96 passages · ~21 min read
Tap any verse to open it — original, meaning & audio.
Nārāyaṇan created Nānmuhan and Nānmuhan created the five-faced Sankaran. I composed andadi poems praising him. Learn …
தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர் ஆரும் அறியார் அவன் பெருமை ஓரும் பொருள் முடிவும் இத்தனையே எத் தவம் செய்தார்க்கும் அருள் முடிவது ஆழியான்பால் (2)
People say if one searches for a god, they will find only one god whose greatness no one knows. The search and the me…
பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும் ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் ஞாலத்து ஒரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில் அரு பொருளை யான் அறிந்த ஆறு? (3)
Who knows the god resting on the milky ocean, staying in Srirangam or sleeping on a banian leaf? Who knows the one un…
ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும் கூறு உடையன் என்பதுவும் கொள்கைத்தே? வேறு ஒருவர் இல்லாமை நின்றானை எம்மானை எப் பொருட்கும் சொல்லானைச் சொன்னேன் தொகுத்து (4)
Every one knows the Ganges flows in Shiva’s matted hair, and that he shares half of his body with his wife Girija, bu…
தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம் வகிர்த்த வளை உகிர் தோள் மாலே உகத்தில் ஒருநான்று நீ உயர்த்தி உள்வாங்கி நீயே அரு நான்கும் ஆனாய் அறி (5)
O dear mighty-armed Thirumāl, you split open the chest of Hiraṇyan who had received many boons. Never defeated by any…
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர் சிறியார் சிவப்பட்டார் செப்பில் வெறியாய மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் ஈனவரே ஆதலால் இன்று (6)
The Jains are ignorant. The Buddhists are tired of trying to spread their religion. The devotees of Shiva are small p…
இன்று ஆக நாளையே ஆக இனிச் சிறிது நின்று ஆக நின் அருள் என்பாலதே நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை அன்றி இலை (7)
Whether it is today or tomorrow or even a little time after, your grace is always with me. I do not see refuge except…
இலை துணை மற்று என் நெஞ்சே! ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேரா குலை கொண்ட ஈர் ஐந்தலையான் இலங்கையை ஈடு அழித்த கூர் அம்பன் அல்லால் குறை (8)
O heart, there is no help for me except the lovely-eyed Thirumāl who conquered Shiva and took his bow and cut off the…
குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி கறைகொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு (9)
Let us worship the beautiful feet of the lord of the world who heard the request of Shiva, poured water from the pot …
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங் கார் அரவு அணையான் பொன் மேனி யாம் காண வல்லமே அல்லமே? மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து (10)
Even Nānmuhan on a lotus and Shiva with long matted hair were not able to see the head or foot of the lord with a gol…
வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் சூழ்த்த துழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால் தன்னை வழா வண் கை கூப்பி மதித்து (11)
Fold your faultless hands and worship our ancient Thirumāl, adorned with a tall shining crown and thulasi garlands. L…
மதித்தாய் போய் நான்கில் மதியார் போய் வீழ மதித்தாய் மதி கோள் விடுத்தாய் மதித்தாய் மடுக் கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி விடற்கு இரண்டும் போய் இரண்டின் வீடு (12)
You made the sages who do not worship you have many births, you released the moon from his curse, and you freed the e…
வீடு ஆக்கும் பெற்றி அறியாது மெய் வருத்திக் கூடு ஆக்கி நின்று உண்டு கொன்று உழல்வீர் வீடு ஆக்கும் மெய்ப்பொருள் தான் வேத முதற்பொருள் தான் விண்ணவர்க்கு நற்பொருள் தான் நாராயணன (13)
O sages, you do tapas, make your bodies weak as if they were small empty cages and you suffer. You do not know the pa…
நாராயணன் என்னை ஆளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால் தன் பேரான பேசப் பெறாத பிணச் சமயர் பேசக் கேட்டு ஆசைப்பட்டு ஆழ்வார் பலர (14)
Nārāyanan, my ruler, saves me from entering hell. If people listen to the teachings of other religions like Jainism t…
பல தேவர் ஏத்த படி கடந்தான் பாதம் மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த வலர் ஆகில் மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் நீர்க்கண்டன் கண்ட நிலை (15)
If you place flowers on his feet, and praise and worship the highest lord of the world worshiped by many gods, you wi…
நிலைமன்னும் என் நெஞ்சம் அந்நான்று தேவர் தலைமன்னர் தாமே மாற்றாக பல மன்னர் போர் மாள வெம் கதிரோன்மாய பொழில் மறைய தேர் ஆழியால் மறைத்தாரால் (16)
My heart always worships the god of the gods who hid the bright hot sun with his discus in the Bharatha war and destr…
ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு மேலை யுகத்து உரைத்தான் மெய்த் தவத்தோன் ஞாலம் அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல்மேல் வளர்ந்தானைத் தான் வணங்குமாறு (17)
Shiva the lord of true tapas taught the path of dharma under the shadow of banyan tree to the four Nāyanmārs in the l…
மாறு ஆய தானவனை வள் உகிரால் மார்வு இரண்டு கூறாகக் கீறிய கோளரியை வேறாக ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்று அவரைச் சாத்தியிருப்பார் தவம் (18)
If a devotee does a tapas worshiping him who came in the form of a man-lion and split open the chest of the Asuran Hi…
தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம் செய்த ஆழியாய் அன்றே? உவந்து எம்மைக் காப்பாய் நீ காப்பதனை ஆவாய் நீ வைகுந்தம் ஈப்பாயும் எவ் உயிர்க்கும் ந (19)
You with a discus destroyed the boons that Hiranyan and other Asurans received doing tapas to Nanmuhan, and you are p…
நீயே உலகும் எல்லாம் நின் அருளே நிற்பனவும் நீயே தவத் தேவ தேவனும் நீயே எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து இரு சுடரும் ஆய இவை (20)
You are the world. and everything in the world abides through your grace. You are the god of gods that one achieves b…
இவையா பில வாய் திறந்து எரி கான்ற இவையா எரிவட்டக் கண்கள் இவையா எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான் அரி பொங்கிக் காட்டும் அழகு (21)
When you took the form of a man-lion, did your cave-like mouth open and shoot out fire? Did your round eyes become re…
அழகியான் தானே அரி உருவன் தானே பழகியான் தாளே பணிமின் குழவியாய்த் தான் ஏழ் உலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே மீன் ஆய் உயிர் அளிக்கும் வித்து (22)
He was born as a child, he took the form of a fish, and he has the nature of all the seven worlds. When he, the seed …
வித்தும் இடவேண்டும் கொல்லோ விடை அடர்த்த பத்தி உழவன் பழம் புனத்து? மொய்த்து எழுந்த கார் மேகம் அன்ன கரு மால் திருமேனி நீர் வானம் காட்டும் நிகழ்ந்து (23)
He fought and killed the seven bulls to marry Nappinnai. Does one need to sow seeds to reach moksha in the good land …
நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும் இகழ்ந்தாய் இருவரையும் வீய புகழ்ந்தாய் சினப் போர்ச் சுவேதனைச் சேனாபதியாய் மனப் போர் முடிக்கும் வகை (24)
You have the colors of milk, gold, green and a dark cloud and you fought with the two wrestlers and destroyed them. Y…
வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும் வகையால் வருவது ஒன்று உண்டே? வகையால் வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும் வயிர வழக்கு ஒழித்தாய் மற்று (25)
It was not right for you to come as a dwarf, cheat Mahābali, take his lands, and destroy the pride of the king who to…
மற்றுத் தொழுவார் ஒருவரையும் யான் இன்மை கற்றைச் சடையான் கரி கண்டாய் எற்றைக்கும் கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா! யான் உன்னைக் கண்டுகொளகிற்குமாறு (26)
You are the ocean colored Thirumāl. Shiva with thick matted hair is my witness that I do not want to worship anyone b…
மால் தான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும் பேறாகக் கொள்வனோ பேதைகாள்! நீறாடி தான் காண மாட்டாத தார் அகலச் சேவடியை யான் காண வல்லேற்கு இது? (27)
O ignorant ones, our Thirumāl has entered my innocent heart— how can I worship any other god? I tell you that I am ab…
இது இலங்கை ஈடு அழியக் கட்டிய சேது இது விலங்கு வாலியை வீழ்த்தது இது இலங்கை தான் ஒடுங்க வில் நுடங்க தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு (28)
See, this is the Sethu bridge that he built to destroy the pride of Lanka. See his power that killed Vāli, the monkey…
உகப்பு உருவன் தானே ஒளி உருவன் தானே மகப்பு உருவன் தானே மதிக்கில் மிகப் புருவம் ஒன்றுக்கு ஒன்று ஓசனையான் வீழ ஒரு கணையால் அன்றிக்கொண்டு எய்தான் அவன் (29)
Our lord shot his one arrow and killed Kumbakarnan with long eyebrows. He will be happy if you praise him whose form …
அவன் என்னை ஆளி அரங்கத்து அரங்கில் அவன் என்னை எய்தாமல் காப்பான் அவன் என்னது உள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே வெள்ளத்து அரவு அணையின்மேல்? (30)
The god of Srirangam who rests on the flood on the snake bed Adisesha stands, sit and reclines in my heart always and…
மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம் தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் வானோர் பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும் கரு மாயம் பேசில் கதை (31)
O, devils, Nāraṇan removed the curse that Nānmuhan gave Shiva and if you do not worship him, the god of the gods in t…
கதைப் பொருள் தான் கண்ணன் திருவயிற்றின் உள்ள உதைப்பளவு போதுபோக்கு இன்றி வதைப்பொருள் தான் வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ ஆய்ந்த குணத்தான் அடி (32)
Even though it is a story that when Thirumāl swallowed the world all the creatures survived because he kept them in h…
அடிச் சகடம் சாடி அரவு ஆட்டி யானை பிடித்து ஒசித்து பேய் முலை நஞ்சு உண்டு வடிப் பவள வாய்ப் பின்னை தோளிக்கா வல் ஏற்று எருத்து இறுத்து கோ பின்னும் ஆனான் குறிப்பு (33)
The purpose of the lord who came to the earth and grazed the cows was to kill Sakaṭāsuran, to dance on the heads of K…
குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த குறிப்பு எனக்கு நன்மை பயக்க வெறுப்பனோ வேங்கடத்து மேயானை மெய் வினை நோய் எய்தாமல் தான் கடத்தும் தன்மையான் தாள்? (34)
My aim is to praise the god of Thirukkoṭṭiyur. and receive good life from him. Will I ever hate the lord of Thiruveṇk…
தாளால் உலகம் அளந்த அசைவேகொல்? வாளா கிடந்தருளும் வாய்திறவான் நீள் ஓதம் வந்து அலைக்கும் மா மயிலை மா அல்லிக் கேணியான் ஐந்தலை வாய் நாகத்து அணை (35)
The divine one of Thiruvallikkeni, as beautiful as a peacock, who rests on the five heads of the snake Ādisesha where…
நாகத்து அணைக் குடந்தை வெஃகா திரு எவ்வுள் நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து அணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால் அணைப்பார் கருத்தன் ஆவான் (36)
The ancient Neḍumāl lovingly rests on the snake bed in Kudanthai, in Thiruvekka, in Thiruyevvul, in Srirangam and on …
வான் உலவு தீவளி மா கடல் மா பொருப்பு தான் உலவு வெம் கதிரும் தண் மதியும் மேல் நிலவு கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும் அண்டம் திருமால் அகைப்பு (37)
The wind, the sky, the wide oceans, the tall mountains, the hot sun that moves across the sky, the cool moon, the clo…
அகைப்பு இல் மனிசரை ஆறு சமயம் புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் உகைக்குமேல் எத் தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் அப்போது ஒழியும் அழைப்பு (38)
The ocean-colored lord created six religions for the people by his grace. If he becomes angry he will destroy at once…
அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண இழைப்பன் திருக்கூடல் கூட மழைப் பேர் அருவி மணி வரன்றி வந்து இழிய யானை வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு (39)
She says, “I call the god of Thiruvenkatam hills where the large waterfalls descends like rain, bringing bright jewel…
வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடு ஆக்கி நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் கற்கின்ற நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டிருந்தேன் காண் (40)
I praise Thiruvenkaṭam, the hill that is my home and where I stay. See, I always think of the lord of this hill. I fe…
காணல் உறுகின்றேன் கல் அருவி முத்து உதிர ஓண விழவில் ஒலி அதிர பேணி வரு வேங்கடவா என் உள்ளம் புகுந்தாய் திருவேங்கடம் அதனைச் சென்று (41)
O lord, you stay in my heart and in Thiruvenkaṭam hills where the waterfall that descends scatters pearls and roars a…
சென்று வணங்குமினோ சேண் உயர் வேங்கடத்தை நின்று வினை கெடுக்கும் நீர்மையால் என்றும் கடிக் கமல நான்முகனும் கண்மூன்றத்தானும் அடிக் கமலம் இட்டு ஏத்தும் அங்கு (42)
Thiruvenkaṭam hill has the power to destroy his devotees’ karma. Go and worship that tall hill that rises to the sky …
மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை கங்குல் புகுந்தார்கள் காப்பு அணிவான் திங்கள் சடை ஏற வைத்தானும் தாமரைமேலானும் குடை ஏற தாம் குவித்துக் கொண்டு (43)
Shiva wearing the crescent moon in his matted hair and Nanmuhan on a lotus enter in the night the northern Thiruveṇka…
கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய் தண்ட அரக்கன் தலை தாளால் பண்டு எண்ணிப் போம் குமரன் நிற்கும் பொழில் வேங்கடமலைக்கே போம் குமரருள்ளீர்! புரிந்து (44)
In ancient times when he was young, with his toes he counted the ten heads of Rāvaṇa who had a mighty army. O young o…
புரிந்து மலர் இட்டுப் புண்டரிகப் பாதம் பரிந்து படுகாடு நிற்ப தெரிந்து எங்கும் தான் ஓங்கி நிற்கின்றான் தண் அருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு (45)
O, devotees, place flowers with love, on the lotus feet of the lord of Thiruvenkaṭam hills where a cool waterfall des…
வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு என்று எப்பொழுதும் கை நீட்டும் யானையை எப்பாடும் வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே நாடு வளைத்து ஆடுதுமேல் நன்று (46)
In Thiruvenkaṭam hills elephants raise their trunks to the sky thinking they will touch the moon and make it as a bri…
நன்மணி வண்ணன் ஊர் ஆளியும் கோளரியும் பொன் மணியும் முத்தமும் பூ மரமும் பன்மணி நீ ரோடு பொருது உருளும் கானமும் வானரமும் வேடும் உடை வேங்கடம் (47)
The Venkatam hills filled with aaḷis, lions, gold, jewels, pearls, blooming trees, waterfalls that are mixed with man…
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால் வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் வேங்கடமே தானவரை வீழத் தன் ஆழிப் படை தொட்டு வானவரைக் காப்பான் மலை (48)
Thiruvenkaṭam that removes the sufferings of karma is the hill where the gods in the sky come and worship Thirumāl an…
மலை ஆமைமேல் வைத்து வாசுகியைச் சுற்றி தலை ஆமை தான் ஒரு கை பற்றி அலையாமல் பீறக் கடைந்த பெருமான் திரு நாமம் கூறுவதே யாவர்க்கும் கூற்று (49)
To praise the divine name of the wonderful god, who churned the milky ocean using Mandara mountain as a churning stic…
கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாராவகை அறிந்தேன் ஆற்றங் கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு (50)
Māyan is in my heart and Yama will not come to me, cruel karma will not come to me and fire will not destroy me. Kaṇṇ…
எனக்கு ஆவார் ஆர் ஒருவரே? எம் பெருமான் தனக்கு ஆவான் தானே மற்று அல்லால் புனக் காயா வண்ணனே உன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை? (51)
O my dear lord colored like a kāyām flower, there is no one to match you except yourself, my only refuge. Now that my…
விலைக்கு ஆட்படுவர் விசாதி ஏற்று உண்பர் தலைக்கு ஆட்பலி திரிவர் தக்கோர் முலைக்கால் விடம் உண்ட வேந்தனையே வேறா ஏத்தாதார் கடம் உண்டார் கல்லாதவர் (52)
Those of other religions who wear garlands of skeletons will sell themselves for a price and beg for food. If they do…
கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யான் இலேன் பொல்லாத தேவரை தேவர் அல்லாரை திரு இல்லாத் தேவரைத் தேறேல்மின் தேவு (53)
I will not worship any other god except Rama, the destroyer of Lanka, the land of the ignorant Raksasas. Do not accep…
தேவராய் நிற்கும் அத் தேவும் அத் தேவரில் மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் யாவராய் நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார் கற்கின்றது எல்லாம் கடை (54)
All that a person has learned is a waste if he does not worship Neḍumāl the only god, the most ancient of the all the…
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும் இடைநின்ற இன்பத்தர் ஆவர் புடைநின்ற நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை யார் ஓத வல்லார் அவர்? (55)
If people stand at the doors of some gods worshiping their feet, they will be happy only at that time. O Neḍumāl colo…
அவர் இவர் என்று இல்லை அனங்கவேள் தாதைக்கு எவரும் எதிர் இல்லை கண்டீர் உவரிக் கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு உடன் நின்று தோற்றான் ஒருங்கு (56)
Someone may say this one is god or that one is god, but there is no one equal to the father of Kama, the beautiful pr…
ஒருங்கு இருந்த நல் வினையும் தீவினையும் ஆவான் பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் மருங்கு இருந்த வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என் நெஞ்சம் ஆனவர் தாம் அல்லாதது என்? (57)
The lord himself is good karma and bad karma. If I wanted to describe him who killed the Asurans when they came as Ku…
என் நெஞ்சம் மேயான் இருள் நீக்கி எம்பிரான் மன் அஞ்ச முன் ஒருநாள் மண் அளந்தான் என் நெஞ்சம் மேயானை இல்லா விடை ஏற்றான் வெவ்வினை தீர்த்து ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு (58)
He measured the world in ancient times as the king Mahābali saw his large form in terror. He is in my heart and has r…
அன்பு ஆவாய் ஆர் அமுதம் ஆவாய் அடியேனுக்கு இன்பு ஆவாய் எல்லாமும் நீ ஆவாய் பொன் பாவை கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் (59)
I am your devotee and you are my love and sweet nectar joy for me and everything else. You, the beloved of the goddes…
ஆள் பார்த்து உழிதருவாய் கண்டுகொள் என்றும் நின் தாள்பார்த்து உழிதருவேன் தன்மையை கேட்பார்க்கு அரும் பொருளாய் நின்ற அரங்கனே உன்னை விரும்புவதே விள்ளேன் மனம் (60)
Devotees know that you will give moksha to those who deserve it and they approach you and worship your feet. You are …
மனக் கேதம் சாரா மதுசூதன் தன்னைத் தனக்கே தான் தஞ்சமாக் கொள்ளில் எனக்கே தான் இன்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணை ஓட்டினான் சென்று ஒன்றி நின்ற திரு (61)
The lord, the ruler of the world fought with the seven bulls to marry Nappinnai. He is my treasure and I am with him.…
திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார் கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் திரு இருந்த மார்பில் சிரீதரன் தன் வண்டு உலவு தண் துழாய்த் தார் தன்னைச் சூடித் தரித்து (62)
The devotees of Thirumāl wear thulasi garlands swarming with bees as their god does. They will tell the other ignoran…
தரித்திருந்தேன் ஆகவே தாராகணப் போர் விரித்து உரைத்த வெம் நாகத்து உன்னைத் தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது (63)
I have spent all my time reading about you, hearing about you, writing about you understanding you, praising you, wor…
போதான இட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக் காதானை ஆதிப் பெருமானை நாதானை நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும் சொல்லானை சொல்லுவதே சூது (64)
Real praise is to praise him only. Place flowers at his feet and worship the ancient god, the lord of the gods. The m…
சூது ஆவது என் நெஞ்சத்து எண்ணினேன் சொல் மாலை மாது ஆய மாலவனை மாதவனை யாதானும் வல்லவா சிந்தித்திருப்பேற்கு வைகுந்தத்து இல்லையோ சொல்லீர் இடம்? (65)
I praise Thirumāl, Madhavan, the mother of all with my poetry and in my heart. Is there not a place in Vaikundam for …
இடம் ஆவது என் நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு பட நாகணை நெடிய மாற்கு திடமாக வையேன் மதிசூடி தன்னோடு அயனை நான் வையேன் ஆட் செய்யேன் வலம் (66)
My heart is the place of Neḍumāl resting on a snake bed. I will not think that Shiva wearing the crescent moon or Nān…
வலம் ஆக மாட்டாமை தான் ஆக வைகல் குலம் ஆக குற்றம் தான் ஆக நலம் ஆக நாரணனை நா பதியை ஞானப் பெருமானை சீரணனை ஏத்தும் திறம் (67)
Even if I cannot circle the temple of god, or am not from a good family, if I praise the lord of the people Nāraṇan, …
திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம் மறந்தும் புரம் தொழா மாந்தர் இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு (68)
Yama calls his messengers and tells them, “Listen to what I say. There are people who do not worship the divine feet …
செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம் புவிக்கும் புவி அதுவே கண்டீர் கவிக்கு நிறை பொருளாய் நின்றானை நேர்பட்டேன் பார்க்கில் மறைப் பொருளும் அத்தனையேதான் (69)
Sweet to ears is the name of the lovely-eyed god whose name is the refuge for all the people of the world. I worship …
தான் ஒருவன் ஆகி தரணி இடந்து எடுத்து ஏன் ஒருவனாய் எயிற்றில் தாங்கியதும் யான் ஒருவன் இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப்படுத்த சேய் (70)
It is not just today that I have come to know the strength of the young lord, who measured the world and the sky and …
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலர் ஆம் மெய்ஞ் ஞானம் இல் (71)
The Māyan, the king of Dwaraka who was born as a cowherd is far away and is near, small and large. Those who do not k…
இல்லறம் அல்லேல் துறவறம் இல் என்னும் சொல் அறம் அல்லனவும் சொல் அல்ல நல்லறம் ஆவனவும் நால் வேத மாத் தவமும் நாரணனே ஆவது ஈது அன்று என்பார் ஆர்? (72)
The proverb may say, “If one has not had a family life, he cannot be a sage,” but that is not dharma. Good dharma, th…
ஆரே அறிவார் அனைத்து உலகும் உண்டு உமிழ்ந்த பேர் ஆழியான் தன் பெருமையை? கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி (73)
Who can understand the power of the god with a discus in his hand who swallowed the earth and spat it out? Dark-necke…
பதிப் பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி மதித்து அடைந்த வாள் அரவம் தன்னை மதித்து அவன் தன் வல் ஆகத்து ஏற்றிய மா மேனி மாயவனை அல்லாது ஒன்று ஏத்தாது என் நா (74)
My tongue will not praise anyone but the dark cloud-colored Māyavan who gave his grace to the shining snake Sumugan w…
நாக் கொண்டு மானிடம் பாடேன் நலம் ஆக தீக் கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் பூக் கொண்டு வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச் செல்வனார் சேவடிமேல் பாட்டு (75)
I will not praise any human with my tongue, I will praise only the divine feet of the god of Vaikuṇṭam whom fire-bear…
பாட்டும் முறையும் படு கதையும் பல் பொருளும் ஈட்டிய தீயும் இரு விசும்பும் கேட்ட மனுவும் சுருதி மறை நான்கும் மாயன் தன மாயையில் பட்ட தற்பு (76)
Songs, literature, stories, the Puranas, fire, the large sky, the laws of Manu that all the world follows, and the fo…
தற்பு என்னைத் தான் அறியானேலும் தடங் கடலைக் கல் கொண்டு தூர்த்த கடல் வண்ணன் என் கொண்ட வெவ்வினையும் நீங்க விலங்கா மனம் வைத்தான் எவ் வினையும் மாயுமால் கண்டு (77)
When the ocean-colored god who built a bridge with stones over the wide ocean wished to remove all my bad karma even …
கண்டு வணங்கினார்க்கு என்னாம்கொல் காமன் உடல் கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த வண்டு அலம்பும் தார் அலங்கல் நீள் முடியான் தன் பெயரே கேட்டிருந்து அங்கு ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து? (78)
When Shiva who burned Madan’s body was doing tapas and Uma told him the name of Thirumāl, the god adorned with garlan…
ஆய்ந்துகொண்டு ஆதிப் பெருமானை அன்பினால் வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் ஏய்ந்த தம் மெய் குந்தம் ஆக விரும்புவரே தாமும் தம் வைகுந்தம் காண்பார் விரைந்து (79)
If devotees searching for Thirumāl understand the ancient lord with love in their minds and think of their bodies as …
விரைந்து அடைமின் மேல் ஒரு நாள் வெள்ளம் பரக்க கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் பரந்து உலகம் பாடின ஆடின கேட்டு படு நரகம் வீடின வாசற் கதவு (80)
When a terrible flood came in ancient times Kaṇṇan protected the world and gave it his grace. If you listen to the so…
கதவு மனம் என்றும் காணலாம் என்றும் குதையும் வினை ஆவி தீர்ந்தேன் விதை ஆக நல் தமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய் கற்ற மொழி ஆகிக் கலந்து (81)
I thought that if I could open the door of my mind and see you there, all my bad karma would go away. You planted the…
கலந்தான் என் உள்ளத்து காம வேள் தாதை நலம் தானும் ஈது ஒப்பது உண்டே? அலர்ந்தலர்கள் இட்டு ஏத்தும் ஈசனும் நான்முகனும் என்றிவர்கள் விட்டு ஏத்த மாட்டாத வேந்து (82)
The father of the beautiful Kama has entered my heart and lives there. Is there anything better than this could happe…
வேந்தர் ஆய் விண்ணவர் ஆய் விண் ஆகி தண்ணளி ஆய் மாந்தர் ஆய் மாது ஆய் மற்று எல்லாம் ஆய் சார்ந்தவர்க்குத் தன் ஆற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும் பின்னால் தான் செய்யும் பிதிர் (83)
The dark-colored god with a discus in his hand, is the king of the gods in the sky, he is the sky, compassion, the pe…
பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு எதிர்வன்;அவன் எனக்கு நேரான் அதிரும் கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும் தொழக் காதல் பூண்டேன் தொழில் (84)
I do not want any wonderful thing to happen to me. I will not be a devotee of Shiva— he will not be the right god for…
தொழில் எனக்குத் தொல்லை மால் தன் நாமம் ஏத்த பொழுது எனக்கு மற்று அதுவே போதும் கழி சினத்த வல்லாளன் வானரக் கோன் வாலி மதன் அழித்த வில்லாளன் நெஞ்சத்து உளன் (85)
If I have any other duties, they are merely vexations. All I need is the time when I praise the names of Thirumāl, th…
உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் தன் ஒப்பான் தான் ஆய் உளன் காண் தமியேற்கும் என் ஒப்பார்க்கு ஈசன் இமை (86)
See, my good heart, he is in you, the Uthaman is always in you, and if devotees think of him, he is in their hearts. …
இமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட சமய விருந்து உண்டு ஆர் காப்பார் சமயங்கள் கண்டான் அவை காப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு உண்டான் உலகோடு உயிர்? (87)
The lord ate the puja food served for Indra in a pile as large as the majestic Himalayas, he protected the cowherds f…
உயிர் கொண்டு உடல் ஒழிய ஓதும்போது ஓடி அயர்வு என்ற தீர்ப்பான் பேர் பாடி செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப் பந்தனையார் வாழ்வேல் பழுது (88)
When the messengers of Yama come and take someone’s life our god is the one who will come and save him. If devotees p…
பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம் வழுவாவகை நினைந்து வைகல் தொழுவாரைக் கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து விண் திறந்து வீற்றிருப்பார் மிக்கு (89)
I know for certain that to worship the divine feet of the god resting on the milky ocean is not a mistake. If devotee…
வீற்றிருந்து விண் ஆள வேண்டுவார் வேங்கடத்தான் பால் திருந்த வைத்தாரே பல் மலர்கள் மேல் திருந்தி வாழ்வார் வரும் மதி பார்த்து அன்பினராய் மற்று அவற்கே தாழ்வாய் இருப்பார் தமர் (90)
Those who want to go to heaven will worship Thirumāl with flowers and live a good life, loving and serving others. Th…
தமர் ஆவார் யாவர்க்கும் தாமரைமேலாற்கும் அமரர்க்கும் ஆடு அரவு ஆர்த்தாற்கும் அமரர்கள் தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன் தாள் தாமரை அடைவோம் என்று (91)
I will sprinkle flowers on the lotus feet of all devotees, and the feet of the gods in the sky, of Nānmuhan who stays…
என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து நின்றும் இருந்தும் நெடுமாலை என்றும் திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் கரு இருந்த நாள் முதலாக் காப்பு (92)
என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து நின்றும் இருந்தும் நெடுமாலை என்றும் திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் க…
காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன் ஆப்பு அங்கு ஒழியவும் பல் உயிர்க்கும் ஆக்கை கொடுத்து அளித்த கோனே குணப்பரனே உன்னை விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம் (93)
I never forget that he protects me, I just say, “You are my Kaṇṇan” and stay quiet. You, the king, give bodies and yo…
மெய் தெளிந்தார் என் செய்யார்? வேறு ஆனார் நீறு ஆக கை தெளிந்து காட்டிக் களப்படுத்து பை தெளிந்த பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு வேம்பும் கறி ஆகும் என்று (94)
O god resting on the snake bed, you destroyed the enemies of Pandavas and helped them on the battlefield. If you want…
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை ஆன்றேன் அமரர்க்கு அமராமை ஆன்றேன் கடன் நாடும் மண் நாடும் கைவிட்டு மேலை இடம் நாடு காண இனி (95)
I, your slave, was born in a low family and suffered. I do not want to worship gods other than you. I want to reach h…
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம் பெருமான் உன்னை இனி அறிந்தேன் காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நல் கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் 96 -------------- 17. நம்மாழ்வார் - திருவிருத்தம் (2478 – 2577) 2478 பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான் எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா! மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே 1
I know now the lord of Shiva and Naanmuhan. I know you, my dear god. I know you are the reason for all. I know all I …