ததைத்துக்கொண்டு ஊற்றவும் வல்லையே? (8)
O cloud, O cloud! The thought that he has not entered my heart makes me suffer. Like wax covered with sand that melts…
கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்கு-உறுத்து உடலுள் புகுந்துநின்ற ஊறல் அறுத்தவற்கு என்னையும் உடலுள் புகுந்துநின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என் நடலைகள் எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே? (9)
O milky ocean, O milky ocean! Māyavan churned you and took the nectar from you. He entered my heart, made me suffer a…
நல்ல என் தோழி நாகணைமிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வதென்? வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே (10) திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல்
O dear friend, our highest lord is divine but we are small. He is wonderful and he rests on Adisesha, his snake bed. …
தாம் உகக்கும் தம் கையிற் சங்கமே போலாவோ யாம் உகக்கும் எம் கையில் சங்கமும்? ஏந்திழையீர் தீ முகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர் ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே (1)
O friends adorned with precious jewels, aren’t the bangles that I wear on my hands as precious as the conch that he c…
எழில் உடைய அம்மனைமீர் என் அரங்கத்து இன்னமுதர் குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே (2)
O lovely women, the sweet nectar-like lord of Srirangam with his beautiful hair, mouth and eyes and a lovely lotus on…
பொங்கு ஓதம் சூழ்ந்த புவனியும் விண்-உலகும் அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார் எம் கோல்-வளையால் இடர் தீர்வர் ஆகாதே? (3)
With his scepter my dear lord of Srirangam rules the world surrounded by roaring oceans and the world of the sky, kee…
மச்சு அணி மாட மதில் அரங்கர் வாமனனார் பச்சைப் பசுந் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற பிச்சைக் குறையாகி என்னுடைய பெய்வளை மேல் இச்சை உடையரேல் இத் தெருவே போதாரே? (4)
Vamanan, the divine god of Srirangam filled with beautiful palaces and walls, went to Mahābali in ancient times as a …
பொல்லாக் குறள் உருவாய்ப் பொற் கையில் நீர் ஏற்று எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான் நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே (5)
The lord who rests on the snake bed in Srirangam where good people live went to Mahābali as the cheating Vāmanan and …
கைப் பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரி நீர் செய்ப் புரள ஓடும் திருவரங்கச் செல்வனார் எப் பொருட்கும் நின்று ஆர்க்கும் எய்தாது நான் மறையின் சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப்பொருளும் கொண்டாரே (6)
He is the beloved god of Srirangam where the Kaveri river flows carrying riches from everywhere and nourishing the fi…
உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடறுத்துப் பெண் ஆக்கை யாப்புண்டு தாம் உற்ற பேது எல்லாம் திண்ணார் மதில் சூழ் திருவரங்கச் செல்வனார் எண்ணாதே தம்முடைய நன்மைகளே எண்ணுவரே (7)
When he had the form of Rāma, the divine god of Srirangam surrounded by strong walls suffered as he thought of his wi…
பாசி தூர்த்தக் கிடந்த பார்-மகட்குப் பண்டு ஒரு நாள் மாசு உடம்பில் சீர் வாரா மானம் இலாப் பன்றி ஆம் தேசு உடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே (8)
He, the bright lord, took the form of an unclean pig in ancient times, split open the ground and rescued the earth go…
கண்ணாலம் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான் திண் ஆர்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த பெண்ணாளன் பேணும் ஊர் பேரும் அரங்கமே (9)
When Sisupalan wanted to marry Rukmini, after all the arrangements had made, Kannan fought him, took Rukmini with him…
செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர் தம்மை உகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல் தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே? (10) கண்ணன் இருக்கும் இடத்துக் கொண்டுசெல்க எனல்
Vishṇuchithan composed pāsurams describing the love between Kaṇṇan and the cowherd women. They said, “the lord says, …
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்புதன்னை உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்து ஒரு தாய் இல் வளர்ந்த நம்பி மற் பொருந்தாமற் களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின். (1)
She tells her relatives, “You don’t understand that I love only Mādhavan whom no one can know. If you say you will ma…
நாணி இனி ஓர் கருமம் இல்லை நால்-அயலாரும் அறிந்தொழிந்தார் பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க உறுதிராகில் மாணி உருவாய் உலகு அளந்த மாயனைக் காணிற் தலைமறியும் ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின். (2)
She says, “You, my relatives, should not be ashamed that I love him. All the neighbors know about our love. Don’t try…
தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனிவழி போயினாள் என்னும் சொல்லு வந்த பின்னைப் பழி காப்பு அரிது மாயவன் வந்து உருக் காட்டுகின்றான் கொந்தளம் ஆக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வான் ஓர் மகனைப் பெற்ற நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்-இருட்கண் என்னை உய்த்திடுமின் (3)
She says to her relatives, “When people know that I went with Kaṇṇan and they blame you saying, ‘She left her father,…
அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான் அவன்முகத்து அன்றி விழியேன் என்று செங்கச்சுக் கொண்டு கண் ஆடை ஆர்த்துச் சிறு மானிடவரைக் காணில் நாணும் கொங்கைத்தலம் இவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின். (4)
Her breasts say, “We will not look at the face of others, only of him with a discus in his beautiful hand.” They are …
ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது அம்மனைமீர் துழதிப் படாதே கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைகண்ட யோகம் தடவத் தீரும் நீர்க் கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின். (5)
She says, “O mothers, no one understand how much the love that I have for him hurts me. It will go away only if the d…
கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப் பூவும் ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே என்று வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும் போது ஈது என்று பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்தவிலோசனத்து உய்த்திடுமின் (6)
She says, “The cool clouds of the rainy season, the karuviḷai flowers, the kāyām blossoms, and the lotus flowers all …
வண்ணம்-திரிவும் மனம்-குழைவும் மானம் இலாமையும் வாய்வெளுப்பும் உண்ண லுறாமையும் உள்மெலிவும் ஓத நீர் வண்ணன் என்பான் ஒருவன் தண்ணந் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்டத் தணியும் பிலம்பன் தன்னைப் பண் அழியப் பலதேவன் வென்ற பாண்டிவடத்து என்னை உய்த்திடுமின் (7)
She says, “I am growing pallid, my mind is confused and I have no sense of shame. My mouth is becoming pale, I don’t …
கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான் பற்றி உரலிடை யாப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ? கற்றன பேசி வசவு உணாதே காலிகள் உய்ய மழை தடுத்துக் கொற்றக் குடையாக ஏந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின் (8)
She says, “He grazed the calves, living among the families of cowherds in the forest, and he was tied to the mortar b…
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் ஊட்டக் கொடாது செறுப்பனாகில் உலகு-அளந்தான் என்று உயரக் கூவு1ம் நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடுமின். (9)
She says, “My parrot in its cage always says, ‘Govinda, Govinda!’ If I am angry at it and don’t feed it, it calls him…
மன்னு மதுரை தொடக்கமாக வண் துவராபதிதன் அளவும் தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டித் தாழ்குழலாள் துணிந்த துணிவை பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே. (10) கண்ணன் உகந்த பொருள்கொண்டு காதல்நோய் தணிமின் எனல்
Vishṇuchithan Kodai, the chief of Puduvai filled with shining golden palaces composed a garland of beautiful pāsurams…
கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனைப் புண்ணிற் புளிப் பெய்தாற் போலப் புறம் நின்று அழகு பேசாதே பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையிற் பீதக வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே (1)
She says, “I love the dark Kaṇṇan and I long to see him and suffer. O mothers, your gossip is like pouring tamarind j…
பால்-ஆலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை வேலால் துன்னம் பெய்தாற் போல் வேண்டிற்று எல்லாம் பேசாதே கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க் குடந்தைக் கிடந்த குடம்-ஆடி நீலார் தண்ணந் துழாய் கொண்டு என் நெறி மென் குழல்மேல் சூட்டிரே (2)
She says, “I fell into the love-net of the highest lord who rested on the soft banyan leaf as a baby. Don’t gossip us…
கஞ்சைக் காய்ந்த கருவில்லி கடைக்கண் என்னும் சிறைக்கோலால் நெஞ்சு ஊடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வு அணிந்த வனமாலை வஞ்சியாதே தருமாகில் மார்விற் கொணர்ந்து புரட்டீரே (3)
கஞ்சைக் காய்ந்த கருவில்லி கடைக்கண் என்னும் சிறைக்கோலால் நெஞ்சு ஊடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை அஞ்சேல் என்னா…
ஆரே உலகத்து ஆற்றுவார்? ஆயர்-பாடி கவர்ந்து உண்ணும் காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயில் ஊறிய நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே (4)
She says, “He is as sweet as nectar, the dark bull who stole butter and milk from the cowherd women has made me weak …
அழிலும் தொழிலும் உருக் காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் தழுவி முழுசிப் புகுந்து என்னைச் சுற்றிச் சுழன்று போகானால் தழையின் பொழில்வாய் நிரைப் பின்னே நெடுமால் ஊதி வருகின்ற குழலின் தொளைவாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே (5)
She says, “Even when people weep, and even if they worship him, he does not come before them and say, “Don’t be afrai…
நடை ஒன்று இல்லா உலகத்து நந்தகோபன் மகன் என்னும் கொடிய கடிய திருமாலால் குளப்புக்கூறு கொளப்பட்டு புடையும் பெயரகில்லேன் நான் போழ்க்கன் மிதித்த அடிப்பாட்டில் பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா உயிர் என் உடம்பையே (6)
She says, “This world is unfair. Thirumāl, the son of Nandagopan, makes me suffer as if I were crushed beneath the fe…
வெற்றிக் கருளக் கொடியான்தன் மீமீது ஆடா உலகத்து வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே ஆக வளர்த்தாளே குற்றம் அற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு அற்ற குற்றம் அவை தீர அணைய அமுக்கிக் கட்டீரே (7)
She says, " Carrying a victorious eagle flag, he rules the world and all obey him. Yashoda raised him but she only ma…
உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால் கொள்ளும் பயன் ஒன்று இல்லாத கொங்கைதன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலைத் தீர்வேனே (8)
She says, “I melt in my heart for him who carried Govardhana mountain and I suffer. He doesn’t even care whether I’m …
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கு ஓர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம்தான் என்? செம்மை உடைய திருமார்வில் சேர்த்தானேனும் ஒரு ஞான்று மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே (9)
She says, “If I cannot serve Govindan in this birth, making my breasts happy, what is the use of doing tapas in the f…
அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி-விளக்கை வில்லி புதுவைநகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை உற்று மிக விரும்பும் சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே (10) விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை
The chief of Villiputhur, Vishṇuchithan Kodai, composed pāsurams about how a woman with eyebrows more lovely than bow…
பட்டி மேய்ந்து ஓர் காரேறு பலதேவற்கு ஓர் கீழ்க்-கன்றாய் இட்டீறு இட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே? இட்டமான பசுக்களை இனிது மறித்து நீர் ஊட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே (1)
“Playing like a young calf, he makes the cows crazy as he goes behind his brother Baladevan. Did you see that dark bu…
அனுங்க என்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே? கணங்களோடு மின் மேகம் கலந்தாற் போல வனமாலை மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே (2)
“Did you see Govardhanan stealing the butter, eating it and smelling of ghee? He left me and went to the cowherd vill…
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே? மேலால் பரந்த வெயில்காப்பான் வினதை-சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே (3)
“Did you see Nambi Thirumāl when he was born as a child? He bewitched all the young girls, telling unbelievable lies.…
கார்த் தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்தி என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன்தன்னைக் கண்டீரே? போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல் வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே (4)
“He attracted me with his dark beautiful lotus eyes, tied me to him with his love, pulled me and played with me. Did …
மாதவன் என் மணியினை வலையிற் பிழைத்த பன்றி போல் ஏதும் ஒன்றும் கொளத் தாரா ஈசன்தன்னைக் கண்டீரே? பீதக-ஆடை உடை தாழ பெருங் கார்மேகக் கன்றே போல் வீதி ஆர வருவானை விருந்தாவனத்தே கண்டோமே (5)
“Did you see Madhavan, my lord, my jewel? He is like a pig that has been caught in a net and escaped. Has no one seen…
தருமம் அறியாக் குறும்பனைத் தன் கைச் சார்ங்கம் அதுவே போல் புருவ வட்டம் அழகிய பொருத்தம் இலியைக் கண்டீரே? உருவு கரிதாய் முகம் சேய்தாய் உதயப் பருப்பதத்தின்மேல் விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே (6)
“Did you see the naughty one, his beautiful eyebrows bending like his Sarngam bow? He doesn’t have any compassion for…
பொருத்தம் உடைய நம்பியைப் புறம்போல் உள்ளும் கரியானைக் கருத்தைப் பிழைத்து நின்ற அக் கரு மா முகிலைக் கண்டீரே? அருத்தித் தாரா-கணங்களால் ஆரப் பெருகு வானம் போல் விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே (7)
“Did you see him, beautiful and dark as a cloud? Is his mind as dark as his body? He makes many promises to girls but…
வெளிய சங்கு ஒன்று உடையானைப் பீதக-ஆடை உடையானை அளி நன்கு உடைய திருமாலை ஆழியானைக் கண்டீரே? களி வண்டு எங்கும் கலந்தாற்போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல் மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே (8)
“Did you see generous Thirumāl carrying a white conch and a discus and adorned with golden clothes?” “We saw him as h…
நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்தன்னைக் கண்டீரே? காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டையாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே (9)
“He created Nānmuhan on a beautiful lotus growing from his navel so that Nānmuhan could create the whole world. Did y…
பருந்தாள்-களிற்றுக்கு அருள்செய்த பரமன்தன்னைப் பாரின் மேல் விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல் மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள் பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ்ப் பிரியாது என்றும் இருப்பாரே (10) --------------- 4. குலசேகராழ்வார் அருளிச்செய்த பெருமாள் திருமொழி (647-751) அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழ்வேன் எனல்
Vishṇuchithan Kodai composed pāsurams about how the people saw the highest lord in Brindavan who gave his grace to Ga…